உருஷ்மி சக்ரவர்த்தி

இந்திய டென்னிசு வீராங்கனை

உருஷ்மி சக்ரவர்த்தி (Rushmi Chakravarthi) (பிறப்பு: அக்டோபர் 9,1977) இந்தியவைச் சேர்ந்த முன்னாள் தொழில்முறை டென்னிசு வீரர் ஆவார்.[1] இவர் பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு நடத்திய மகளிர் போட்டிகளில் 52 முறை பட்டங்களை வென்றுள்ளார். இது ஒரு இந்திய பெண் வீரர் பெற்ற மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். செப்டம்பர் 2005 இல் கொல்கத்தாவில் நடைபெற்ற மகளிர் டென்னிசு கூட்டமைப்பு நடத்திய போட்டியான சன்ஃபீஸ்ட் ஓபன் போட்டியின் முதல் சுற்றில் விளையாடிய பிறகு இவர் தொழில்முறை வீராங்கனை ஆனார். இவரது கடைசி போட்டி ஜூன் 2017 இல் அவுரங்காபாத்தில் நடந்தது.[2]

உருஷ்மி சக்ரவர்த்தி
Rushmi Chakravarthi
2010இல் உருஷ்மி சக்ரவர்த்தி
நாடு இந்தியா
வாழ்விடம்சென்னை, இந்தியா
பிறப்பு9 அக்டோபர் 1977 (1977-10-09) (அகவை 47)
ஐதராபாத்து, இந்தியா
உயரம்1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்)
தொழில் ஆரம்பம்செப்டம்பர் 2005
விளையாட்டுகள்வலது கை ஆட்டாக்காரர்
பரிசுப் பணம்$124,005
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்321–241 (57.12%)
பட்டங்கள்பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் 12 பட்டங்கள்
அதிகூடிய தரவரிசைதரவரிசை 310 (13 செப்டம்பர் 2004)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்372–209 (64.03%)
பட்டங்கள்பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் 40 பட்டங்கள்
அதியுயர் தரவரிசைதரவரிசை 252 (18 ஜூன் 2001)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
ஒலிம்பிக் போட்டிகள்1R (2012)
பதக்கத் தகவல்கள்
நாடு  India
மகளிர் டென்னிசு
ஆப்ரோ-ஆசியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 ஐதராபாத்து மகளிர் இரட்டையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2003 ஐதராபாத்து குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2003 ஐதராபாத்து தனி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2003 ஐதராபாத்து கலப்பு இரட்டையர்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 தில்லி மகளிர் இரட்டையர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rushmi Chakravarthi continues to march on" இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090602233915/http://www.hindu.com/2009/05/29/stories/2009052955501500.htm. 
  2. "ITF - RUSHMI Chakravarthi". www.itftennis.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருஷ்மி_சக்ரவர்த்தி&oldid=4107621" இலிருந்து மீள்விக்கப்பட்டது