உருக்சானா கௌசர்
உருக்சானா கவுசர் (Rukhsana Kausar) கீர்த்தி சக்கரம் (பிறப்பு 1989) இந்தியாவின் ஜம்மு -காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் (ஜே & கே), 2009 இல் ஒரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை தனது வீட்டில் சுட்டுக் கொன்றதற்காக அறியப்பட்ட அப்பர் கல்சியைச் சேர்ந்த குஜ்ஜர் பெண் ஆவார்.இவர் நூர் உசேன் மற்றும் ரசிதா பேகம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பத்தாம் வகுப்பு இடைநிறுத்தப்பட்ட இவருக்கு, லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவர் அபு ஒசாமாவை, கோடாரி மற்றும் ஏகே 47 துப்பாக்கியைப் பயன்படுத்தி கொன்றதற்காக இந்தியா தேசிய துணிச்சல் வீரர் விருது வழங்கப்பட்டது. இவருக்கு ஜஜாசு எனும் ஒரு இளைய சகோதரர் இருக்கிறார், இவர் வீட்டுப் படையெடுப்பில் ஈடுபட்ட மற்ற பயங்கரவாதிகளைத் துரத்தவும், பின்னர் காவல்துறையைத் தொடர்புகொள்ளவும் உதவினார்.[1][2][3]
இவரும் இவரது சகோதரரும் தங்கள் செயல்களுக்காக பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளனர்.
தீவிரவாத சம்பவம்
தொகுஞாயிற்றுக்கிழமை இரவு, 27 செப்டம்பர் 2009 அன்று இரவு 9:30 மணியளவில், மூன்று போராளிகள் ருக்சானாவின் மாமா வக்கலத் உசைனின் வீட்டிற்கு வந்தனர். இவரை இவரது மூத்த சகோதரர் நூர் உசைனின் பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர். நூர் உசேன் கதவை திறக்காததால், மூவரும் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர்.[3] அதற்குள், இவர் தனது மனைவி ரசிதா பேகத்துடன் ருக்சானாவை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தார்.[4] ருக்சனாவை தங்களிடம் ஒப்படைக்க இவர்கள் கோரினர். இவரது பெற்றோரும் இளைய சகோதரர் ஐஜாசும் எதிர்க்க முயன்றபோது, தீவிரவாதிகள் இவர்களை துப்பாக்கியால் தாக்கத் தொடங்கினர். ருக்சானா தனது மறைவிடத்திலிருந்து கோடரியுடன் வெளிப்பட்டு, லஸ்கர் இ தொய்பா தளபதியின் தலையில் அடித்தார்.[4][5] தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார், வக்கலத் உசைனின் கையில் காயம்பட்டது. மற்ற குடும்ப உறுப்பினர்கள் ருக்சானாவுடன் சேர்ந்து போராளிகளைத் தாக்கினர். ருக்சானா தளபதியின் ஏ.கே .47 துப்பாக்கியை எடுத்து, மற்ற தீவிரவாதியிடம் இருந்து இன்னொன்ரு துப்பாக்கியினை மீட்டெடுத்து, அதை தன் சகோதரரிடம் வீசினார். ருக்சானா தளபதியை சுட்டுக் கொன்றார், இவரும் இவருடைய சகோதரனும் மற்ற போராளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, தப்பி ஓடும்படி கட்டாயப்படுத்தினர்.[1][2][3][5][6] ருக்சானாவும் இவருடைய சகோதரனும் தங்கள் குடும்பத்தை ஷாத்ரா ஷெரிஃப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆயுதங்களை ஒப்படைத்தனர். போகும் வழியில், தீவிரவாதிகள் விலகி இருப்பதை உறுதி செய்ய, இவருடைய சகோதரர் காவல் நிலையத்தை அடையும் வரை சீரான இடைவெளியில் வானினை நோக்கி சுட்டார்.
கொல்லப்பட்ட தீவிரவாதி பின்னர் லஸ்கர்-இ-தொய்பாவின் தளபதி அபு ஒசாமா என அடையாளம் காணப்பட்டார்.[3] ருக்சனாவின் தாயின் கூற்றுப்படி, இவர் முன்பு ருக்சனாவை எச்சரிக்கையாக இருக்குமாறு மிரட்டினார்.
பிரச்சினைக்குரிய இடம்
தொகு- முதன்மை கட்டுரைகள்: ரஜோரி மற்றும் ரஜோரி மாவட்டம் .
ருக்சானாவின் வீடு அமைந்துள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஷாத்ரா ஷரீஃப் இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே போர் நிறுத்தக் கோட்டிலிருந்து 20 மைல்கள் (32 km) தூரத்தில் உள்ளது. இது 2008 மும்பை தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுவின் மறைவிடமாக அறியப்படும் அடர்ந்த காடுகளுக்கு அருகில் உள்ளது.
பின்விளைவு
தொகுஇவரது துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பிறகு, ருக்சனா கவுசர் கூறினார்:
- "எனக்கு ஜம்முவில் வேலை வேண்டாம், ஆனால் டெல்லியில். மத்திய அரசு எனக்கு வேலை கொடுக்க வேண்டும்... நாங்கள் அங்கு பாதுகாப்பாக இருப்போம். நான் ஜம்முவில் இல் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள எனது வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை, ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு, பயங்கரவாதிகள் என்னையும் எனது குடும்பத்தினரையும் கொல்ல நினைப்பர்" எனக் கூறினார்.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 PTI (31 October 2009). "Terrorists attack Jammu braveheart Rukhsana's house". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 25 October 2012. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 India Blooms News Service (3 November 2009). "I fear my life in J&K: Rukhsana". Sify.com. Archived from the original on 14 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Centre announces bravery award for Rukhsana". Zeenews.com. 7 October 2009. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009.
- ↑ 4.0 4.1 PTI (26 November 2009). "Brave girl Rukhsana pays homage to Nariman House victims". Zeenews. பார்க்கப்பட்ட நாள் 27 December 2009.
- ↑ 5.0 5.1 Admin (8 January 2010). "Rukhsana to get bravery award, Taj Hotel hero Zaheen Mateen also in the list". TCN. பார்க்கப்பட்ட நாள் 9 January 2010.
- ↑ Express News Service (18 Nov 2009). "Rukhsana to be felicitated in Gujarat". Ahmedabad: Indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 27 December 2009.