உப்புப் படுகை

உப்பு படுகை என்பது இயற்கையாக தரைமுழுக்க உப்பு மற்று பிற கனிமங்களால் ஆன ஒரு நிலப்பரப்பாகும். இந்த நிலப்பரப்பு கதிரொளியில் பளபளக்கும். பொதுவாக இந்த உப்புப் படுகைகள் பாலைவனங்களில் இயற்கையாக காணப்படுகின்றன. மேலும் இவை இயற்கையாக ஏற்படுவது ஆகும்.

பொலிவியாவின் சாலர் டி உயினி உப்புப் படுகை
சாலர் டி அரிசாரோ உப்பு படுகை (அர்கெந்தீனா)

கண்ணோட்டம்

தொகு

உப்பு படுகை என்பது பாலைவனத்தில் உள்ள ஒரு நீர்நிலை அதாவது குளம் அல்லது ஏரி போன்றவற்றில் பொழிவால் தேங்கிய நீர் ஆவியாக்கி அதனால் உருவாகுவது ஆகும். குறிப்பாக மழை போன்றவற்றால் தேங்கும் நீர் நிலத்தில் வாய்க்கால் வழியாக வெளியேற முடியா நில அமைப்பு கொண்ட இப்பகுதியில் தேங்கும் இந்த நீர் ஆவியாகி அதனால் அதில் கரைந்துள்ள உப்பு போன்ற கனிமங்கள் தரையின் மேற்பரப்பில் படிகின்றன இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கனிமங்கள் (பொதுவாக உப்புக்கள்) தரையின் மேற்பரப்பில் குவிகின்றன. இந்த கனிமங்கள் சூரிய கதிர்கள் பட்டு பிரதிபலிக்கின்றன இவை வெள்ளை நிலப்பரப்பாக தோன்றும்.

உப்புப் படுகைகள் ஆபத்து நிறைந்தவை. புதைசேற்றை மூடியபடி உள்ள உப்பு மேலோடுகள் உள்ள சில இடங்களில் ஒரு சரக்குந்தையே மூழ்கடிக்க இயலும். கிழக்கு சகாரா பாலைவனத்தில் உள்ள குவாட்ரா டிப்ரசியன் உப்பு படுகை இரண்டாம் உலகப்போரின்போது படைகளை அழிக்கும் பொறியாக பயன்படுத்தப்பட்டது.[1]

 
ஐக்கிய அமெரிக்காவின் சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் உள்ள உப்பு படுகை

உலகின் சில உப்புப் படுகைகள்

தொகு

பொலிவியாவில் உள்ள சாலர் டி உயினிதான் உலகின் மிகப்பெரிய உப்பு படுகையாகும். இதில் உலகின் 50%-70% அளவுள்ள இலித்தியம் காணப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவின் யூட்டாவில் உள்ள வறண்ட பகுதியில் உள்ள புகழ்பெற்ற பான்னிவில்லி என்று அழைக்கப்படும் உப்பு படுகை.

நமீபியாவில் உள்ள இதோசா தேசிய பூங்காவில் உள்ள இதோசா உப்பு படுகை இன்னொரு புகழ்வாய்ந்த ஒரு உப்புப் படுகை.

டெவில் 'கோல்ஃப் கோர்ஸ் உள்ள சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் அமெரிக்காவின் பெரிய உப்புப் படுகை உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Jorgensen, C. (2003). Rommel's panzers: Rommel and the Panzer forces of the Blitzkrieg, 1940–1942 (pp. 78–79). St. Paul, MN: MBI.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புப்_படுகை&oldid=3956909" இலிருந்து மீள்விக்கப்பட்டது