உரியங்கடை

மங்கோலிய தளபதி

உரியங்கடை[1] என்பவர் மங்கோலியப் பேரரசில் பணியாற்றிய உரியங்கை இனத் தளபதி ஆவார். சாங் அரசமரபுக்கு எதிராக மங்கோலியப் பேரரசு நடத்திய பல தாக்குதல்களுக்கு இவர் தலைமை தாங்கினார். மங்கோலியர்களின் வியட்னாம் மீதான முதல் படையெடுப்புக்கும் இவர் தலைமை தாங்கினார்.[2][3][4] இவர் தந்தை சுபுதை. மங்கோலியத் தளபதி மற்றும் ஆளுநர் அசு இவரது மகன் ஆவார்.[5]

உரியங்கடை
தாய்மொழியில் பெயர்ᠤᠷᠢᠶᠠᠩᠬᠠᠳᠠᠢ
பிறப்பு1201 (1201)
இறப்பு1272 (அகவை 70–71)
தேசியம்உரியங்கை
பணிதளபதி
பிள்ளைகள்அசு
உறவினர்கள்செல்மே (பெரியப்பா)

வாழ்க்கை மற்றும் ஐரோப்பியப் படையெடுப்புகள் தொகு

இவர் சுபுதைக்கு மகனாக 1201ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பழங்குடியினத்தின் பெயர் உரியாங்கை ஆகும். இதன் காரணமாக உரியாங்கடை என்று இவருக்கு பெயர் வைக்கப்பட்டது.[6] இவரது பெரியப்பா மற்றொரு மங்கோலியத் தளபதி செல்மே ஆவார்.[7][8] ஒரு நாட்டுப்புறக் கதையின்படி தன்யூபு ஆற்றங்கரையில் தனது மகன் உரியாங்கடை கையால் இறக்க வேண்டுமென சுபுதை விரும்பியதாகக் கூறப்படுவதுண்டு.[9]

1241ஆம் ஆண்டு மங்கோலியர்களின் கிழக்கு ஐரோப்பா மீதான படையெடுப்பில் இவர் ஒரு சிறந்த தளபதியாக செயல்பட்டார்.[10][11] பிரெஞ்சு சீனவியலாளரான ஜீன்-பியரி அபெல்-ரெமுசட்டின் கூற்றுப்படி, இவர் கீவ ருஸ், போலந்து மற்றும் செருமானிய நிலங்களின் மீதான மங்கோலியப் படையெடுப்பில் கலந்து கொண்டார். பிறகு சீனாவுக்கு அனுப்பப்பட்டார்.[12]

உசாத்துணை தொகு

  1. Hà, Văn Tấn; Phạm, Thị Tâm (2003). "III: Cuộc kháng chiến lần thứ nhất" (in vi). Cuộc kháng chiến chống xâm lược Nguyên Mông thế kỉ XIII. People's Army Publishing House. பக். 66–88. 
  2. Yang, Bin (2009). "Chapter 4 Rule Based on Native Customs". Between winds and clouds: the making of Yunnan (second century BCE to twentieth century CE). Columbia University Press. பக். 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0231142540. http://www.gutenberg-e.org/yang/chapter4.html. 
  3. Stephen G. Haw (2013). "The deaths of two Khaghans: a comparison of events in 1242 and 1260". Bulletin of the School of Oriental and African Studies, University of London 76 (3): 361–371. doi:10.1017/S0041977X13000475. 
  4. Atwood, Christopher Pratt (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. Facts of File. New York. பக். 579. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-4671-3. https://archive.org/details/encyclopediaofmo0000atwo/page/579. 
  5. Atwood, Christopher Pratt (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. Facts of File. New York. பக். 579. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-4671-3. https://archive.org/details/encyclopediaofmo0000atwo/page/579. 
  6. Weatherford, Jack (2017). Genghis Khan and the Quest for God: How the World's Greatest Conqueror Gave Us Religious Freedom. Penguin. பக். 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0735221178. 
  7. Weatherford, Jack (2017). Genghis Khan and the Quest for God: How the World's Greatest Conqueror Gave Us Religious Freedom. Penguin. பக். 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0735221178. 
  8. Richard A. Gabriel (2004). Subotai the Valiant: Genghis Khan's Greatest General. Westport, Conn.: Praeger. பக். 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-275-97582-7. https://books.google.com/books?id=ePgHOJs0YU0C&pg=PA6. 
  9. Weatherford, Jack (2017). Genghis Khan and the Quest for God: How the World's Greatest Conqueror Gave Us Religious Freedom. Penguin. பக். 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0735221178. 
  10. Weatherford, Jack (2017). Genghis Khan and the Quest for God: How the World's Greatest Conqueror Gave Us Religious Freedom. Penguin. பக். 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0735221178. 
  11. Jean-Pierre Abel-Rémusat (1829). Nouveaus Mélanges Asiatiques. 2. Paris: Schubart and Heidelhoff. பக். 96–97.  "A la mort d'Ogodaï, il y eut une grande assemblée de tous les princes de la famille de Tchingkis. Batou ne voulait pas s'y rendre; mais Souboutaï lui représenta qu'étant l'aîné de tous ces princes, il lui était impossible de s'en dispenser. Batou partit donc pour l'assemblée qui se tint sur le bord de la rivière Yetchili. Après l'assemblée, Souboutaï revint a son campement sur le Tho-na (Danube), et il y mourut a l'âge de soixante-treize ans. Conformément a l'usage des Chinois, on lui donna un titre qui rappelait ses plus belles actions: ce fut le titre de roi du Ho-nan, à cause de la conquête de cette province qu'il avait enlevée aux Kin. L'épithète honorifique qui fut jointe à son nom fut celle de fidèle et invariable. Il laissa un fils nommé Ouriyangkhataï, qui, disent les Chinois, apres avoir soumis les tribus des Russes, des Polonais, et des Allemands, fut envoyé pour conquérir le royaume d'Awa et le Tonquin."
  12. Jean-Pierre Abel-Rémusat (1829). Nouveaus Mélanges Asiatiques. 2. Paris: Schubart and Heidelhoff. பக். 96–97.  "A la mort d'Ogodaï, il y eut une grande assemblée de tous les princes de la famille de Tchingkis. Batou ne voulait pas s'y rendre; mais Souboutaï lui représenta qu'étant l'aîné de tous ces princes, il lui était impossible de s'en dispenser. Batou partit donc pour l'assemblée qui se tint sur le bord de la rivière Yetchili. Après l'assemblée, Souboutaï revint a son campement sur le Tho-na (Danube), et il y mourut a l'âge de soixante-treize ans. Conformément a l'usage des Chinois, on lui donna un titre qui rappelait ses plus belles actions: ce fut le titre de roi du Ho-nan, à cause de la conquête de cette province qu'il avait enlevée aux Kin. L'épithète honorifique qui fut jointe à son nom fut celle de fidèle et invariable. Il laissa un fils nommé Ouriyangkhataï, qui, disent les Chinois, apres avoir soumis les tribus des Russes, des Polonais, et des Allemands, fut envoyé pour conquérir le royaume d'Awa et le Tonquin."
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரியங்கடை&oldid=3348975" இலிருந்து மீள்விக்கப்பட்டது