உம் தைஸ் தேசியப் பூங்கா
உம் தைஸ் தேசிய பூங்கா என்பது கத்தார் நாட்டின் வடக்கு முனையில் மக்கள் வசிக்காத தீவில் அமைந்துள்ள அரசால் பாதுகாக்கப்பட்ட ஒரு தேசியப் பூங்கா ஆகும். [1] இதில் மணல் முட்டுகள் மற்றும் சதுப்புநிலங்களுடன் கூடிய சிறிய தீவுகள் உள்ளன . பல புலம் பெயர்ந்த பறவை இனங்களும் தீவில் வாழ்கின்றன. இந்தப் பூங்கா 15 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக 2006 இல் நிறுவப்பட்டது. அல் மஃப்ஜார் என்று அழைக்கப்படும் ஒரு பழங்கால கிராமத்தின் இடிபாடுகள் அருகில் அமைந்துள்ள இப்பூங்காவை ஒரு சுற்றுலா தலமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அர் ருயாஸ் நகரத்திலிருந்து நான்கு மைல்களுக்குள் உள்ளது. [2]
மேலும் காண்க
தொகு- கத்தார் இயற்கை பகுதிகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ Marhaba’s Guide to the Natural World and Nature Reserves in Qatar பரணிடப்பட்டது 2015-07-11 at the வந்தவழி இயந்திரம் MAY 2, 2015 Marhaba
- ↑ "'Gazetteer of Arabia Vol. II' [1494] (567/688)". Qatar Digital Library. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.