உப்புநீர் குளம்
உப்புநீா் குளம் (Brine pool) சில சமயங்களில் நீருக்கடியில் ஏரி, ஆழ்கடல் அல்லது உப்புநீர் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது. இது கடற்பரப்பில் உள்ள பள்ளத்தில் சேகரிக்கப்படும் உப்புநீரின் அளவு ஆகும். குளங்கள் அடர்த்தியான நீர்நிலைகளைக் கொண்டிருக்கும. மேலும், அவை சுற்றியுள்ள கடலை விட மூன்று முதல் எட்டு மடங்கு அதிக உவர்ப்புத்தன்மையைக் கொண்டுள்ளன. உப்புநீர் குளங்கள் பொதுவாக துருவ கடல் பனிக்கு கீழே மற்றும் ஆழமான கடலில் காணப்படுகின்றன. கடல் பனிக்குக் கீழே உள்ளவை உப்பை நிராகரிப்பு எனப்படும் செயல்முறை மூலம் உருவாகின்றன.[1] இந்த உப்பு மீத்தேனின் அதிக செறிவைக் கொண்டதாக இருக்கும். இது அக்குளத்தின் அருகில் வாழும் நுண்ணுயிாிகளுக்கு சக்தியை அளிக்கும். இதிலுள்ள உயிரினங்கள் வாழ உகந்ததல்லாத இடங்களிலும் வாழக்கூடியதாக இருக்கும். இந்த உப்புக்குளங்கள் அண்டாா்டிக் அடுக்கில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த குளங்களின் உப்பு அண்டாா்டிக் அடுக்கில் பனிக்கட்டி உருவாகும் போது வெளியேறியதாகும்.[2] ஆழ்கடல் மற்றும் அண்டாா்டிக்கில் உள்ள உப்பு நீா் குளங்கள் பல கடல் வாழ் உயிாினங்களுக்கு நஞ்சாகும்.
உப்புநீரில் பெரும்பாலும் ஐதரசன் சல்பைடு மற்றும் மீத்தேனின் அதிக செறிவுகள் உள்ளன. இது குளத்திற்கு அருகில் வாழும் வேதியியல் உயிரினங்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. இந்த உயிரினங்கள் பெரும்பாலும் உச்சவிரும்பிகள் மற்றும் ஒன்றிய வாழ்வவினங்கள் ஆகும்.[3][4]
பண்புகள்
தொகுஇந்த உப்புநீா் குளங்கள் கடல் மட்டத்திலுள்ள ஏாிகள் எனக் கூறப்படுகின்றன. ஏனென்றால் இந்த அடா்த்தியான உப்பு அதனைச் சுற்றி இருக்கும் கடல் நீருடன் சுலபமாகக் கலக்காது. இந்த அதிக உப்புத்தன்மை உப்புக்குளங்களின் அடா்த்தியை அதிகமாக்கும். இந்த உப்புத்தன்மை ஒரு மாறுபட்ட பரப்பையும் இந்த குளத்திற்கு ஒரு கரையையும் உருவாக்குகின்றன. நீா்மூழ்கிக் கப்பல்கள் உப்புநீா்குளத்தின் மேல் செல்லும் பொழுது குளத்தின் அதிக அடா்த்தி தன்மை காரணமாக அதனால் குளத்திற்குள் செல்ல இயலாது. நீா்மூழ்கி கப்பல்களின் இயக்கம் உப்புநீா்குளத்தில் அலைகளை உருவாக்குகின்றன. அவ்வலைகள் அக்குளத்தை சுற்றியுள்ள கரைகளை அடித்துச் சென்றுவிடும்.
வாழ்வியல் ஆதாரம்
தொகுஆழ்கடல் உப்பு நீா்குளங்கள் அடிக்கடி அடா்ந்த குளிா் நீரோட்டத்துடன் கலந்துவிடுகின்றன. இந்த நீரோட்டத்திலுள்ள பாக்டீாியாக்கள் மூலம் மீத்தேன் வாயு வெளிப்படுகிறது. இந்த பாக்டீாியாக்கள் இக்குளத்தின் ஓரங்களில் வாழும் சிப்பிகளுடன் இணைந்திருக்கும். இங்குள்ள உயிாினங்கள் உலகிலுள்ள மற்ற உயிாினங்களைப்போல் இல்லாமல் இங்குள்ள வேதிப்பொருட்களின் சக்தியைச் சாா்ந்து இருக்கும். இவ்வுயிாினங்கள் சூாிய சக்தியை குறைவாகவே சாா்ந்திருக்கின்றன.
மேலும் படிக்க
தொகு- Boetius, A.; Joye, S. (2009-06-18). "Thriving in Salt". Science. 324 (5934): 1523–1525. doi:10.1126/science.1172979. ISSN 0036-8075.
- Eder, W., Jahnke, L. L., Schmidt, M., & Huber, R. (2001). Microbial Diversity of the Brine-Seawater Interface of the Kebrit Deep, Red Sea, Studied via 16S rRNA Gene Sequences and Cultivation Methods. Applied and Environmental Microbiology, 67(7), 3077–3085. doi:10.1128/aem.67.7.3077-3085.2001
- Guan, Y., Hikmawan, T., Antunes, A., Ngugi, D., & Stingl, U. (2015). Diversity of methanogens and sulfate-reducing bacteria in the interfaces of five deep-sea anoxic brines of the Red Sea. Research in Microbiology, 166(9), 688–699. doi:10.1016/j.resmic.2015.07.002
- Hartmann, M., Scholten, J., Stoffers, P., & Wehner, F. (1998). Hydrographic structure of brine-filled deeps in the Red Sea—new results from the Shaban, Kebrit, Atlantis II, and Discovery Deep. Marine Geology, 144(4), 311–330. doi:10.1016/s0025-3227(97)00055-8
- Patowary, K. (2018, November 7). Brine Pools: The Underwater Lakes of Despair. Retrieved October 28, 2020, from https://www.amusingplanet.com/2018/11/brine-pools-lakes-under-ocean.html
- US Department of Commerce, N. (n.d.). Gulf of Mexico 2002. Retrieved October 28, 2020, from https://oceanexplorer.noaa.gov/explorations/02mexico/welcome.html
- Wankel, S. D., Joye, S. B., Samarkin, V. A., Shah, S. R., Friederich, G., Melas-Kyriazi, J., & Girguis, P. R. (2010). New constraints on methane fluxes and rates of anaerobic methane oxidation in a Gulf of Mexico brine pool via in situ mass spectrometry. Deep Sea Research Part II: Topical Studies in Oceanography, 57(21-23), 2022–2029. doi:10.1016/j.dsr2.2010.05.009
மேற்கோள்கள்
தொகு- ↑ Kvitek, Rikk (February 1998). "Black pools of death: Hypoxic, brine-filled ice gouge depressions become lethal traps for benthic organisms in a shallow Arctic embayment". Marine Ecology Progress Series 162: 1–10. doi:10.3354/meps162001. Bibcode: 1998MEPS..162....1K. https://www.researchgate.net/publication/250216583.
- ↑ "NOAA Ocean Explorer: Gulf of Mexico 2002". oceanexplorer.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
- ↑ Extremophile life near brine pools பரணிடப்பட்டது நவம்பர் 10, 2006 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Eder, W; Jahnke, LL; Schmidt, M; Huber, R (July 2001). "Microbial diversity of the brine-seawater interface of the Kebrit Deep, Red Sea, studied via 16S rRNA gene sequences and cultivation methods". Appl. Environ. Microbiol. 67 (7): 3077–85. doi:10.1128/AEM.67.7.3077-3085.2001. பப்மெட்:11425725. Bibcode: 2001ApEnM..67.3077E.