உமைத்தானகத்து குஞ்சிக்காதர்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
உமைத்தானகத்து குஞ்சிக்காதர் என்பவர் கேரள மாநிலம் மலப்புரம் தானூரில் வாழ்ந்த, மலபாரில் நடந்த ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்றவர் ஆவார். இவர் பிறந்த ஊர் தானுர். கடலோரப் பகுதியியான தானூரில் கிலாபத் நடவடிக்கைகளுக்கு தலைமைபொறுப்பில் பங்காற்றினார். போராட்டத்தின் ஒரு பகுதியாக, தானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை கிலாபத் இயக்கத்தில் ஒருங்கிணைத்தார். 1918-ல், கோழிக்கோடு கடற்கரையில் காந்திஜி மற்றும் மௌலானா சௌக்கத்தலி கலந்து கொண்ட கிலாபத்-காங்கிரஸ் மாநாட்டின் வாயிலாகத்தான் காதர் தலைவர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டார். குஞ்சிக்காதர், அவரது குருநாதர் தானூர் பரீக்குட்டி முஸ்லியார் ஆகியோர் தலைமையில் தானுர் மாடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற கிலாபத் மாநாடு பெருமுயற்சியின் பலனாக மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் தானூரில் இருந்த தனது வணிக நிறுவனத்தை வேறொருவரிடம் ஒப்படைத்த குஞ்சிக்காதர், கிலாபத்தின் முழுநேர ஊழியராக மாறி, விரைவில் ஆங்கிலேயர்களின் கண்தூசியாக மாறினார். தானுர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொது மக்களிடையே கிலாபத்தை பரப்புவதற்கு காதர் பலவித முயற்சிகளை மேற்கொண்டார்.
1920ல் குஞ்சிக்காதர் தலைமையில் தானூரில் கிலாபத் கமிட்டி கூட்டம் கூடுவதற்க்கான ஏற்பாடுகள் தொடங்கியது. இந்த மாநாட்டின் மூலம் குஞ்சிகாதர் தலைமையில் தங்களுக்கு எதிராக மாபெரும் இயக்கம் உருவாக வாய்ப்புள்ளது என்ற தகவலின் அடிப்படையில் மாநாட்டை நடத்தக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். ஆனால் கிலாபத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து விலகத் தயாராக இல்லை. 1920 ஆகஸ்டு 20 அன்று திரூரங்காடி மசூதியை ராணுவம் தாக்கிய செய்தி வந்ததையடுத்து குஞ்சிக்காதரும் அவரது குழுவினரும் தானூரிலிருந்து புறப்பட்டனர். பரப்பனங்காடிக்கு அருகில் உள்ள பந்தாரங்காடியில் குஞ்சிகாதரும் அவரது குழுவினரும் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். பின்னர் காதர் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த துணிச்சலான தேசபக்தரை பின்னர் பிரித்தானிய அரசு தூக்கிலிட்டது. அவர் தானுரின் சிங்கக்குட்டி என்று இவர் வர்ணிக்கப்படுவதுண்டு.
குஞ்சிகாதர் வாழ்ந்த வீடு தானுர் திப்பு சுல்தான் சாலைக்கு அருகில் இன்றும் உள்ளது. இந்த வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் இராணுவத்தினர் இரும்பு கம்பிகளால் உடைக்க முற்பட்ட தழும்புகளை இன்றும் காணலாம். வீட்டுக்குப் அருகிலுள்ள அவருடைய அலுவலகம் இப்பொழுதும் உள்ளது.[1]
மலையாள திரைப்படத்தின் கதைமூலம்
தொகுமலபார் கலவரத்தின் கதை சொல்லும் 1921 திரைப்படத்தில் மம்மூட்டி நடித்த கதாநாயகன் வேடம் உமைத்தானகத்து குஞ்சிக்காதரை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பக பதிவு". Archived from the original on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2015-08-24.
- ↑ "திரைப்பட விமர்சனம்". பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.
வெளி இணைப்புகள்
தொகு"தானூர் குஞ்சிக்காதர்: தூக்குக் கயிற்றை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட கிலாபத் போராளி". பார்க்கப்பட்ட நாள் 2023-09-30.