உயிர் களைக்கொல்லி

உயிரி களைக்கொல்லி (Bioherbicide) என்பது ஒரு உயிரியல் தன்மையை அடிப்படையாக கொண்ட  களைகளைகளை  கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். களைக்கொல்லிகள்  முக்கியமான  மூன்று  வகைகளில், களைகள்  அல்லது  விரும்பத்தகாத தாவரங்களை கட்டுப்படுத்த பயன்படுகிறது.

பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் பூச்சிக்கொல்லிகள் என்றும் , பூஞ்சைகளைக்  கட்டுப்படுத்தும் மருந்துகள்  பூசணக் கொல்லிகள்  என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றன. பொதுவாக, விவசாயம்  சம்பந்தமான பூச்சிகளை,  எந்த பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தியும் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முழுமையாக  ஒழிக்க இயலாது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு விவசாய பூச்சிக்கும் அதன் எண்ணிக்கையை குறைக்க குறைந்தது ஒரு  இயற்கை எதிரியாவது உள்ளது.  உயிர் களைக்கொல்லிகள் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களை சார்ந்து இல்லாமல், இயற்கை எதிரிகளை கொண்டு உருவாக்கப்படுகிறது. உயிர்   களைக்கொல்லிகள்  மிக முக்கியமான  ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் இது சுற்று சூழலில் செயற்கை  ராசாயனங்களைவிட மிக குறைந்த மாற்றங்களையும், பாதிப்புகளையும்  ஏற்படுத்துகின்றது இந்த  மருந்துகள் ரசாயனங்கள் போன்று  பொது சுகாதார பிரச்சினைகள் ஏதும் ஏற்படுத்துவதில்லை.

இந்த இரண்டு நன்மைகளின் காரணமாக,    உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள் மற்றும் உயிர் களை கொல்லிகளை  பொது சுகாதார பாதுகாப்புகளுக்கான கவனமான  சோதனைகளுக்கு உட்படுத்த தேவை இல்லை.

உயிர் களைக்கொல்லிகள்  பூஞ்சைகள்,பாக்டீரியாக்கள் அல்லது மூத்தவிலங்கு(புரோட்டோசோவா) போன்ற நுண்ணுயிரிகளின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்கள் மூலம்  பெறப்பட்ட கலவைகளாகவோ, அல்லது வேறு தாவர இனங்களில் இருந்து பெறப்பட்ட சாறாகவோ, அல்லது ஒற்றை கலவையாகவோ,அல்லது நச்சுத்தன்மை கொண்ட தாவர எச்சங்களாகவோ   இருக்கலாம்.[1]

பூஞ்சையை அடிப்படையாக கொண்ட உயிர்  களைக்கொல்லிகள் பூஞ்சைகளைக்கொல்லிகள் என்றழைக்கப்படுகிறது.

இந்த துறையில் உயிர் பூச்சிக் கொல்லிகள் மற்றும்  உயிர்களைக்கொல்லிகள் " நேச்சுரல்ஸ்" என அழைக்கப்படுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. Angélica Rossana Castro de Souza, Daiana Bortoluzzi Baldoni, Jessica Lima, Vitória Porto, Camila Marcuz, Carolina Machado, Rafael Camargo Ferraz, Raquel C. Kuhn, Rodrigo J.S. Jacques, Jerson V.C. Guedes, Marcio A. Mazutti, Selection, isolation, and identification of fungi for bioherbicide production, Brazilian Journal of Microbiology, Volume 48, Issue 1, January–March 2017, Pages 101-108, பன்னாட்டுத் தர தொடர் எண் 1517-8382, http://dx.doi.org/10.1016/j.bjm.2016.09.004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_களைக்கொல்லி&oldid=3932718" இலிருந்து மீள்விக்கப்பட்டது