ஏகே-47 (Ak-47, 1947 இன் கலாசுனிக்கோவ் தானியங்கி துப்பாக்கி) 7.62 மிமீ தாக்குதல் துப்பாக்கி சோவியத் ஒன்றியத்தில் மிக்கைல் கலாசுனிக்கோவ் என்பவரால் இரு வகையாக உருவாக்கப்பட்டது.

ஏகே-47
A வகை 2 ஏகே-47, முதல் தானியங்கி எந்திர மாற்றுவடிவ சுடுகலன்.
வகைதாக்குதல் புரிதுமுக்கி
அமைக்கப்பட்ட நாடு சோவியத் ஒன்றியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1949–பயன்பாட்டுக்கு வந்தது.
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்மிகைல் கலாஷ்நிக்கோவ்
வடிவமைப்பு1944–1946
தயாரிப்பாளர்இஸ்மாஷ்
அளவீடுகள்
எடை4.3 கிகி தோட்டாப்பெட்டி வெற்றாக இருக்கும் நிலையில்.
நீளம்870 மிமீ (34.3 அங்) நிலை மரப்பிடியுடன்

875 மிமீ (34.4 அங்) விரிமடிப்புப் பிடியுடன்

645 மிமீ (25.4 அங்) மடிப்பு பிடியுடன்.
சுடு குழல் நீளம்415 மிமீ (16.3 அங்) (சுடு குழல் நீளம்)

தோட்டாதோட்டா 7.62x39 மிமீ (M43)
வெடிக்கலன் செயல்வாயு இயக்கி, சுழலும் தன்மை
சுடு விகிதம்600 சுற்றுகள்/குறைந்தபட்சம்
செயல்திறமிக்க அடுக்கு100–800 பயன்தக்கவாறு சுற்றுமாற்று.
கொள் வகைதொடர்ந்து தோட்டா நிரப்பா நிலையில் அடுத்தடுத்து சுடவல்ல 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல,மற்றும் ஒத்தியலக்கூடிய 40- சுற்றுப் பெட்டி அல்லது 75-சுற்றுகள் வெடிமருந்துப் பெட்டி,ஆர் பி கே-(RPK)
காண் திறன்பயன்தக்கவாறு மாற்றியமைக்கவல்லது,இரும்பு சுற்றுடன், 378 மிமீ சுற்று ஆரத்துடன்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
AK-47
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஒன்று நிலையான பிடியுடன் (Fixed Stock) கூடிய ஏகே 47 மற்றொன்று ஏகேஎஸ் 47 உலோகத் தோள்தாங்கு பிடியுடன் (Metal shoulder stock) தயாரிக்கப்பட்டது.

இந்தத் துப்பாக்கி 1944 முதல் 1946 வரை வீரர்கள் பழகுவதற்காக சோதனை முயற்சியாக இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது. 1949 முதல் அதிகாரப்பூர்வமாக சோவியத் இராணுத்தில் சுடுகலனாக (Carbine) அல்லது துப்பாக்கியாக சேர்க்கப்பட்டது.

இதுதான் முதன் முதலில் குறைந்த செலவில் நீடித்து உழைக்கக்கூடிய, பயன்படுத்துவதற்கு எளிதான தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கியாகும். உலகளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியும் இதுவே.

இரண்டாம் உலகப்போரின் போது தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டு அதன்படி உருவாக்கப்பட்டு உலகப்போர் முடிவுற்றபின் பயன்பாட்டுக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏகே-47&oldid=3437519" இலிருந்து மீள்விக்கப்பட்டது