உயிர் தரும் மரம் (நூல்)

உயிர் தரும் மரம் என்பது ஒரு குழந்தைகளுக்கான புத்தகம் ஆகும். இதை எழுதி, வரைந்தவர் ஷெல் சில்வர்ஸ்டீன் என்ற அமெரிக்கர் ஆவார். 1964இல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது. அது சில்வர்ஸ்டீசின் புகழ்பெற்ற புத்தகமாக மாறி, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "குழந்தை இலக்கியத்தில் சிறந்த நெறிகாட்டும் புத்தகங்களில் ஒன்று." என்னும் அங்கிகாரம்பெற்ற புத்தகமாக கருதப்படுகிறது.[1] பன்னாட்டு அளவில் பள்ளிக்கல்வியில் மழலையர் பள்ளிகளில் இரண்டாம் வகுப்புகளில் இருந்து இந்நூல் குழந்தைகளுக்கு பாடமாக வைக்கப்படுகிறது.[2]

உயிர் தரும் மரம்
The Giving Tree
Cover depicting the tree giving away an apple
நூலாசிரியர்ஷெல் சில்வர்ஸ்டீன்
பட வரைஞர்ஷெல் சில்வர்ஸ்டீன்
அட்டைப்பட ஓவியர்ஷெல் சில்வர்ஸ்டீன்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வகைபடப் புத்தகம்
வெளியீட்டாளர்ஹார்ப்பர் & ரோ
வெளியிடப்பட்ட நாள்
அக்டோபர் 7, 1964
ISBN978-0-06-025665-4
இசுரேலின், ஹோலனில் உள்ள தன்னையே தந்த மரம் என்ற பெயரில் உள்ள பூங்கா

பின்னணி

தொகு

சில்வர்ஸ்டீன் 'தன்னையே கொடுத்த மரம்' நூலை வெளியிடும் பதிப்பாளரை கண்டறிய மிகவும் சிரமப்பட்டார்.[3][4] சைமன் & ஸ்கஸ்டர் பதிப்பக ஆசிரியர் இதனை புத்தகமாக வெளியிட மறுத்தார். இது குழந்தைகளை வருத்தும், பெரியவர்களுக்கு மிகவும் எளியது என்று கருதினார்.[3][4] இறுதியில் ஹார்ப்பர் & ரோ பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.[3]

கதைச் சுருக்கம்

தொகு

கதை மாந்தர்களான ஒரு ஆப்பிள் மரமும், ஒரு சிறுவனும் (இந்த சிறுவன் வளர்ந்தாலும் சிறுவன் என்றே சுட்டப்படுகிறான்). ஆவர் இந்த இருவரும் தங்களுக்குள் பேச முடிந்தவர்களாவர். கதை பின்வருமாறு; ஊருக்கு ஒதுக்குப் பறமாக உள்ள ஒரு ஆப்பிள் மரம் அந்த மரத்தின் அடியில் விளையாட ஒரு சிறுவன்வருவான். அவன் அந்த மரத்தைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறுவான், அதன் கிளைகளில் தொங்கி விளையாடுவான், அதன் சுவையான பழங்களை பறித்துத் தின்பான், மரத்துடன் கண்ணாமூச்சி விளையாடுவான், விளையாடிக் களைத்து, அவன் மரத்தின் நிழலில் படுத்து உறங்குவான். இவ்வாறு நாட்கள் சென்றன. அவன் வளரவளர அவர் மரத்திடம் கோரிக்கைகள் வைக்கத் தொடங்கினான். இளமை பருவத்தை அடைந்த பின்னர் சிறுவன் மரத்திடம் பணம் வேண்டும் என்கிறான். மரம் தன்னிடம் உள்ள ஆப்பிள்களை பறித்து விற்றுப் பணம் பெற்றுக்கொள்ளக் கூறுகிறது. பருவ வயதை அடைந்த பின், அந்தப் பையன் தனக்கு ஒரு வீடு வேண்டும் என்கிறான். மரம் அவன் வீடு கட்ட தனது கிளைகளை வெட்டிக்கோள்ள அறிவுறுத்துகிறது. நடுத்தர வயது அடைந்த பிறகு, சிறுவன் ஒரு படகு வேண்டும் என விரும்புகிறான், அதற்கு மரம் தனது அடிமரத்தை வெட்டிக்கொண்டு அவனை படகு செய்ய அனுமதிக்கிறது. இவ்வாறு மரம் அவனுக்கு அனைத்தையும் கொடுத்து மகிழ்ச்சியடைந்தது. இறுதி பக்கங்களில், சிறுவன் (முதிய வயதில்) மீண்டும் ஒருமுறை மரத்தை சந்திக்கிறான். மரம் தன்னிடம் ஆப்பிள்கள், கிளைகள், தண்டு என கொடுக்க எதுவுமில்லையே என வருந்தி என்னிடம் உனக்கு கொடுக்க எதுவுமில்லையே என் அடிக்கட்டையைத்தவிர என்றது அதற்கு சிறுவன் எனக்கு எதுவும் வேண்டம் உன் அடிக்கட்டையே போதும் இந்த அமைதியான இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்றான். அவன் அமர அடிக்கட்டையை கொடுத்து. முழு கதையிலும் ஒவ்வொரு பத்தியிலும் "மரம் மகிழ்ச்சியாக இருந்தது." என்று முடியும்.

வரவேற்பு

தொகு

இப்புத்தகம் வாய்வழியாகவே பிரபலமடைந்தது. ; உதாரணமாக, தேவாலயங்களில் "கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சிக்கு ஒரு உவமை என பாராட்டினார்."[3] 2001 ஆம் ஆண்டுவரை இப்புத்தகம் 5 மில்லியன் பிரதிகள் விற்று, நன்கு விற்பனையாகும் குழந்தை இலக்கிய நூல்களின் பட்டியலில் 14 வது இடத்தை ' பப்ளிஷர்ஸ் வீக்லி ' அளித்தது.[5] 2011வரை, 8.5 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டு உள்ளது.[4] 1999–2000 ஆண்டு காலகட்டத்தில் இணையத்தில் குழந்தைகளிடம் எடுத்த புள்ளிவிவரத்தில் குழந்தைகளுக்கான 100 சிறந்த நூல்களில் இந்நூல் 24ஆம் இடம் பெற்றது.[6] இந்நூலை தமிழில் உதயசங்கர் மொழிபெயற்பில், கே.பி. முரளீதரன் வரைந்த ஓவியங்களுடன், உயிர் தரும் மரம் என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.[7]

குறிப்புகள்

தொகு
  1. Bird, Elizabeth (May 18, 2012). "Top 100 Picture Books #85: The Giving Tree by Shel Silverstein". School Library Journal "A Fuse #8 Production" blog. பார்க்கப்பட்ட நாள் May 18, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "The Giving Tree By Shel Silverstein". Scholastic.
  3. 3.0 3.1 3.2 3.3 Cole, William (September 9, 1973). "About Alice, a Rabbit, a Tree...". The New York Times: p. 394. 
  4. 4.0 4.1 4.2 Paul, Pamela (September 16, 2011). "The Children’s Authors Who Broke the Rules". The New York Times. http://www.nytimes.com/2011/09/18/books/review/the-childrens-authors-who-broke-the-rules.html. பார்த்த நாள்: May 18, 2013. 
  5. Roback, Diane, Jason Britton, and Debbie Hochman Turvey (December 17, 2001). "All-Time Bestselling Children's Books". Publishers Weekly 248 (51). http://www.publishersweekly.com/pw/print/20011217/28595-all-time-bestselling-children-s-books.html. பார்த்த நாள்: May 18, 2013. 
  6. National Education Association. "Kids' Top 100 Books". Archived from the original on பிப்ரவரி 1, 2013. பார்க்கப்பட்ட நாள் May 18, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்_தரும்_மரம்_(நூல்)&oldid=3928037" இலிருந்து மீள்விக்கப்பட்டது