தொல்காப்பியம் உரியியல் செய்திகள்
(உரியியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொல்காப்பியத்தில் உள்ள சொல்லதிகாரம் ஒன்பது பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று உரியியல்.
உரிச்சொல் விளக்கம்
உரியியலில் சொல்லப்படுபவை
தொகுஉரிச்சொல் தொல்காப்பியர் விளக்கம்
தொகுபொது விளக்கம்
தொகுபெயருக்கென்றும், வினைக்கென்றும் உரிமை பூண்டு அவற்றின் உரி(தோல்) போலத் தமிழில் கலந்து வரும் சொற்களைத் தமிழர் உரிச்சொல் எனப் பாகுபடுத்திக் காட்டினர். இதனை, adjective, adverb வகை எனலாம். இந்தச் சொற்கள் பெயரையோ, வினையையோ குறிப்பவை அல்ல. அவற்றிற்கு உரிமை பூண்டு அவற்றை விளக்குபவை.
இரங்கல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அது இசைப்பொருளைத் தரும் என்று தொல்காப்பியம் காட்டுகிறது.
"தண்பெயல் பொழிந்தென நீர் இரங்கு அரைநாள்" -நற்றிணை 341
இதில் இரங்கல் என்னும் சொல் இரங்கு என உரிந்து நிற்கிறது. இப்படிப் பெரும்பான்மை உரிந்து நிற்கும் சொல் உரிச்சொல்.
இது நீர் என்னும் பெயர்ச்சொல்லுக்கு உரிமை பூண்டு நிற்பதாலும் உரிச்சொல்.
தொல்காப்பியம் தரும் விளக்கம்
தொகு- நூற்பா 1,2
உரிச்சொல்லானது,
- இசை, குறிப்பு, பண்பு ஆகியவற்றை உணர்த்தும்.
- தன் உடலைப் பெயர்ச்சொல்லோடும், வினைச்சொல்லோடும் ஒன்றுபடுத்திக்கொள்ளும்.
- ஒரு சொல் பல பொருட்கு உரிமை பூண்டு விளங்கும். (தொல்காப்பியத் தொகுப்பில் 14 சொற்கள் உள்ளன)
- பல சொல் ஒரு பொருட்கு உரிமை பூண்டு விளங்கும். (தொல்காப்பியத் தொகுப்பில் 107 சொற்கள் உள்ளன)
தொல்காப்பியர் வேண்டுகோள்
தொகு- இந்தச் சொல்லுக்கு இன்ன பொருள் என்றும், இந்தப் பொருளை இன்னின்ன சொற்கள் உணர்த்தும் என்று இங்குச் சொல்லப்படுகின்றன. இவை அன்றி வேறு வகையில் அமையுமாயினும் அவற்றையும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
- எல்லாருக்கும் பொருள் விளங்கும் உரிச்சொற்கள் இங்குக் காட்டப்படவில்லை. சிலருக்குப் புரியாத உரிச்சொற்கள் மட்டுமே இங்குக் கூறப்படுகின்றன.
தொல்காப்பியரின் முடிப்புரை (புறனடை)
தொகு- நூற்பா 91 முதல் 98
- உரிச்சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும் மொழியோடு இணைத்துப் பார்த்தால் உரிச்சொல்லின் பொருள் விளங்கும்.
- இங்கு உரிச்சொல்லுக்குக் கூறப்படாத பொருள் தோன்றினால், அவற்றையும் கொள்ளுதல் வேண்டும்.
- ஒரு சாெல்லுக்குக் கூறப்பட்ட பொருளுக்குப் பொருள் காண்போமானால் அது வரம்பு இன்றி விரிந்துகொண்டே செல்லும்.
- பொருளை உணர்ச்சியால்தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.
- இந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள் தோன்றியது எப்படி என்பதை சொல்லும்போது தெரியாது. உணரும்போதுதான் தெரியும்.
- உரிச்சொல்லைப் பிரித்துத் தனியே சொல்லக்கூடாது. மொழியோடு சேர்த்துத்தான் சொல்ல வேண்டும்.
- உரிச்சொல்லை உணர்ந்துகொள்ள முன்னோர் கூறிய ஓம்படை ஆணையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- உரிச்சொல்லுக்குப் பொருள்வரம்பு இல்லை.
தொல்காப்பியம் காட்டும் உரிச்சொற்கள்
தொகுபல சொல் ஒரு பொருட்கு உரிமையாகத் தோன்றுபவை (26)
தொகு(1-10)
தொகு- (அச்சம்) = பேம், நாம், உரும் -67
- (அரவம்) = கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் -51
- (இசை) = துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல் -60
- (இளமை) = மழ, குழ -14
- (உள்ளதன் நுணுக்கம்) = ஓய்தல், ஆய்தல், நிழத்துல், சாஅய் -32
- (உள்ளது சிறத்தல்) = கூர்ப்பு, கழி -16
- (சுழற்சி) = அலமரல், தெருமரல் -13
- (செறிவு) = விறப்பு, வெறிப்பு, உறப்பு -49
- (நசை) = நம்பு, மேவு -31
- (நடுக்கம்) = அதிர்வு, விதிர்ப்பு -18
(11-20)
தொகு- (நிறத்து உரு) = கறுப்பு, சிவப்பு -75
- (நிறன்) = குரு, கெழு -5
- (நுண்மை) = நொசிவு, நுழைவு, நுணங்கு -76
- (நெடுமை) = வார்தல், போகல், ஒழுகல் -19
- (நேர்பு) = வார்தல், போகல், ஒழுகல் -19
- (நோய்) = பையுள், சிறுமை -43
- (பரத்தல்) = ஞெமிர்தல், பாய்தல் -63
- (பெட்பு) = பிணை, பேண் -40
- (பெருமை) = தட, கய, நளி -22
- (மிகுதி) = உறு, தவ, நனி -3
(21-26)
தொகு- (வழுத்தல்) = பரவு, பழிச்சு -84
- (வறுமை) = இலம்பாடு, ஒற்கம் -62
- (விடல்) = தீர்தல், தீர்த்தல் -20
- (விரைவு) = கதழ்வு, துனைவு -17
- (விளையாட்டு) = கெடவரல், பண்ணை -21
- (வெகுளி) = கறுப்பு, சிவப்பு -74
ஒரு சொல் பல பொருட்கு உரிமையாகத் தோன்றுபவை (16)
தொகு(1-10)
தொகு- அழுங்கல் = 1 அரவப் பொருள -51 2 இரக்கம் - 52, 3 கேடு 52
- இரங்கல் = 1 இசைப்பொருள் -60 2 கழிந்த பொருள் -61
- எற்றம் = 1 துணிவு -39, 2 நினைவு -39
- ஒழுகல் = 1 நெடுமை -19 2 நேர்பு -19
- கடி = 1 அச்சம் -85 2 ஐயம், -86 3 கரிப்பு -86 4 காப்பு -85 5 கூர்மை -85 6 சிறப்பு -85 7 புதுமை -85 8 மிகுதி -85 9 முன்தேற்று -85 10 வரைவு -85 11 விரைவு -85 12 விளக்கம்
- கய = 1 பெருமை -22, 2 மென்மை -24
- தட = 1 கோட்டம் -23 (தடமருப்பு எருமை) 2 பெருமை -22 (தடந்தாள் களிறு)
- தா = 1 வருத்தம் -46 2 வலி -46
- நளி = 1 செறிவு -25 2 பெருமை -22 (நளிமுந்நீர் நாவாய் ஓட்டி)
- நனவு = 1 அகலம் -78 2 களன் -78
(11-15)
தொகு- பணை = 1 பிழைத்தல் -41, | 2 பெருப்பு -41
- போகல் = 1 நெடுமை -19, | 2 நேர் -19
- மத = 1 மடன் -79, | 2 வலி(மை) -79, | 3 மிகுதி, | 4 வனப்பு -80
- வார்தல் = 1 நேர் -19 | 2 நெடுமை -19
- விழுமம் = 1 சீர்மை(சிறப்பு), 2 இடும்பை -55
- விறப்பு = 1 செறிவு -49, | 2 வெறூஉ -50
ஒரு சொல் ஒரு பொருள் (106)
தொகு(1-10)
தொகு- அதிர்வு = நடுக்கம் -18
- அமர்தல் = மேவல் -82
- அரி = ஐம்மை -58
- அலமரல் = சுழற்சி -13
- ஆய்தல் = உள்ளதன் நுணுக்கம் -32
- இசைப்பு = இசை -12
- இயம்பல் = இசைப்பொருள் -60
- இயைபு = புணர்ச்சி -11
- இலம்பாடு = வறுமை -62
- இன்னல் = இன்னாமை -6
(11-20)
தொகு- உகப்பு = உயர்தல் -8
- உசா = சூழ்ச்சி -72
- உயா = உயங்கல் (மனத் தளர்ச்சி) -71
- உரு = உட்கு -4
- உரும் = அச்சம் -67
- உவப்பு = உவகை -8
- உறப்பு = செறிவு -49
- உறு = மிகுதி -3
- எய்யாமை = அறியாமை -44
- எறுழ் = வலி(மை) -90
(21-30)
தொகு- ஏ = பெற்று -7
- ஐ = வியப்பு -87
- ஒற்கம் = வறுமை -62
- ஓய்தல் = உள்ளதன் நுணுக்கம் -32
- கதழ்வு = விரைவு -17
- கம்பலை = அரவப் பொருள -51
- கமம் = நிறைந்து இயலுதல் -57
- கருவி = தொகுதி -56
- கலி = அரவப் பொருள -51
- # கவர்வு = விருப்பு -64
(31-40)
தொகு- கவவு = அகத்திடுதல் -59
- கழி = உள்ளது சிறத்தல் -16
- கழும் = மயக்கம் -53
- கறுப்பு = வெகுளி -74
- குரு = நிறன் -5
- குழ = இளமை -14
- கூர்(ப்பு) = உள்ளது சிறத்தல் -16
- கெடவரல் = விளையாட்டு -21
- கெழு = நிறன் -5
- சாய் = உள்ளதன் நுணுக்கம் -32
(41-50)
தொகு- சாயல் = மென்மை -27 (சாயிறைப் பணைத்தோள்)
- சிலைத்தல் = இசைப்பொருள் -60
- சிவப்பு = வெகுளி -74
- சிறுமை = நோயின் பொருள் -43
- சீர்த்தி = மிகுபுகழ் -15
- சும்மை = அரவப் பொருள் -51
- செல்லல் = இன்னாமை -6
- செழுமை = வளன், கொழுப்பு -54
- சேர் = திரட்சி -65
- ஞெமிர்தல் = பரத்தல் -63
(51-60)
தொகு- தவ = மிகுதி -3
- தீர்த்தல் = விடல் -20
- தீர்தல் -20
- துயவு = அறிவின் திரிவு (பித்து) -70
- துவன்று = நிறைவு -34 (ஆரியர் துவன்றிய பெரிசை இமையம்)
- துவைத்தல் = இசைப்பொருள் -60
- துனைவு = விரைவு -17
- தெருமரல் = சுழற்சி -13
- தெவ்வு = பகை -48
- தெவு = கொளல் பொருட்டு (கொள்ளும் பொருளை உடையது) -47
(61-70)
தொகு- நம்பு = நசை -31
- நன்று = பெரிது -45
- நனி = மிகுதி -3
- நாம் = அச்சம் -67
- நிழத்தல் = உள்ளதன் நுணுக்கம் -32
- நுணங்கு = நுண்மை -76 (நுணங்கிய கேள்வியர் – திருக்குறள்)
- நுழைவு = நுண்மை -76 (நுண்மாண் நுழைபுலம்)
- நொசிவு = நுண்மை -76
- பசப்பு = நிறன் -10
- படர் = உள்ளல் -42
(71-80)
தொகு- படர் = செலவு(செல்லல்) -42
- பண்ணை = விளையாட்டு -21
- பயப்பு = பயன் -9
- பரவு = வழுத்து -84
- பழிச்சு = வழுத்து -84
- பழுது = பயனின்மை -26 (பொறி பழுதாயிற்று)
- பாய்தல் = பரத்தல் -63
- பிணை = பெட்பு -40
- புரை = உயர்பு -4
- புலம்பு = தனிமை -33
(81-90)
தொகு- புனிறு = ஈன்றணிமை -77
- பேண் = பெட்பு -40
- பேம் = அச்சம் -67
- பையுள் = நோயின் பொருள -43
- பொற்பு = பொலிவு -37
- மல்லல் = வளன் -7
- மழ = இளமை -14
- மாதர் = காதல் -30 (கனங்குழை மாதர்கொல் = கனங்குழைமேல் காதலோ – திருக்குறள்)
- மாலை = இயல்பு -15
- முரஞ்சல் = முதிர்வு -35
(91-100)
தொகு- முழுது = எஞ்சாப் பொருட்டு (ஏதும் மிச்சமில்லாத பொருளைத் தருவது) -28 (முழுதும் தருக!)
- முனைவு = முனிவு -88
- மேவு = நசை -31
- யாண் = கவின் -83
- யாணர் = புதிது -81
- வம்பு = நிலையின்மை -29
- வய = வலி(மை) -68
- வயா = வேட்கைப் பெருக்கம் -73
- வறிது = சிறிது -38
- வார்தல் = நெடுமை -19
(101-107)
தொகுகருவிநூல்
தொகு- தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
- தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
- தொல்காப்பியம் மூலம்
- தொல்காப்பியம் மூலம் பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்