உமரிக்காடு
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் உமரிக்காடு ஆகும். இது குரும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஆறுமுகனேரி ரயில் நிலையம், நாசரேத் ரயில் நிலையம், ஆழ்வார்திருநகரி ரயில் நிலையம் மற்றும் திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள இரயில் நிலையங்களாகும்.
உமரிக்காடு | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 8°37′34″N 78°03′36″E / 8.6261°N 78.0601°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
ஏற்றம் | 13 m (43 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 628151 |
வாகனப் பதிவு | TN69 |
பள்ளிகள்
தொகு- உமரிக்காட்டில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.[1] கொற்கை, ஆத்தூர், வழவல்லான் மற்றும் அருகிலுள்ள பிற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளிகளில் படிக்கின்றனர். உமரிக்காடு மக்கள் கிராம நிதியிலிருந்தும் தனியார் நிதியிலிருந்தும் இப்பள்ளி மாணவர்கள் கல்வி உதவி பெறுகின்றனர்.
வங்கிகள்
தொகு- கூட்டுறவு வங்கி ஒன்று இக்கிராமத்தில் உள்ள விவசாயிகளின் விவசாயத் தேவைக்கான நிதி சேவைகளை வழங்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Students display creativity through models". தி இந்து. 28 August 2014. http://www.thehindu.com/features/education/school/students-display-creativity-through-models/article6359674.ece. பார்த்த நாள்: 16 May 2015.