உரிச்சொற் பனுவல்

உரிச்சொல் அல்லது உரிச்சொற் பனுவல் எனப்படுபவை தொல்காப்பியர் அடியொற்றி சொற்களுக்கு விளக்கம் தரும் நூல்கள் அல்லது படைப்புகளைக் குறிக்கும். [1] இந்த வகைப் படைப்புகள் நிகண்டுகளுக்கும், தற்கால அகராதிகளுக்கும் முன்னோடியாகக் கருதப்படுகின்றன.

தொல்காப்பியர் முறைமை

தொகு

தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

  • உரியியலில் அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார். "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" ("பொருள் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம்") என்று குறிப்பிடுகிறார்.
  • மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற்பெயர் முதலியவற்றை நிகண்டுகள் போல் தொகுத்துக் கூறி, அவை தமிழ் மரபுப்படி வழங்கும் வழக்கையும் குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சொற்பொருள் உணர்த்தும் மரபு". tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிச்சொற்_பனுவல்&oldid=1861408" இலிருந்து மீள்விக்கப்பட்டது