நச்சியல்
நச்சுயியல் (அ) நச்சியல் என்பது உயிரியல், வேதியியல், மருந்தியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றுடன் ஒன்றோடொன்று தொடர்புடைய ஓர் அறிவியல் துறையாகும், இது உயிரினங்களில் இரசாயன பொருட்களின் பாதகமான விளைவுகளைப் பற்றிய ஆய்வு மற்றும் நச்சுகள் மற்றும் நச்சுத்தன்மையின் விளைவுகளையும், அதன் முறிவைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நடைமுறையையும் உள்ளடக்கியது.[1] நச்சுத்தன்மையில், அதன் அளவு மற்றும் வெளிப்படும் உயிரினத்தில் அதன் விளைவுகளுக்கு இடையிலான உறவு ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நச்சியல் வல்லுனர்களின் பரிந்துரைப்படி, இரசாயன நச்சுத்தன்மை பாதிக்கும் காரணிகளில் அதன் உட்கொள் அளவு, விளைவு வெளிப்பாட்டின் காலம் (இது கடுமையான அல்லது நாள்பட்ட வெளிப்பாடு, இனங்கள், வயது, பாலினம் மற்றும் சுற்றுச்சூழல்) உள்ளிட்ட காரணிகளாகவும் இருக்கலாம். நச்சின் விளைவு, சான்றுகள் அடிப்படையிலான வழிமுறைகளை உள்ளடக்கிய பெரிய விளைவுகளின் ஒரு சிறு பகுதியாகவோ, நச்சுத்தன்மைக்கான தொகுப்பாகவோ இருக்கலாம். சில நச்சுகள் புற்றுநோய் செல்களைக் கொல்லும் மருந்து ஆய்விலும் பயன்படுத்தப்படலாம் என்பதால், நச்சியல் தற்போது புற்றுநோய் ஆராய்ச்சித் துறையில் புற்றுநோய் வேதிச்சிகிச்சையில் பெரும்பங்களிக்கிறது. இதற்கு ஒரு முக்கிய உதாரணம் இரத்தச் சர்க்கரைக் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க பரிசோதிக்கப்பட்ட ரைபோசோம்-செயலிழக்கும் புரதங்கள் ஆகும்.[2]

நச்சியல் என்ற சொல் (நச்சு+இயல்) என்பது நியோ-லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட ஒரு நியோ மரபுச் சேர்மமாகும். இது முதலில் கி. பி.1799 இல் சான்றளிக்கப்பட்டது. டாக்சிக் என்பது நஞ்சைக் குறிக்கும். இதனுடன் இயல் (லோகோஸ்) இணைந்து நச்சியல் என்றழைக்கப்படுகிறது.
வரலாறு
தொகுதாவரங்கள் மற்றும் விலங்குகளின் விஷங்களைப் பற்றிய பொதுவான ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆரம்பகால ஆய்வுக் கட்டுரை, அவற்றின் வகைப்பாடு, அங்கீகாரம் மற்றும் அவற்றின் விளைவுகளின் சிகிச்சை ஆகியவை உட்பட, கல்பஸ்தானா, சுஸ்ருதசமிதாவின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். இது கி. மு. 300க்கு முன்பு இயற்றப்பட்ட சமஸ்கிருத படைப்பாகும். இந்நூலின் கால அளவு கிபி 300 - கிமு நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருக்கலாம்.[3][4] கல்பஸ்தானா பல பிற்கால சமஸ்கிருத மருத்துவப் படைப்புகளில் பெரும்பங்கை வகித்தது. மேலும் அரபு மற்றும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, திபெத் மற்றும் பிந்நாளில் ஐரோப்பாவிலும் உள்ள பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.[5][6]
ஆரம்ப காலத்தில் உரோமானிய பேரரசர் நீரோவின் அரசவையில் இருந்த கிரேக்க மருத்துவரான டயோஸ்கோரைட்ஸ், தாவரங்களை அவற்றின் நச்சு மற்றும் சிகிச்சை விளைவுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார்.[7] 10 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர் இபின் வஹ்ஷியா எழுதிய , விஷங்கள் பற்றிய புத்தகம் நஞ்சு, அதன் விளைவுகள் பற்றிய குறிப்புகளை விவரிக்கிறது.[8] 14 ஆம் நூற்றாண்டின் சமண இளவரசர் மங்கரசாவின் கன்னடக் கவிதை படைப்பான ககேந்திர மணி தர்பனா பல நச்சு தாவரங்களைப் பற்றி விவரிக்கிறது.[9]
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவீன நச்சியலின் தந்தை என அழைக்கப்படும் பாராசெல்சஸ், இவரே முதன் முதலில் நச்சினால் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிடுகிறார்.[10] இவறே அனைத்தும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது நஞ்சாகிறது என்பதை விவரிக்கிறார். அதற்கான குறைந்தபட்ச அளவில் அவைகளின் பக்க விளைவுகள் மிகவும் குறைவு.[11]
1813 ஆம் ஆண்டில் தனது ட்ரேட் டெஸ் பாய்சன்ஸ் என்ற புத்தகத்தில், பொது நச்சியல் என்றும் அழைக்கப்படும் இந்த விஷத்திற்கு முதல் முறையான சிகிச்சையை வழங்கிய மத்தேயு ஆர்ஃபிலா நச்சுயியலின் நவீன தந்தையாகவும் கருதப்படுகிறார்.[12]
1850 ஆம் ஆண்டில் ஜீன் ஸ்டாஸ், மனித திசுக்களில் இருந்து தாவர விடங்களை வெற்றிகரமாக தனிமைப்படுத்திய முதல் நபர் ஆவார். இவரின் ஆராய்ச்சியே, போகார்ம் கொலை வழக்கில் நிகோடின் பயன்பாட்டை ஒரு விஷமாக அடையாளம் கண்டு, பெல்ஜிய தீர்ப்பாயம் ஹிப்போலைட் விசார்ட் டி போகார்ம் தனது மைத்துனரை நிகோடின் பயன்படுத்தி கொன்றதாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்க தேவையான ஆதாரங்களை வழங்கியது.[13]
அடிப்படைக் கோட்பாடுகள்
தொகுநச்சுத்தன்மை மதிப்பீட்டின் குறிக்கோளானது அதன் பாதகமான விளைவுகளை அடையாளம் காண்பதாகும் .[14] பாதகமான விளைவுகள் இரண்டு முக்கிய காரணிகளைப் பொறுத்தது, ஒன்று வெளிப்பாட்டின் வழிகள் (வாய்வழி, உள்ளிழுக்குதல் அல்லது தோல் மற்றும் இரண்டாவது (வெளிப்பாட்டின் காலம் மற்றும் செறிவு). உட்கொள்ளப்பட்ட அளவை ஆராய, பொருட்கள் கடுமையான மற்றும் நாள்பட்ட மாதிரிகள் ஆகிய இரண்டிலும் சோதிக்கப்படுகின்றன.[15] பொதுவாக, ஒரு பொருள் அதிகம் உட்கொள்ளப்பட்டு அதன் விளைவாக புற்றுநோயை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவும், பிற வகையான நச்சுத்தன்மையை ஆராயவும் வெவ்வேறு வகையான சோதனைகளும் நடத்தப்படுகின்றன.[15]
இரசாயன நச்சுத்தன்மையை பாதிக்கும் காரணிகள்
தொகு- அளவு
- பெறப்பட்ட ஒற்றைக்காரணி வெளிப்பாடுகள், தொடர்ச்சியான சிறிய வெளிப்பாடுகள் ஆகிய இரண்டையும் அறிய ஆய்வு செய்யப்படுகின்றன.
- வெளிப்பாட்டின் பாதை
- உட்கொள்ளல், உள்ளிழுத்தல் அல்லது தோலின் மூலம் உட்செலுத்துதல்
- பிற காரணிகள்
- இனங்கள்
- வயது.
- செக்ஸ்
- ஆரோக்கியம்
- சூழல்
- தனிப்பட்ட சிறப்பு பண்புகள்
சான்றுகள் அடிப்படையிலான நச்சியல் துறையானது, நச்சுத்தன்மையில் உள்ள பல்வேறு வகையான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகளை வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும், புறநிலையாகவும் மதிப்பிட முயற்சிக்கிறது. [16] உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலில், வேதிய, உடல் அல்லது உயிரிய காரணிகளின் பாதகமான விளைவுகள் பற்றிய ஆய்வு, அதன் விளைவுகளைத் தடுப்பது மற்றும் மேம்படுத்துவது உட்பட பல்வேறு திட்டக்கூறுகளை உள்ளடக்கியது.[17][18] நஞ்சின் நிலையை மதிப்பிடுவதற்கான அணுகுமுறைகளின் வரம்புகள், வழிமுறைகள் நச்சுயியல் வல்லுனர்களிடம் உள்ள பல்வேறு சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் சான்றுகள் அடிப்படையிலான தரவுகள் நவீன நச்சுயியலின் திறன் அளப்பரியது.[19][20] முடிவெடுப்பதில் வெளிப்படைத்தன்மை, பல்வேறு வகையான சான்றுகளின் தொகுப்பு மற்றும் சார்பு மற்றும் நம்பகத்தன்மை மதிப்பீடு தொடர்பான தகவல்கள் இதில் அடங்கும்.[21][22][23]
மேலும் அறியவேண்டியவை
தொகு- நீர் நச்சியல்
- சூழல் நச்சியல்
- சூழல் நலம்
- நொதி நச்சு விளைவு
- தடய - நச்சியல்
- நஞ்சு வரலாறு
- நானோ-நச்சியல்
- சுற்றுச்சூழல் மாசுபாடு
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is Toxicology". October 4, 2006. Archived from the original on March 10, 2007.
- ↑ "Transcriptional network inference and master regulator analysis of the response to ribosome-inactivating proteins in leukemia cells". Toxicology 441: 152531. August 2020. doi:10.1016/j.tox.2020.152531. பப்மெட்:32593706. Bibcode: 2020Toxgy.44152531M.
- ↑ Meulenbeld, Gerrit Jan (1999). A history of Indian medical literature. Groningen Oriental studies. Vol. IA. Groningen: E. Forsten. pp. 289–299. ISBN 978-90-6980-124-7. கணினி நூலகம் 42207455.
- ↑ Wujastyk, Dominik, ed. (2003). The roots of Ayurveda: selections from Sanskrit medical writings. Penguin classics (3 ed.). London: Penguin Books. pp. 78-81, 131–146. ISBN 978-0-14-044824-5.
- ↑ Meulenbeld, G. Jan (1999). A history of Indian medical literature. Groningen Oriental studies. Vol. IA. Groningen: E. Forsten. p. 352. ISBN 978-90-6980-124-7. கணினி நூலகம் 42207455.
- ↑ Strauss, Bettina (1934). "Das Giftbuch des Śānāq: eine Literaturgeschichtliche Untersuchung". Quellen und Studien zur Geschichte der Naturwissenschaften und der Medizin 4 (2): 89--152 followed by Arabic text. http://n2t.net/ark:/13960/s2hb5j66s95.
- ↑ Hodgson E (2010). A Textbook of Modern Toxicology. John Wiley and Sons. p. 10. ISBN 978-0-470-46206-5.
- ↑ Levey M (2017). Arnold E, Flood FB, Necipoğlu G (eds.). A Companion to Islamic Art and Architecture. Wiley. pp. 525–526. ISBN 978-1-119-06857-0.
- ↑ "Taxonomical outlines of bio-diversity of Karnataka in a 14th century Kannada toxicology text Khagendra Mani Darpana". Asian Pacific Journal of Tropical Biomedicine 3 (8): 668–72; discussion 672. August 2013. doi:10.1016/S2221-1691(13)60134-3. பப்மெட்:23905027.
- ↑ "Paracelsus Dose Response in the Handbook of Pesticide Toxicology WILLIAM C KRIEGER / Academic Press Oct01".
- ↑ Ottoboni MA (1991). The dose makes the poison: a plain-language guide to toxicology (2nd ed.). New York, N.Y: Van Nostrand Reinhold. ISBN 978-0-442-00660-0.
- ↑ "Biography of Mathieu Joseph Bonaventure Orfila (1787–1853)". U.S. National Library of Medicine.
- ↑ "Back to the roots of modern analytical toxicology: Jean Servais Stas and the Bocarmé murder case". Drug Testing and Analysis 1 (4): 153–155. April 2009. doi:10.1002/dta.32. பப்மெட்:20355192.
- ↑ Committee on Risk Assessment of Hazardous Air Pollutants; Commission on Life Sciences; National Research Council (1994). Science and judgement in risk assessment. The National Academic Press. p. 56. ISBN 978-0-309-07490-2.
- ↑ 15.0 15.1 "Human Health Toxicity Assessment". United States Environmental Protection Agencies.
- ↑ Ottoboni MA (1991). The dose makes the poison: a plain-language guide to toxicology (2nd ed.). New York, N.Y: Van Nostrand Reinhold. ISBN 978-0-442-00660-0.Ottoboni MA (1991). The dose makes the poison: a plain-language guide to toxicology (2nd ed.). New York, N.Y: Van Nostrand Reinhold. ISBN 978-0-442-00660-0.
- ↑ "Toward an evidence-based toxicology". Human & Experimental Toxicology 25 (9): 497–513. September 2006. doi:10.1191/0960327106het648oa. பப்மெட்:17017003. Bibcode: 2006HETox..25..497H.
- ↑ "How do you define toxicology?". Society of Toxicology. Archived from the original on 2013-06-05. Retrieved 2017-06-17.
- ↑ "Evidence-based toxicology for the 21st century: opportunities and challenges". Altex 30 (1): 74–103. 2013. doi:10.14573/altex.2013.1.074. பப்மெட்:23338808.
- ↑ "Evidence from Toxicology: The Most Essential Science for Prevention". Environmental Health Perspectives 124 (1): 6–11. January 2016. doi:10.1289/ehp.1509880. பப்மெட்:26091173. Bibcode: 2016EnvHP.124....6M.
- ↑ "Enhancing the credibility of decisions based on scientific conclusions: transparency is imperative". Toxicological Sciences 116 (1): 5–7. July 2010. doi:10.1093/toxsci/kfq102. பப்மெட்:20363830.
- ↑ "Toxicology and epidemiology: improving the science with a framework for combining toxicological and epidemiological evidence to establish causal inference". Toxicological Sciences 122 (2): 223–234. August 2011. doi:10.1093/toxsci/kfr113. பப்மெட்:21561883.
- ↑ "Enhancing credibility of chemical safety studies: emerging consensus on key assessment criteria". Environmental Health Perspectives 119 (6): 757–764. June 2011. doi:10.1289/ehp.1002737. பப்மெட்:21163723. Bibcode: 2011EnvHP.119..757C.