உமர் மார்வி

உமர் மார்வி அல்லது மாருயி ( சிந்தி மொழி: عمر مارئي‎ , உருது: عُمَر ماروی‎ ), பாக்கிஸ்தானின் சிந்துவில் இருந்து வரும் ஒரு நாட்டுப்புறக் கதையாகும். ஒரு சக்திவாய்ந்த மன்னனின் தூண்டுதல்களையும், அரண்மனையில் ஒரு ராணியாக வாழ ஆசைப்படுவதையும் எதிர்த்து, ஒரு கிராமத்துப் பெண்ணான மார்வி மராய்ச், தனது சொந்த கிராம மக்களுடன் எளிய கிராமப்புற சூழலில் இருக்க விரும்புகிறாள்.

ஷா அப்துல் லத்தீஃப் பிட்டாயின் ஏழு கதாநாயகிகள் என்றழைக்கப்படும் ஷா ஜோ ரிசாலோவிலும் தோன்றும் இது, சிந்துவின் ஏழு பிரபலமான சோகக் காதல் கதைகளில் ஒன்றாகும். மற்ற ஆறு கதைகள் சசுய் புன்ஹுன், சோஹ்னி மெஹர், லிலன் சானேசர், நூரி ஜாம் தமாச்சி, சோரத் ராய் தியாச் மற்றும் மோமல் ரானோ ஆகியவையாகும் .

நாட்டுப்புறவியல்

தொகு

உமர் மார்வியின் கதை என்னவெனில், மார்வி ஒரு இளம் தாரிப் பெண். அப்போதைய அமர்கோட்டின் ஆட்சியாளரான உமர் அவள் அழகைக் கண்டு அவளை மணக்க விரும்பினான். அவள் மறுத்ததால், அவளைக் கடத்தப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க உமர்கோட் கோட்டையில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது துணிச்சலின் காரணமாக, மார்வி தனது மண் மற்றும் தாய்நாட்டின் அன்பின் அடையாளமாக கருதப்படுகிறார்.

பிரபலம்

தொகு
  • பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனம் 1993 இல் மார்வி என்ற தொடர் தழுவலை நடத்தியது. இந்தத் தொடர் மார்வி மற்றும் உமரின் கதையை நவீன அமைப்பில் சித்தரிக்கிறது. கஜல் சித்திக் நாயகியாகவும், ஹஸ்ஸாம் காசி உமராகவும் நடித்தனர்.
  • உமர் மார்வி, இந்த நாட்டுப்புறக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு பாகிஸ்தான் திரைப்படமாகும். சையத் ஹுசைன் அலி ஷா ஃபஸ்லானி தயாரித்து, ஷேக் ஹாசன் இயக்கியுள்ளார். ஃபஸ்லானி, நிகாத் சுல்தானா, நூர் முகமது சார்லி மற்றும் பிப்போ ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் 12, 1956 இல் வெளியிடப்பட்டது, இது பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட முதல் சிந்தி மொழி திரைப்படமாகும் .
  • உமர் மாருயி, இந்திய எழுத்தாளர் ராம் பஞ்வானியின் சிந்தி நாடகமாகவும் வெளிவந்தது. [1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Drama - Professor Ram Panjwani". rampanjwani.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-07.
  2. The History of India, as Told by Its Own Historians by Eliot and Dawson, Volume 1, Page 260

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்_மார்வி&oldid=3706027" இலிருந்து மீள்விக்கப்பட்டது