உயிர் எந்திரன்

உயிர் எந்திரன் (Living robot) அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் வாழும் எந்திரன்களாகக் கருதப்படும் இவை தங்களுக்கு நிகரான குழந்தைகளை இனப்பெருக்கமும் செய்யும் வல்லமை கொண்டவையாகும்.[1] [2][3]

வரலாறு

தொகு

அமெரிக்காவில் உள்ள வெர்மான்ட், டஃப்ட் மற்றும் ஆர்வார்டு பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் உயிர்-எந்திரன் ஆராய்ச்சியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்விஞ்ஞானிகள் சேர்ந்து முற்றிலும் புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை 2020 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தனர். ஓர் ஆப்பிரிக்க தவளை இனமான செனோபசு லூயிசின் தண்டு உயிரணுக்களைப் பயன்படுத்தி இதை உருவாக்கியதால் செனோபோட்டு 1.0' என்று இந்த வாழும் எந்திரனுக்குப் பெயரிட்டனர்.[4] நன்றாக நகரவும் நீந்தவும் கூடிய இவை ஒரு மில்லிமீட்டரில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே விட்டம் கொண்டவையாகும்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக செனோபோட்டு 2.0 எந்திரன் உருவாக்கப்பட்டது. செனோபோட்டு 3.0 எந்திரன்கள் பற்றிய ஆராய்ச்சி சமீபத்தில் அமெரிக்க நிபுணர்களால் வெளியிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு மற்றும் நெகிழிகளால் எந்திரன்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து வேறுபட்ட உயிரியல் எந்திரன்களை உருவாக்க ஆராய்ச்சி செய்து இவ்விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்டுரை தெரிவிக்கிறது. தற்பொது உருவாக்கப்பட்டுள்ள செனோபோட்டு 3.0 எந்திரன்கள் இனப்பெருக்கம் செய்யும் எந்திரன்களாகும். கணினி உதவியால் இவை வடிவமைக்கப்பட்டு பிறகு பொருத்தப்படுகின்றன.

நீந்திச் சென்று, நூற்றுக்கணக்கான தனித்தனி செல்களை ஒன்று திரட்டி தங்கள் வாய் பகுதியில் தங்களை ஒத்த புதிய குழந்தைகளை இவை உருவாக்குகின்றன. குழந்தை எந்திரன்கள் சில நாள்களில் வெளியே வந்து தாய் செனோபோட்டுகள் போல நகரவும் செயல்படவும் தொடங்குகின்றன.[5]

தடுப்பூசி மாதிரிகளை உருவாக்கவும், பழுதடைந்த மனித உயிரணுக்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தவுமே முதலில் விஞ்ஞானிகள் இத்தகைய உயிருள்ள எந்திரன்களை உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மனிதர்களை குணப்படுத்துவதும் இதனால் சாத்தியமாகலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Robots can now Give Birth". indiaherald.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
  2. "Scientists who created world's first 'living' robots, now say they can reproduce". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-11-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
  3. "Xenobot Babies: World's First Living Robots Can Now Reproduce, Thanks To AI". IndiaTimes (in Indian English). 2021-11-30. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
  4. Poole, Steven (2020-01-16). "Xenobot: how did earth's newest lifeforms get their name?". The Guardian. https://www.theguardian.com/books/2020/jan/16/xenobot-word-of-the-week. 
  5. "உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_எந்திரன்&oldid=3347256" இலிருந்து மீள்விக்கப்பட்டது