உயிலட்டி அருவி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவி

உயிலட்டி அருவி (Uylatti Waterfall's) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து கூக்கல்துறை செல்லும் சாலையில் இடது புறத்தில் அமைந்துள்ளது. கூக்கல் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட உயிலட்டி கிராமத்திற்கு அருகிலும் கூக்கல்துறையின் கிழக்குப் பகுதியில் 1 கி.மீ . தொலைவிலும் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[1] கூக்கல்துறை நீர்வீழ்ச்சி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பாறை இடுக்குகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவது இதன் சிறப்பாகும்.[2] இந்த அருவியிலிருந்து தண்ணீர் ஓடை வழியாக உயிலட்டி மற்றும் கூக்கல்தொரை கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "கோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி". www.dinakaran.com. Archived from the original on 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
  3. "Tamil Newspaper, Tamilnadu News, World news, Latest Tamil News, Tamilnadu Politics, Tamil News". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிலட்டி_அருவி&oldid=3723968" இலிருந்து மீள்விக்கப்பட்டது