உரூபினா பெரோசு பட்டி

உரூபினா பெரோசு பட்டி (Rubina Feroze Bhatti பிறப்பு 1 ஏப்ரல் 1969) ஒரு பாக்கித்தான் மனித உரிமை ஆர்வலர், அமைதி ஆர்வலர் மற்றும் தலைமை ஆலோசகர் ஆவார். இவர் தற்போது நாட்டின் தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக உள்ளார், அதில் இவர் பஞ்சாப் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். [1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

நான்கு குழந்தைகளில் ஒருவரான உரூபினா பட்டி, சர்கோதாவில் பிறந்து வளர்ந்தார், அங்கு இவர் மெட்ரிக் மற்றும் இடைநிலை படிப்பை முடித்தார். 1990 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை அறிவியல் பட்டத்தினைப் பெற்றார், மேலும் 1993 இல் பகாவுதீன் சகரியா பல்கலைக்கழகத்தில் (BZU) வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [2] பின்னர், இவர் 2008 இல் அயர்லாந்தின் மேனூத் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார், அங்கு இவருக்கு ஆண்டின் சிறந்த மாணவர் விருது வழங்கப்பட்டது. இறுதியாக, 2015 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தலைமைத்துவ ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

தொழில் தொகு

சர்கோடாவின் அரசு மகளிர் கல்லூரியில் வேதியியல் விரிவுரையாளராக தனது பணியினைத் தொடங்கினார், அங்கு இவர் பிப்ரவரி 1996 முதல் டிசம்பர் 2004 வரை கற்பித்தல் பணியினை மேற்கொண்டார். 1998 ஆம் ஆண்டில், இவரும் இவருடைய மாணவர்களின் குழுவும் தாங் வசாய்ப் என்ற ஒரு முறைசாரா குழுவை உருவாக்கினார்கள் (உருது வார்த்தைகளின் அர்த்தம் "மனிதகுலத்தின் முழுமைக்கான ஏக்கம்"). [4] ஒரு பொதுக் கல்வித் துறையில் கற்பித்தல் பணிக்குப் பின்னர், மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலை முடித்த பிறகு, இவர் சமூக மேம்பாட்டுத் துறையில் சேர்ந்தார், மேலும் வகுப்புவாத நல்லிணக்கம், பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வேலை செய்யும் டாங் வசைப் அமைப்பில் சேர்ந்தார். [5] அந்த அமைப்பில் மார்ச் 2020 வரை பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இவர் பணியாற்றினார். பாக்கித்தானில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே அமைதியை கட்டியெழுப்பும் கருவியாக இவர் சூஃபித்துவத்தைப் பயன்படுத்தினார், மேலும் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் சூஃபிகளின் செய்தியை ஊக்குவித்தார். [6] சமூகத் தலைவர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தலைமைத்துவ மேம்பாடு, அமைதியை உருவாக்குதல், [7] மற்றும் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதில் இவர் ஈடுபட்டுள்ளார். [8] இவர் சமூக நீதி மையம் [9] மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான மக்கள் ஆணையத்தில் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். [10]

பட்டி 2011 இல் கிழக்கு மென்னோனைட் பல்கலைக்கழகத்தில் சிறப்பு அறிஞராகவும் , சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் 2013-2014 மாற்றத்திற்கான மகளிர் தலைமை உரையாடல் திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[11] [12] தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் [13] பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை, மனித உரிமைகள் ஆகிய பல தலைப்புகளில் விரிவுரை வழங்கியுள்ளார் . [14] [15] பஞ்சாப் அரசின் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இவர் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். [16]

பஞ்சாப் சார்பாக தேசிய குழந்தை உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராகப் பணியாற்ற பட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார், [1] இது தேசிய குழந்தை உரிமைகள் சட்டம், 2017 [17] பாக்கித்தான் அரசால் ஏப்ரல் 2020 இல் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பு ஆகும்.மற்றும் ஏற்கனவே உள்ள குழந்தைகளின் நலன் கருதி முன்மொழியப்பட்ட சட்டங்கள், கொள்கைகள், நடைமுறை மற்றும் முன்மொழிவுகள், மற்றும் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் விசாரணை நடத்துதல் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.[18]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Shah, Waseem Ahmad (2020-03-02). "View from the courtroom: Hopes attached to newly-notified child rights commission". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  2. "Rubina Feroze Bhatti". www.24peaces.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  3. "SOLES Recent News - Department of Leadership Studies Ph.D. Candidate Rubina Feroze Bhatti Receives N-Peace Award - University of San Diego". www.sandiego.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  4. "Day 9: Spotlighting Rubina Feroze Bhatti, Pakistan". Nobel Women's Initiative (in அமெரிக்க ஆங்கிலம்). 2012-12-03. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  5. "Welcome To Taangh Wasaib Organization". www.taangh.org.pk. Archived from the original on 2021-09-08. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  6. "Teachings of Sufism to promote interfaith harmony". Peace Insight (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  7. "Stories That Inspire: Asian Peace Activists Share their Hopes, Reflections, and Insights on Peacebuilding". Building Peace (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-08-18. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  8. "Research Paper". San Diego University.
  9. "Centre For Social Justice". www.csjpak.org. Archived from the original on 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  10. Reporter, The Newspaper's Staff (2018-11-30). "Commission formed for protection of minorities rights". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  11. "Govt committed to Quaid's vision on minorities: minister". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  12. "Rubina Feroze Bhatti (Pakistan) | WikiPeaceWomen – English". wikipeacewomen.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  13. "More Good News from Kids for Peace". archive.constantcontact.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  14. "Rubina Feroze Bhatti presents on 'The Struggle for Peace, Environmental Justice and Women's Rights in Pakistan'". College of Saint Benedict & Saint John's University (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  15. "Minority Advisory Council | Human Rights & Minorities Affairs Department". hrma.punjab.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-14.
  16. "Rubina Feroze Bhatti". Front Line Defenders (in ஆங்கிலம்). 2016-09-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-14.
  17. "National Commission on the Rights of Child Act, 2017" (PDF). National Assembly.
  18. "NCRC concerned over rising incidents of child rights' violations". Daily Mail Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-28. Archived from the original on 2021-09-08. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூபினா_பெரோசு_பட்டி&oldid=3593696" இலிருந்து மீள்விக்கப்பட்டது