உருகுதல்

பொருள் கட்ட மாற்றம்

உருகுதல் என்பது ஒரு பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்ம நிலைக்கு மாறும் ஒரு செயற்பாடு ஆகும். திண்மப் பொருளொன்றின் உள் ஆற்றல், பொதுவாக, வெப்பம் ஊட்டப்படுவதன் மூலம் ஒரு குறித்த வெப்பநிலைக்குக் கூட்டப்படும்போது, அது நீர்மமாக மாறுகின்றது. மேற்சொன்ன குறித்த வெப்பநிலை உருகுநிலை எனப்படுகின்றது. உருகுநிலை பொருளொன்றின் இயல்புகளுள் ஒன்றாகும்.

Melting icecubes.gif

மறு திசை நிலைமாற்றம் அதாவது, நீர்ம நிலையிலிருந்து திண்மநிலைக்கு மாறுதல் உறைதல் எனப்படும். உறைதல் நிகழும் வெப்பநிலை உறைநிலை ஆகும். ஒரு பொருளின் உறைநிலையும், உருகுநிலையும் ஒரே வெப்பநிலையில் அமையும் என்பதில்லை. மீக்குளிர்வு (supercooling) எனும் தோற்றப்பாடு இதற்கு ஒரு சான்றாகும். மிகவும் தூய்மையான கண்ணாடி மேற்பரப்பில் இருக்கும் நீரை, அது உறையா வண்ணம் உருகு நிலைக்குப் பல பாகைகள் கீழாகக் குளிர்விக்க முடியும். இதன் காரணமாக உருகுநிலையைப் போல் உறைநிலை பொருளொன்றின் சிறப்பியல்பாகக் கொள்ளப்படுவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருகுதல்&oldid=2741778" இருந்து மீள்விக்கப்பட்டது