உப்புப் புயல்
உப்புப் புயல் (salt storm) என்பது தரைத்தளத்தின் சற்று மேற்பரப்பில் காற்றில் கலந்த உப்பு மூட்டம் ஆகும். இது ஒரு பெரிய பகுதியை வட்டமிட்டு சுழலக்கூடியது. இதன் விளைவாக உப்பு படுக்கை மற்றும் உப்பு தட்டு உருவாகின்றன. பொதுவாக உப்புப் புயல் தரைக்கு மேல்பகுதியில் அதிக உப்பு படிமானங்கள் உள்ள பரப்பில் உருவாகின்றன.
பெரிய உப்பு ஏரி (Great Salt Lake) அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் அமைந்த உப்பு ஏரி ஆகும். இது பூமியின் மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய உப்பு ஏரியாகும். பெரிய உப்பு ஏரியிலிருந்து ஆறுகள் செல்லவில்லை; நீராவியாகுதலால் மட்டும் இந்த ஏரியிலிருந்து நீர் செல்கிறது. உலகில் இவ்வகை ஏரிகளில் இந்த ஏரி நான்காவது மிகப்பெரியது ஆகும். பொலீவியாவின் சலர் டி உயுனி பகுதியில் உப்புப் புயல் அடிக்கடி ஏற்படுகின்றது.
விளைவுகள்
தொகுஇதன் அருகில் வசிக்கும் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. இதன் மூலம் உருவாகும் நச்சு, கடல் அல்லது ஏரி நீரில் கலந்துவிடுகின்றன. இது பூச்சிக் கொல்லியை போன்று நச்சுத் தன்மையுடையது. கடல் நீர் ஆவியடையும் போது இந்த நச்சும் ஆவியாகி மற்ற சத்துகளுடன் இணைந்து படிமங்களாக உருவாகி உப்பு படுக்கை உருவாகின்றது. இது காற்றில் கலக்கும் போது மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, தொண்டை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், போன்றவை ஏற்படுகின்றது.[1] உப்புப் புயல் உருவாகும் போது சுற்றுப்புறத்தைத் தெளிவாகக் காணமுடியாது.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shukman, David (29 June 2004). "Aral catastrophe recorded in DNA". BBC News. http://news.bbc.co.uk/2/hi/science/nature/3846843.stm. பார்த்த நாள்: 4 December 2010.