உப்பலா ஆறு

இந்திய ஆறு

உப்பலா ஆறு (Uppala River) கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பாய்கிறது. [1] 50 கிலோமீட்டர் நீளம் கொண்ட உப்பலா ஆறு கேரளாவின் 26 ஆவது நீளமான நதியாகும். [1] [2] கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் உயரத்தில் கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் வீரகம்பா மலையிலிருந்து உப்பலா ஆறு உருவாகிறது. முதன்மையாக மேற்கு திசையில் பாய்ந்து கேரளாவிலுள்ள காசர்கோடு நகருக்கு வடக்கே 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உப்பலா நகருக்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. உப்பலா நதி 250 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது. இதில் 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கர்நாடக மாநிலத்தில் உள்ளது. [1]

பாதை

தொகு

உப்பலா ஆறு கர்நாடகா மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் வீர்கம்பா மலைகளின் பகுதியான காலஞ்சிமலை காப்புக்காடுகளில் இருந்து உருவாகிறது. ஆரம்பத்தில் இது கர்நாடகாவின் மலைப்பாங்கான நகரங்களான விட்லா, பள்ளிகே மற்றும் புதோட்டு வழியாக பாய்கிறது. [3] பின்னர் இந்த ஆறு கேரளாவுக்குள் நுழைந்து ஐதாகுமேர், மியாபடவு, மீஞ்சா, பேக்கூர், முளிஞ்சா, மச்சிபைல், உப்பலா, பொய்யா, மஞ்சேசுவர், பங்க்ரமஞ்சேசுவர் ஆகிய நகரங்கள் வழியாகப் பாய்ந்து உப்பலா அருகே ஓசபெட்டு கிராமத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. [4] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Distribution of Freshwater Fishes in the Uppala River, Kasargod District, Kerala". The Journal of the Bombay Natural History Society 96: 334–335. 1999. https://www.biodiversitylibrary.org/page/48583013#page/352/mode/1up. 
  2. "District Census Handbook - Kasaragod District 2011" (PDF). Directorate of Census Operations-Kerala. 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
  3. Nair, Adoor K. K. Ramachandran (1986). Kerala State Gazetteer (in ஆங்கிலம்). State Editor, Kerala Gazetteers.
  4. The Journal of the Bombay Natural History Society (in ஆங்கிலம்). Bombay Natural History Society. 1999.
  5. Jayappa, K. S. (2009-01-31). Coastal Environments: Problems and Perspectives (in ஆங்கிலம்). I. K. International Pvt Ltd.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பலா_ஆறு&oldid=3852444" இலிருந்து மீள்விக்கப்பட்டது