உயிரணு நிரவி

உயிரணு நிரவி (Cell spreader), உயிரணு பரப்பி அல்லது தட்டு பரப்பி என்பது நுண்ணுயிரியலில் பெட்ரி தட்டு போன்ற நுண்ணுயிரி வளர் தட்டில் உயிரணுக்கள் மற்றும் பாக்டீரியாக்களைச் சீராகப் பரப்பப் பயன்படும் ஒரு கருவியாகும்.

உயிரணு நிரவி

உயிரணு நிரவி கண்ணாடி, நெகிழி அல்லது உலோகத்தால் செய்யப்பட்டிருக்கலாம். இது ஆங்கில எழுத்தான “எல்”[1] அல்லது “டி”[2] உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது.

டிரிகல்ஸ்கி அகப்பை என்பது ஒரு கைப்பிடியுடன் முக்கோண வடிவில் வளைந்த உருளை கம்பி அல்லது கம்பியைக் கொண்ட ஒரு உயிரணு பரப்பி ஆகும்.[3][4][5]

பயன்கள்

தொகு

வளர் ஊடக தட்டின் மையத்தில் இடப்படும் உயிரணுக்கள் அல்லது பாக்டீரியாவை . ஆராய்ச்சியாளர்கள் உயிரணு பரப்பியினை வைத்து அதிக அழுத்தம் கொடுக்காமல், தட்டில் உள்ள ஊடகத்தின் மீது பரப்பியினைச் சுழற்றி பரப்பலாம்.[6]

நுண்ணுயிரி நீக்கம்

தொகு

உயிரணு பரப்பியினைப் பயன்படுத்துவதற்கு முன், கண்ணாடி அல்லது உலோகத்தால் பரப்பியினை ஆல்கஹால் அல்லது எத்தனாலில் வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் நுண்ணுயிரிகளை அகற்றுவதற்காக ஒரு பன்சன் சுடரடுப்பு சுடரில் வைத்து ஆல்கஹாலினை எரிக்க வேண்டும். இதன் மூலம் நுண்ணுயிரி ஏதேனும் இருந்தால் நீக்கப்படும்.[7]

 
உயிரணு பரப்பியினை பயன்படுத்துதல்
உயிரணு பரப்பியினை பயன்படுத்துதல்

பயன்பாட்டிற்குப் பிறகு

தொகு

ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு, உயிரணு பரப்பியினை ஆல்கஹால் அல்லது எத்தனாலில் வைக்க வேண்டும். இக்கருவி சுத்தமாக இருக்க வேண்டும். இது போன்ற திரவத்தில் வைப்பதன் மூலம் தேவையற்ற துகள்களால் மாசுபடுவதைத் தடுக்கலாம்.

நெகிழியால் செய்யப்பட்ட உயிரணு பரப்பியினை பொதுவாகப் பயன்பாட்டிற்குப் பின் மறு உபயோகத்திற்குப் பயன்படுத்துவதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. (2019): "Product BRG005: L-Shape Bacteriology Loop பரணிடப்பட்டது 2019-10-26 at the வந்தவழி இயந்திரம்". Rogo-Sampaic online catalog. Accessed on 2019-10-25.
  2. (2019): "Item 3044-55: Sterile T-shaped cell spreaders". Weber Scientific online catalog. Accessed on 2019-10-25.
  3. Ronald Westphal (1988): Microbiological Techniques in School, page 34. Document No. 28 in the series Science and Technology Education.
  4. (2019): "Item 41049: Drigalski spatulas made of glass பரணிடப்பட்டது 2023-03-22 at the வந்தவழி இயந்திரம்". Assistent (Karl Hecht) online catalog. Accessed on 2019-10-25.
  5. (2019): "Product 1800024: Drigalski spatula". Marienfeld-Superior online catalog. Accessed on 2019-10-25.
  6. "Standard Operating Procedure" (PDF). Archived from the original (PDF) on 2022-10-09.
  7. "Laboratory Methods". www.phys.ksu.edu. பார்க்கப்பட்ட நாள் 2017-03-09.

மேலும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரணு_நிரவி&oldid=4110761" இலிருந்து மீள்விக்கப்பட்டது