உமாமகேசுவர மூர்த்தி
உமாமகேசன், என்பது அறுபத்து நான்கு மற்றும் இருபத்துநான்கு சிவத்திருமேனிகளில் ஒன்றாகும். முதற்பெரும் தம்பதியரான உமையும் சிவனும் அருகருகே அமர்ந்தருளும் திருக்கோலமே உமாமகேசத் திருக்கோலம் ஆகும்.[1] உருவவியல்தொகுமகேசன், சுகாசனத்தில் அமர்ந்து,வெண்ணீறு பூசிய மேனியும், மான் மழு, அஞ்சேல், அபயம் தாங்கிய நான்கு கரங்களும் கொண்டு, அ்ருகே குவளை மலரேந்திய கரத்தினளாகக் காட்சிதரும் உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பான்.[2] சில வடிவங்களில், ஈசனின் திருமடியில் அம்மை அமர்ந்திருப்பாள். கயிலையில் அம்மையும் அப்பனும் அளிக்கும் அருட்காட்சியே இந்தக்கோலம் எனப்படுவதுண்டு.[3] கோயில்கள்தொகுகோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் மூலவர், இம்மூர்த்தியின் திருப்பெயரையே தாங்கிநிற்கிறார். மேலும் மீனாட்சியம்மன் கோவில் முதலான பல பழமை வாய்ந்த கோயில்களில், இம்மூர்த்தியின் திருவுருவம் அமைக்கப்பட்டு விளங்குகின்றது. மேலும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு
|