உப்புமா

தென்னிந்திய சிற்றுண்டி

உப்புமா அல்லது உப்மா என்பது தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப்படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது.

உப்புமா
மாற்றுப் பெயர்கள்உப்மா, உப்பிண்டி, உப்பிட்டு, காராபாத், உப்பீட், ருலான்வ்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்கோதுமை ரவை, ஜவ்வரிசி ஓட்ஸ்

உப்புமா பெரும்பாலும் ரவை கொண்டு செய்யப்படுகிறது. அரிசி உப்புமா, அரிசி ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சேமியா உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, பிரட் உப்புமா, ஓட்ஸ் உப்புமா, இட்லியை உதிர்த்து செய்யப்படும் இட்லி உப்புமா எனப் பலவகை உப்புமாக்கள் உள்ளன.[1] உப்புமா சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ சேர்த்து உண்ணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "உப்புமா". Archived from the original on 2015-01-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புமா&oldid=3911230" இலிருந்து மீள்விக்கப்பட்டது