உப்பு மாளிகை
உப்பு மாளிகை ( Palacio de Sal என்ற எசுப்பானிய சொல்லுக்கு "உப்பு மாளிகை" என்று பொருள்) என்பது உப்புப் பாளங்களால் கட்டப்பட்ட ஒரு விடுதியாகும். இது தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டில் உள்ள உலகின் பெரிய உப்புப் படுகையான சாலர் டி உயினி என்னும் உப்பு மட்டும் எஞ்சிய காய்ந்த ஏரிப்படுக்கையின் முனையில் கட்டப்பட்டுள்ளது. ‘டான் ஜுவான் க்வீசடா’ என்ற படைப்பாளியின் மூளையில் உருவான இந்த விடுதிதான், உலகின் முதல் உப்பு விடுதி ஆகும். இதற்குப் பின் சில உப்பு விடுதிகள் திறக்கப்பட்டபோதிலும், ‘பேலசியோ டி சால்’தான் உலகின் மிகப் பெரியது. ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் கரைந்த சில சேதங்களை மழைக்காலம் முடிந்தபின் மறுசீரமைப்பது வழக்கம்.[1] இது பொலிவியாவின் தலை நகரான லா பாசில் இருந்து 350 கி.மீ. (220 மைல்) தொலைவில் உள்ளது.
சாலர் டி உயினி என்பது உலகின் மிகப்பெரிய உப்புப் படுக்கையாகும்.[2] இது 10,582 சதுர கி.மீ (4,086 சதுர மைல்) பரப்பளவு உடையது.[3] இது பொலிவியாவின் தென்மேற்கில் ஆந்தீஸ் மலைத்தொடருக்கு அருகில் 3,656 மீட்டர் (11,995 அடி) உயரத்தில் உள்ளது. சாலர் டி உயினிக்கு தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கிருந்து தங்கள் நகரங்களுக்கு திரும்பும்வரை ஓய்வு எடுக்க இடம் தேவைப்பட்ட நிலையில் கட்டுமானப் பொருட்கள் கிடைக்காத இந்த ஒதுக்குப்பறமான பகுதியில் உப்புப் பாளங்களால் விடுதி கட்டலாம் என்ற யோசனை உருவானதாம்.
முதல் விடுதி 1993-1995 காலகட்டத்தில் உப்புப் பாளங்களால் சாலர் டி உயினியின் மையத்தில் கட்டப்பட்டது.[4][5][6][7] விரைவில் இந்த விடுதி புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமானது.[8] இதில் 12 இரட்டை படுக்கை அறகளுடன் ஒரு பொதுவான குளியலறையுடன் இருந்தது.[6] உப்புப் படுக்கையின் மையத்தில் இந்த விடுதி இருந்ததால் இந்த இடத்தில் நலவாழ்வு சிக்கல்கள் எழுந்தன. இதனால் ஏற்பட்ட தீவிர சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக விடுதி 2002 இல் கலைக்கப்பட்ட வேண்டியதாயிற்று.[9][10]
2007 ஆண்டைய காலத்தில் ஒரு புதிய விடுதி கட்டப்பட்டது.[8] பேலசியோ டி சால் என்ற பெயரில் புதிய இடத்தில் உப்புப் படுக்கையின் கிழக்கு ஓரத்தில் கட்டப்பட்டது.[7] இந்த இடம் பொலிவியாவின் தலைநகரான லா பாசில் இருந்து தெற்காக 350 km (220 mi) உள்ளது. இந்த கட்டடம் 1 மில்லியன் 35-செ.மீ (14-அங்குளம்) கனமுடைய உப்புப் பாளங்களால் கட்டப்பட்டது. இதன் தரை, சுவர், கூரை, கட்டில், மேசை இருக்கை போன்ற அறைகலன்கள் என இங்கு எல்லாம் உப்பால் செய்யப்பட்டது.[10] சுகாதார அமைப்பு முறைகளுக்கு அரசு விதிகளுக்கு இணங்க மாற்றியமைக்கப்பட்டது.[4] இங்கு நீராவிக் குளியலறை, நீர்சுழல் குளியலறை, நீச்சல் குளம் போன்றவையும் உப்பால் செய்யப்பட்டவையாம்.[11]
சுவர் வடிவம் |
உண்ணும் பகுதி |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "உப்பில் உருவான ஓட்டல்!". தி இந்து (தமிழ்). 13 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Salar de Uyuni, Bolivia". NASA Earth Observatory. Archived from the original on 2008-09-22. பார்க்கப்பட்ட நாள் 2007-12-01.
- ↑ "Uyuni Salt Flat". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2007-12-01.
- ↑ 4.0 4.1 "Hotel Truly Is the Salt of the Earth". 27 January 2009. Archived from the original on 15 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Don't Lick the Walls of the Salt Hotel". 19 May 2009. Archived from the original on 23 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ 6.0 6.1 Peter McFarrren, The Associated Press (March 4, 1999). "Salt hotel has a rule: No licking".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 7.0 7.1 Ben Box, Robert Kunstaetter, Daisy Kunstaetter, Geoffrey Groesbeck (2007). Peru, Bolivia & Ecuador. Footprint Travel Guides. p. 378. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-906098-06-9.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ 8.0 8.1 "Photo in the News: New Salt Hotel Built in Bolivia". National Geographic. 25 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-09-01.
- ↑ Harry Adès (2004). The Rough Guide to South America. Rough Guides. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85828-907-6.
- ↑ 10.0 10.1 "Palacio del Sal" (in German). Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Homepage of Palacio de Sal" (in Spanish). Archived from the original on 2012-02-26. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)