உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் என்பது இந்திய மாநிலமான, தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் உப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ள இந்து சைவ வழிபாட்டுத்தலமான விநாயகர் கோயில் ஆகும்.
பெயர் காரணம்
தொகுதட்சன், தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான். இந்த யாகத்தில் கலந்துகொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது. தன் தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார். சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருளினார். தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு, தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார். அவ்வாறே அருளினார் விநாயகர். அதன்படி, தட்சிணாயன, உத்தராயன காலங்களில் தெற்கு மற்றும் வடக்குப் புறமாக இவர் மீது சூரிய ஒளி படுகிறது. இதனால் இவருக்கு வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தல புராணம்.[1]
வரலாறு
தொகுஇராமநாதபுரம் சமஸ்தானதிற்கு உட்பட்ட இக்கோயிலானது நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் வந்த தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தாரால் கட்டப்பட்டு, அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.[2]
அமைப்பு
தொகுஇக்கோயிலானது மூன்று நிலை இராச கோபுரத்துடன் உள்ளது. மூலவர் விமானம் வேசர வடிவில் உள்ளது. இக்கோயிலில் காசி விசுவநாதர், விசாலாட்சி, தென்முகக்கடவுள், வள்ளி, தெவாணை உடனுறை முருகர், கால பைரவர், தில்லைக்கூத்தர், சனிபகவான் ஆகியோருக்கான சிற்றாலயங்கள் அமைந்துள்ளன.
திருவிழாக்கள்
தொகுஆண்டுதோறும் ஆவணி மாதம் இங்கு 10 நாட்கள் தேர்திருவிழா நடைபெறுகிறது. பத்து நாட்களும் சுவாமி உற்சவம் செல்வார். எட்டாம் நாளில் சித்தி, புத்தி, விநாயகர் திருக்கல்யாணப் நடக்கும். பத்தாம் நாளில் பிள்ளையார் சதுர்தியை முன்னிட்டு இங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Vellimani&artid=467073&SectionID=147&MainSectionID=147&SEO=&Title=[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி
- ↑ வயிநாகரம் அ.இராமநாதன் செட்டியார். நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. p. 158,159.
- ↑ "வேண்டும் வரம் அருளும் உப்பூர் வெயிலுகந்த விநாயகர்". Hindu Tamil Thisai. 2024-09-05. பார்க்கப்பட்ட நாள் 2024-10-05.