உமா பட் (Uma Bhatt), (பிறப்பு c.1952) ஓர் இந்திய அறிஞர், எழுத்தாளர் மற்றும் பெண்களுக்கான பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் தனது சொந்த மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் அரசியல் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளார்

தொழில் தொகு

பத்திரிகை ஆசிரியர் தொகு

1990 ல் இவரது பத்திரிகை "உத்தரா" பெண்களை மையப்படுத்தி நிறுவப்பட்டது.[1] கவிதை மற்றும் புனைகதைகளை வெளியிடுவதோடு, உத்தரகண்டில் உள்ள சமூகப் பிரச்சினைகளையும் இது விளக்குகிறது, மேலும் தடைகளை எதிர்கொண்டு, முன்னேறத் துணிந்த "சாதாரண" பெண்களின் கதைகளையும் கொண்டுள்ளது. உமா பட், இந்த திட்டத்தை முன்னிலை படுத்தினார் என்று கூறப்பட்டாலும், இணை நிறுவனர்களான கம்லா பந்த், பசாந்தி பதக் மற்றும் ஷீலா ராஜ்வர் ஆகியோரும் இதற்கு துணை நின்றனர்.

அரசியல்வாதி தொகு

1980 களில் உமா பட், "உத்தரகண்ட் மாநிலத்தில் மதுபான எதிர்ப்பு இயக்கம்" பற்றி மனுஷி என்ற பெண்ணிய பத்திரிகைக்கு ஆறு பக்க அளவில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், குடும்ப வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் மது வியாபாரத்தின் எதிர்மறையான விளைவுகள் குறித்து வலுவாக உணர்ந்த பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி எழுதியிருந்தார். இது பெண்களுக்கான பிரச்சாரமாகவே கருதப்பட்டது.[2] இந்த பிரபலமான பிரச்சாரத்தைச் ஆதரித்த பெண்கள் 1990 களில் உத்தரபிரதேசத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான இயக்கத்தை ஆதரிக்க ஊக்குவிக்கப்பட்டனர். இது 2000 ஆம் ஆண்டில் ஒரு சுதந்திர உத்தரகண்டிற்கு வழிவகுத்தது. பெண்களுக்கு மிகுந்த அக்கறை கொண்ட பல பிரச்சினைகள் குறித்து வாக்குறுதிகளை அளித்த ஆண் அரசியல்வாதிகளால் அவர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உமா பட் கூறியுள்ளார், ஆனால் பின்னர் பின்வாங்கினார். புதிய அரசு நிறுவப்பட்டவுடன் சுதந்திர இயக்கத்திற்கு பங்களித்த பெண்கள், அரசியல் ரீதியாக சுறுசுறுப்பான வாழ்க்கைக்குச் செல்வார்கள் என்று ஆண்கள் எதிர்பார்த்த விதத்தையும் இவர் விமர்சித்தார்.[3]

மொழியியலாளர் தொகு

டாக்டர் உமா பட் நைனிடாலின் குமாவோன் பல்கலைக்கழகத்தில் இந்தி துறையில் மொழியியலாளர் ஆவார். இவர், இமயமலை மலைத்தொடர்களில் வாழும் பழங்குடியினர் பேசும் மொழிகளில் சிறப்பு அறிவு உள்ளவராக இருந்தார். இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக உத்தரகண்ட் மாநிலத்தில் புழக்கத்தில் இருந்த மொழிகளைஉடன் இணைந்து தொகுத்தார்.[4]

இந்திய மக்கள் மொழியியல் கணக்கெடுப்பு இந்தியாவின் தற்போதைய மற்றும் நலிவடைந்த மொழிகளைப் பற்றிய ஒரு கருத்தை கொடுக்க முயற்சிக்கிறது. மொழியியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வெவ்வேறு பேச்சு சமூகங்களின் உறுப்பினர்களால் ஆவணப்படுத்தப்பட்ட மொழிகளின் நாடு தழுவிய கணக்கெடுப்பின் விளைவாக இது உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் நிலவும் மொழிகளை இந்த தொகுதி ஆவணப்படுத்துகிறது. விமர்சன ரீதியாக, இந்த புத்தகம் விவாதிக்கப்பட்ட மொழிகளின் பேச்சாளர்களின் உலக பார்வையை இணைக்கிறது. அவ்வப்போது இந்தியாவுக்கு வந்த பல்வேறு குடியேற்றவாசிகளின் பல்வேறு மொழியியல் தாக்கங்களால் உத்தரகண்ட் மொழிகள் பலவகையான மற்றும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன.

இது இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் மற்றும் நலிவடைந்த மொழிகளைப் பற்றிப் படிக்கும் ஒரு தொடர் ஆகும். இந்த வேலை "பழங்குடி மக்கள், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் நலிவடைந்தவர்களின் மொழிகளைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை நிவர்த்தி செய்கிறது" என்று வெளியீட்டாளர் கூறுகிறார்.[5] இந்தத் திட்டத்தில் இவரது சக ஆசிரியர் சேகர் பதக் என்ற வரலாற்றாசிரியர் இவரது கணவர்ஆவார்.[6] 19 ஆம் நூற்றாண்டின் ஆய்வாளர் நைன் சிங் பற்றிய புத்தகத்தையும் இவர்கள் இணைந்து எழுதியுள்ளனர்.[7]

குறிப்புகள் தொகு

  1. An equal gender, The Hindu, 13 March 2014
  2. "Uma Bhatt, "Give Us Employment, Not Liquor", Manushi Vol 24" (PDF). Archived from the original (PDF) on 2016-08-21. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  3. Telegraph of India, 4 Feb 2002
  4. "The Languages of Uttarakhand, Volume 30, 2015". Archived from the original on 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  5. "People's Linguistic Survey of India (PLSI)". Archived from the original on 2019-06-08. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  6. "List of PLSI volumes" (PDF). Archived from the original (PDF) on 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  7. Pundit Nain Singh Rawat (1830-1895): Life, Explorations and Writings, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_பட்&oldid=3944285" இலிருந்து மீள்விக்கப்பட்டது