உருது அங்காடி

பாக்கித்தான் அங்காடி

உருது அங்காடி (Urdu Bazaar) என்பது பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் உள்ள ஒரு புத்தக அங்காடியாகும். சதார் பகுதியில் அமைந்துள்ள இது பாக்கித்தானின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தகக் கடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அங்காடியில் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசுலாமிய மற்றும் மத புத்தகங்களை அச்சிட்டு வரும் வெளியீட்டாளர்கள் உள்ளனர்.[1][2][3][4]

உருது அங்காடி, கராச்சி
Urdu Bazaar, Karachi
اردو بازار، کراچی
அங்காடி
நாடுபாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
நகரம்கராச்சி
நிறுவப்பட்டது1950

பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய புத்தகங்கள் ஆகிய இரண்டு வகைகளிலும் கலை, வரலாறு, இலக்கியம், தத்துவம், மதம் மற்றும் அறிவியல் பற்றிய பல்வேறு தலைப்புகளில் இங்கு கிடைக்கின்றன.[3][5]

உருது அங்காடி அதன் புத்தக திருவிழாவிற்கும் பெயர் பெற்றதாகும்.[6]

வரலாறு தொகு

மொகலாயர் காலத்திலிருந்தே இருந்து வந்த உருது அங்காடி 1950 ஆம் ஆண்டுகளில் கராச்சியில் நிறுவப்பட்டது. முதலில், இந்த அங்காடி புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படும் ஒரு சில கடைகளை கொண்டிருந்தது. ஆனால் அது படிப்படியாக வளர்ந்து சதார் பகுதியிலுள்ள எம்.ஏ.சின்னா சாலைக்கு மாற்றப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த போது மிசன் சாலையில் இக்கடை இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் அங்கு காணலாம்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Urdu bazaar: The world of books". DAWN.COM. February 1, 2011.
  2. "The 'very tragic' story of the bookshops at a patiently waiting Urdu Bazaar". The New International.
  3. 3.0 3.1 Juman, Amber. "Urdu Bazaar's Evolution, from the Mughal Times to the Present". Youlin Magazine.
  4. "Urdu Bazaar: "We have lavish shops for shoes but for books, we can't even find space on a drain"". The Express Tribune. January 13, 2019.
  5. "کیا کراچی کا تاریخی اردو بازار بھی 'گمنام ' ہو جائے گا؟". وی او اے.
  6. "KARACHI: Book mela at Urdu Bazaar". DAWN.COM. June 4, 2002.
  7. "Urdu bazaar; A prestigious and historical book market – A legacy". October 18, 2021. பார்க்கப்பட்ட நாள் December 12, 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருது_அங்காடி&oldid=3751456" இலிருந்து மீள்விக்கப்பட்டது