நபி பக்சு கான் பலோசு
நபி பக்சு கான் பலோசு (Nabi Bakhsh Khan Baloch சிந்தி மொழி: نبي بخش خان بلوچ ) (16 டிசம்பர் 1917 - 6 ஏப்ரல் 2011) ஒரு ஆராய்ச்சி அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாண பகுதிகளில் 'நடமாடும் நூலகம்' என்று அழைக்கப்பட்டார்.[1][2]
வரலாறு, கல்வி, நாட்டுப்புறவியல், தொல்பொருள், மானுடவியல், இசை, இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் நாகரிகம் உள்ளிட்ட பல துறைகளிலும் அவர் பங்களித்தார். அவர் வெளியிட்ட 100 க்கும் மேற்பட்ட படைப்புகள் ஆங்கிலம், அரபு, பாரசீக, உருது, சிந்தி மற்றும் சராய்கி மொழிகளில் உள்ளன .[1][2] 1972 ஆம் ஆண்டு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் பதினைந்தாம் பதிப்பில் இவரின் 'சிந்து' மற்றும் 'பலுசிஸ்தான்' பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅலி முகமது கான் லாகரி பலூசின் மகனான நபி பக்சு பலூசி 1917 டிசம்பர் 16 அன்று பாகிஸ்தானின் சிந்து மாவட்ட சங்கர் ஜாஃபர் கான் லாகரி கிராமத்தில் பிறந்தார்.[1] அவர் தனது ஆரம்பக் கல்வியை பாலியோ கான் கிஆமத்தின் உள்ளூர் ஆசிரியரிடமிருந்து கற்றார். லாகரியில் பெற்றார். பின்னர் புகழ்பெற்ற நஷெரோ ஃபெரோஸ் மெட்ரெஸாவிடமிருந்து இடைநிலைக் கல்வியைப் பெற்றார். 1941 ஆம் ஆண்டில் பலோசு பின்னர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
ஐ.நா மற்றும் யுனெஸ்கோ மன்றங்கள் மற்றும் சர்வதேச மாநாடுகளில் இவரின் பங்கேற்பு
தொகு1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வேலைவாய்ப்பு திட்டத்தில் இவர் பங்கேற்றார்.ஐ.நா. அங்கீகாரம் பெற்ற சபாநாயகராக 1948-49 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இவர் கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரதிநிதியாக இவர் 1956 ஆம் ஆம் ஆண்டில் தெற்காசியாவில் நடைபெற்ற ஆரம்பக் கல்வி குறித்த யுனெஸ்கோ பிராந்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.1962 ஆம் ஆண்டில் புது தில்லியில் நடைபெற்ற இந்திய -பாக்கித்தான் கலாச்சார மாநாட்டிற்கான பாகிஸ்தான் பிரதிநிதியாக கலந்துகொண்டார். 1963 ஆம் ஆண்டு மணிலாவில் நடைபெற்ற ஆசிய நாடுகளிலிருந்து பலர் கலந்து கொண்ட ஆசிரியர் பயிற்சியில் யுனெஸ்கோ கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதிநிதியாக இவர் கலந்து கொண்டார். 1967 ஆம் ஆண்டில் பாரிசில் நடைபெற்ற ஆசிரியர் கல்வி பற்றிய குழு கலந்துரையாடலில் இவர் பாக்கித்தான் பிரநிதியாக கலந்துகொண்டார்.1977 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் இந்தோனேசியாவின் உயர் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் இந்தோனேசியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.நவம்பர் 1978 மற்றும் ஏப்ரல் 1979 இல் 20 வது யுனெஸ்கோ பொது மாநாட்டிற்கான பாகிஸ்தான் பிரதிநிதியாக கலந்துகொண்டார். மத்திய ஆசிய நாகரிகத்தின் வரலாறு' குறித்த சர்வதேச உறுப்பினர் குழுவில் இவர் இடம்பெற்றார். இவரை இந்தக் குழுவில் இடம்பெறுவதற்கு யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குநர் பரிந்துரை செய்தார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
தொகு1962 ஆம் ஆண்டில் தம்கா-இ-இம்தியாஸ் விருதினைப் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் சீதாரா-இ-காயிட்-இ-ஆசாம் விருதினைப் பெற்றார்.1979 இல் பாகிஸ்தான் ஜனாதிபதியிடம் இருந்து செயல்திறன் பெருமை [3] விருதினையும் அதன்பிறகு 1991 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஜனாதிபதியால் இசாஸ்-இ-கமல் விருது வழங்கப்பட்டது.[4] பின்பு 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஜனாதிபதியால் சீதாரா-இ-இம்தியாஸ் விருது 1999 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டர்ஸால் ஷா லத்தீப் மற்றும் மிஸ்டிக்ஸம் விருது பெற்றார். [5] 2005 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டர் நிறுவனத்திடம் இருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] கராச்சி பல்கலைக் கழகத்தினால் கல்வி மேலாண்மை முனைவர் பட்டம் 2009 ஆம் ஆஅண்டில் வழங்கப்ப்பட்டது. மீண்டும் இவர் 2011 ஆம் ஆண்டிற்கான ஹிலால்-இ- இம்தியாச் விருதினை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Newspaper, From the (14 April 2011). "Dr Nabi Bakhsh Baloch remembered". Dawn (newspaper). பார்க்கப்பட்ட நாள் 7 July 2019.
- ↑ 2.0 2.1 Newspaper, From the (6 April 2011). "Dr Nabi Bakhsh Baloch is no more". Dawn (newspaper). பார்க்கப்பட்ட நாள் 7 July 2019.
- ↑ Dr. Nabi Bakhsh Baloch passes away (includes info on his award) Dawn (newspaper), Published 6 April 2011, Retrieved 8 July 2019
- ↑ Transitions: Scholar Dr Nabi Bux Baloch, who compiled the first Sindhi-English dictionary, dies at 93 The Express Tribune (newspaper), Published 7 April 2011, Retrieved 8 July 2019
- ↑ HYDERABAD: Dr Baloch receives Shah Latif Award Dawn (newspaper), Published 10 February 2003, Retrieved 8 July 2019