உயிர்த்தோற்றவியல்

(உயிர்த்தோற்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உயிர்த்தோற்றவியல் அல்லது உயிர்களின் தோற்றம் (abiogenesis) என்பது வாழ்வற்ற பொருளிடமிருந்து எவ்வாறு முதன்முதலாக உயிர் வடிவங்கள் தோன்றின என்பதைக் குறித்தான கல்வி ஆகும். இதனை வேதியியல் பரிணாமமாகச் சிலரும் துவக்கக் கால உயிரியல் பரிணாமமாகச் சிலரும் கருதுவர். உயிர்களின் தோற்றம் குறித்த கல்வி வேதியியல், மூலக்கூற்று உயிரியல், உயிரணு உயிரியல், புவி அறிவியல் மற்றும் வானியல் ஆகிய பல அறிவியல் துறைகளை உள்ளடக்கியது. புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. புவியில் உயிர்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கிடையே தோன்றியிருக்கலாம் என கருதப்படுகின்றது.[1][2][3]

கேம்பிரியன் காலத்திற்கு முந்திய சுண்ணாம்பு பாறை அடுக்குகள் கேலெசியர் தேசிய பூங்கா அ.ஐ.நா. 2002 இல் வில்லியம் சுகால்ஃப் நேச்சர் இதழ் வெளியிட்ட ஆயிவறிக்கையின் படி இதன் இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை. இவை உண்மையெனில் இவைதான் அறிய பட்டவற்றில் முதலில் உருவான உயிருக்கான ஆதாரம்.

ழான்-பாப்டிஸ்ட் டெ லாமார்க் மற்றும் சார்லஸ் டார்வின் போன்றோர் தாவரங்களும் விலங்குகளும் நாளடைவில் மாற்றமடைகின்றன எனக் கண்டறிந்தனர். இதனை விளக்க லாமார்க் விவரித்தக் கொள்கை லாமார்க்கிசம் எனப்படுகிறது; டார்வினின் கொள்கை படிவளர்ச்சிக் கொள்கை எனப்படுகிறது.

2002 ஆண்டு முதல் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வொன்றில் 3.45 பில்லியன் தொன்மை வாய்ந்த சுண்ணாம்புப்பாறை அடுக்குகளில் (Stromatolite) நீலப்பச்சைப்பாசி பாக்டீரியாவின் தொல்லுயிர் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[4][5] நீலப்பச்சைப்பாசிகளே புவியில் மிகவும் தொன்மைவாய்ந்த உயிராக பரவலாக நம்பப்படுகிறது. இவற்றின் பதிப்புகளிலிருந்து உயிர்த்தோற்றத்தின் துவக்கம் புவிப்பரப்பில் நீராவி முதலில் குளிர்ந்து தண்ணீராக நிலைபெற்ற 4.4 பில்லியன் ஆண்டுகளுக்கும்[6] 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது

2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலைபெற்ற கரிமம், இரும்பு மற்றும் கந்தகத்தின் ஓரிடத்தான்களின் விகிதத்திலிருந்து கனிமங்கள் மற்றும் படிவுப்பாறைகளின் உயிரியல் துவக்கத்தையும்[7][8] மூலக்கூற்று உயிரிக் குறியீடுகள் மூலம் ஒளிச்சேர்க்கையையும் அறிகிறோம்.[9][10]

உயிர்த் தோற்றத்தைக் குறித்து பல கருத்தாக்கங்கள் நிலவியபோதும் இரு கொள்கைகள் மிகக் குறிப்பிடத்தகவையாக உள்ளன:

மேற்கோள்கள்

தொகு
  1. Schopf, JW, Kudryavtsev, AB, Czaja, AD, and Tripathi, AB. (2007). Evidence of Archean life: Stromatolites and microfossils. Precambrian Research 158:141–155.
  2. Schopf, JW (2006). Fossil evidence of Archaean life. Philos Trans R Soc Lond B Biol Sci 29;361(1470) 869-85.
  3. Hamilton Raven, Peter; Brooks Johnson, George (2002). Biology. McGraw-Hill Education. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-112261-0. பார்க்கப்பட்ட நாள் 2013-07-07.
  4. Schopf JW, Kudryavtsev AB, Agresti DG, Wdowiak TJ, Czaja AD (March 2002). "Laser--Raman imagery of Earth's earliest fossils". Nature 416 (6876): 73–6. doi:10.1038/416073a. பப்மெட்:11882894. 
  5. Knoll, Andrew H. 2004. Life on a young planet: the first three billion years of evolution on Earth. Princeton, N.J. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-12029-3
  6. Wilde SA, Valley JW, Peck WH, Graham CM (January 2001). "Evidence from detrital zircons for the existence of continental crust and oceans on the Earth 4.4 Gyr ago". Nature 409 (6817): 175–8. doi:10.1038/35051550. பப்மெட்:11196637. 
  7. Hayes, John M.; Waldbauer, Jacob R. (2006). "The carbon cycle and associated redox processes through time". Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences 361 (1470): 931–950. doi:10.1098/rstb.2006.1840. 
  8. Archer, Corey; Vance, Derek (2006). "Coupled Fe and S isotope evidence for Archean microbial Fe(III) and sulfate reduction". Geology 34 (3): 153–156. doi:10.1130/G22067.1. https://archive.org/details/sim_geology_2006-03_34_3/page/153. 
  9. Cavalier-Smith, Thomas; Brasier, Martin; Embley, T. Martin (2006). "Introduction: how and when did microbes change the world?". Phil. Trans. R. Soc. B 361 (1470): 845–850. doi:10.1098/rstb.2006.1847. 
  10. Summons, Roger E.; et al. (2006). "Steroids, triterpenoids and molecular oxygen". Phil. Trans. R. Soc. B 361 (1470): 951–968. doi:10.1098/rstb.2006.1837. 
  11. Alberts, Bruce (2002). "Chapter 6". Molecular biology of the cell (4th edition ed.). New York: Garland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-3218-1. {{cite book}}: |edition= has extra text (help); Cite has empty unknown parameters: |accessyear=, |origmonth=, |accessmonth=, |chapterurl=, |month=, and |origdate= (help); Unknown parameter |coauthors= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்த்தோற்றவியல்&oldid=3520628" இலிருந்து மீள்விக்கப்பட்டது