உயிரியற்பிய வேதியியல்
உயிரியற்பிய வேதியியல் (Biophysical chemistry) என்னும் இயற்பிய அறிவியல் பிரிவானது இயற்பியல் மற்றும் இயற்பிய வேதியியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி தொகுப்பியக்க உயிரியலைப் படிப்பதற்கு பயன்படுகிறது[1]. உயிரிய அமைப்புகளில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கான விளக்கங்களை மூலக்கூறுகளின் அல்லது மேற்புற-மூலக்கூற்று வடிவங்களின் அடிப்படையில் விளக்கங்களைத் தேடும் ஆய்வுகள் இத்துறையில் நடத்தப்படுகின்றன.
வழிமுறைகள்
தொகுஉயிரியற்பிய வேதியியலாளர்கள் இயற்பிய வேதியியலில் உள்ள பல்வேறு செய்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிரிய அமைப்புகளிலுள்ள வடிவங்களை ஆராய்கிறார்கள். நிறமாலையியல் வழிமுறைகளான அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு (nuclear magnetic resonance; NMR), எக்சு கதிர் விளிம்பு விளைவு (X-ray diffraction) போன்றவை இத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Peter Jomo Walla (8 July 2014). Modern Biophysical Chemistry: Detection and Analysis of Biomolecules. Wiley. pp. 1–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-68354-3.