உப்பே தீவு

மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள தீவு

உப்பே தீவு (மலாய்: Pulau Upeh; ஆங்கிலம்: Upeh Island) என்பது மலேசியா, மலாக்கா மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா நீரிணையில்; கிளேபாங் நகரின் கடற்கரையிலிருந்து 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவு.[1]

உப்பே தீவு
Pulau Upeh
Upeh Island
Map
உப்பே தீவு Pulau Upeh Upeh Island is located in மலேசியா
உப்பே தீவு Pulau Upeh Upeh Island
      உப்பே தீவு
புவியியல்
அமைவிடம் மலேசியா
தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்2°11′31.6″N 102°12′9.3″E / 2.192111°N 102.202583°E / 2.192111; 102.202583
பரப்பளவு0.028 km2 (0.011 sq mi)
நிர்வாகம்

2016-ஆம் ஆண்டில் இந்தத் தீவிற்கு அருகில் நில மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இந்தத் தீவு கடற்கரையிலிருந்து 2 கி.மீ. மீட்டர் தொலைவில் இருந்தது.[2]

இந்தத் தீவு அதிக எண்ணிக்கையிலான அழுங்காமைகள் (Hawksbill Turtle) முட்டைகள் இடும் இடங்களைக் கொண்ட இடங்களில் ஒன்றாக இருந்தது.[3]

பொது

தொகு

தீவின் அருகே நில மீட்புத் திட்டங்கள் நடைபெற்றதால், அங்கு அதிக அளவிலான கடற்கரை அரிப்பும்; கடற்கரைச் சிதைவுகளும் ஏற்பட்டன. அதன் காரணமாக முட்டையிடுவதற்கும் தங்குவதற்கும் வரும் ஆமைகளின் எண்ணிக்கை, இப்போது மிகவும் குறைந்து விட்டது.[4][5]

இந்தத் தீவின் அடர்ந்த காட்டுக்குள் கைவிடப்பட்ட நிலையில் ஒரு தங்கும் விடுதி காணப்படுகிறது. ஆமைகள் வருவது குறைந்து விட்டதால், அவற்றைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து விட்டது.

தற்போது இந்தத் தீவின் இயற்கை வளங்கள் ஒரு நலமற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்வதாகவும் அறியப்படுகிறது.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Pulau Upeh". sea-seek.com.
  2. Kate Mayberry (2 December 2016). "Land reclamation in Malaysia puts environment, endangered turtle at risk". news.mongabay.com.
  3. "Faced with rapid erosion, residents want to see master plan of reclamation project". New Straits Times. 7 December 2016.
  4. Tan Wai Sim (20 June 2018). "Protect Melaka's turtle nesting sites". New Straits Times.
  5. Norizzah Baharudin (14 April 2018). "Pulau Upeh dinaiktaraf ikon pelancongan baharu Melaka". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 4 June 2023.
  6. John Rowley (1 December 2006). "Malaysia's turtle island faces uncertain future". wwf.panda.org.
  7. "Melaka's Upeh Island resort buildings to be re-developed". klsescreener.com. 14 March 2008.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பே_தீவு&oldid=3910226" இலிருந்து மீள்விக்கப்பட்டது