உருமி தடுப்பணை 2
உருமி தடுப்பணை 2 (Urumi 2 Weir) என்பது இந்தியாவின் கேரளம் மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தின் திருவம்பாடி கிராமத்தில் பொய்ங்கால்புழாவின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சிறிய தடுப்பணையாகும்.[1] உருமி தடுப்பணை 1 மின் நிலையத்திற்குக் கீழே பொய்ங்கால்புழா ஆற்றின் குறுக்கே இந்த நீர்மின் நிலையம் கட்டப்பட்டு உருமி தடுப்பணை 2 மின் நிலையத்திற்குத் தண்ணீரைத் திருப்பி விடப்பயன்படுகிறது. இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 50 கி. மீ. தொலைவில் திருவம்பாடியில் அமைந்துள்ளது. இந்நீர்த்தேக்கத்திலிருந்து நீரானது 470 மீட்டர் நீளமுள்ள மின் கால்வாய் வழியாக மின் நிலையத்திற்குச் செலுத்தப்படுகிறது. அணைக்கு அருகிலுள்ள உருமி நீர்வீழ்ச்சி நீர்மின் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது.[2]
உருமி தடுப்பணை 2 | |
---|---|
புவியியல் ஆள்கூற்று | 11°22′22″N 76°3′30.4″E / 11.37278°N 76.058444°E |
நோக்கம் | நீர்பாசனம், நீர்மின் உற்பத்தி |
நிலை | செயல்பாட்டில் |
கட்டத் தொடங்கியது | 2012 |
திறந்தது | 2016 |
கட்ட ஆன செலவு | USD 20 மில்லியன் |
அணையும் வழிகாலும் | |
வகை | தடுப்பணை |
உயரம் | 6.5 m |
நீளம் | 162 m |
அகலம் (உச்சி) | 50 m |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 4 million m³ |
மின் நிலையம் | |
சுழலிகள் | 2 |
நிறுவப்பட்ட திறன் | 5 MW |
விவரக்குறிப்புகள்
தொகு- அட்சரேகை: 11 0 22'22 "வ
- தீர்க்கரேகை: 76 0 3'30.4 "கி
- ஊராட்சி: திருவம்பாடி
- கிராமம்: திருவம்பாடி
- மாவட்டம்: கோழிக்கோடு
- ஆற்றுப் படுகை: சாலியாறு
- ஆறு: பொய்ங்கால்புழா
- அணையிலிருந்து ஆற்றுக்கு நீர் விடுவிப்பு
- நீர் வெளியேறும் வட்டம்: தாமரைச்சேரி
- திட்டப் பணி நிறைவு: 2004
- திட்டத்தின் பெயர்: உருமி நிலை II[3]திட்டத்தின் நோக்கம்: நீர் மின்சாரம் உற்பத்தி
- திட்டத்தின் நிறுவப்பட்ட திறன்: 3 x 0.8 மெகாவாட்
அணையின் அம்சங்கள்
- அணையின் வகை: நீர் மாற்றம்
- வகைப்பாடு: தடுப்பணை
- அதிகபட்ச நீர் மட்டம்: 107.1 மீ
- முழு நீர்த்தேக்க நிலை: 107.1 மீ
- நீர் சேமிப்பு: திசைதிருப்பல் மட்டுமே
- ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 5.6 மீ
- நீளம்: 25 மீ
- நீர்க்கசிவு: இல்லை
- உயரம்: 107.1 மீ
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala State Electricity Board Limited - Small Hydro Projects". www.kseb.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
- ↑ ഷാബാസ്, സഫീര്. "കേരള വിനോദസഞ്ചാര ഭൂപടത്തില് ഇടം നേടി ഉറുമി". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
- ↑ "Power development in Kerala: electricity projects and generation". www.expert-eyes.org. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.