நஞ்சு

(நச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உயிரியலைப் பொறுத்தவரை, நஞ்சு என்பது, உயிரினங்களுக்கு கெடுதியை அல்லது நலக்குறைவை அல்லது இறப்பைக்கூட ஏற்படுத்தக்கூடிய பொருட்களாகும்.[1] ஓர் உயிரினத்தினால் போதிய அளவில் உள்ளெடுக்கப்படும்போது, மூலக்கூற்று மட்டத்தில் நிகழும் வேதியியல் தாக்கத்தினால் அல்லது வேறு செயற்பாடுகளினால் இவ்வாறான கேடுகள் ஏற்படுகின்றன. நச்சியலின் (toxicology) தந்தை எனப்படுகின்ற பராசெலசு (Paracelsus) என்பார், எல்லாமே நஞ்சுதான் என்றும், நஞ்சு எல்லாவற்றிலும் உள்ளது என்றும் கூறினார். ஒரு பொருளை எவ்வளவு உள்ளெடுக்கிறோம் என்பதில்தான் அது நஞ்சா இல்லையா என்பது தங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சாகும் என்னும் பொது வழக்கு சொல்வதையும் ஏறத்தாழ இதே பொருளைத்தான் உணர்த்துகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் Directive 67/548/EEC குறியீட்டின்படி, நச்சுப்பொருளுக்கான அடையாளம். நீண்ட காலமாக மண்டையோடும், அதன் குறுக்காக வைக்கப்பட்டிருக்கும் எலும்பு களுமே நஞ்சைக் குறிக்கும் வழக்கமான அடையாளம்.

மருத்துவத் துறையிலும், விலங்கியலிலும், உயிரியற் செயற்பாடுகளினால் உருவாகும் நச்சுப்பொருள் (toxin), பாம்புக்கடி போன்ற கடிகளினால் உடலுக்குள் செலுத்தப்படும் நஞ்சு (venom) என்பவை பொதுவான நஞ்சு (poison) என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.

பயன்கள்

தொகு

நச்சுப் பொருட்கள் பூச்சிக்கொல்லிகள் ஆகவும், களைக்கொல்லிகள் ஆகவும் பயன்படுத்தப்படுவதுடன், கட்டிடப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கும் பயன்படுகின்றன. பொதுவாக இத்தகைய பயன்பாடுகளில், மனிதரைப் பாதிக்காத நஞ்சுகளே விரும்பப்படுகின்றன.

மனித வரலாற்றில், கொலை, தற்கொலை, மரண தண்டனை போன்றவற்றுக்கு நஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. ">"The Free Dictionary". Farlex. பார்க்கப்பட்ட நாள் மே 31, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சு&oldid=2741703" இலிருந்து மீள்விக்கப்பட்டது