உறுப்பு மாற்று

உறுப்பு மாற்று (Organ transplantation) அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது பழுதுபட்ட உடல் உறுப்புகளுக்கு பதிலாக உயிருடன் இருக்கும் அல்லது இறந்த மனிதனிடமிருந்தோ அல்லது விலங்கிடமிருந்தோ (உறுப்புதானம் செய்வோரிடமிருந்து) பெறப்பட்ட உறுப்புகளைக்கொண்டு மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை முறையாகும்.இதன் மூலம் பழுதுபட்ட உறுப்புகளை மாற்றி உயிரைக்காக்கவோ அல்லது வாழ்நாளை நீட்டிக்கவோ இயலும்.

உறுப்பு மாற்று
Organ transplantation
இடையீடு
புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகியோர் வெற்றிகரமாக உறுப்பு மாற்று செய்கிறார்கள். 16ம் நூற்றாண்டு
ICD-10-PCS0?Y
MeSHD016377

தானம் செய்யத்தக்க உறுப்புக்கள்தொகு

மனித உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் தானம் செய்யத்தக்கவை அல்ல. சிலவற்றை மட்டுமே தானம் செய்ய இயலும். இதயம், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், குடல், எலும்பு, எலும்பு மஜ்ஜை, கருவிழி, தோல், இதயவால்வுகள், இரத்தக்குழாய்கள் முதலிய உறுப்புகள் தானம் செய்யத்தக்கவை

வகைகள்தொகு

தன்னுறுப்பு மாற்றுதொகு

இது தன்னிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகளை வைத்தே செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையாகும்.எடுத்துகாட்டாக சிதிலமடைந்த சதைக்கு பதிலாக வளமிக்க சதைப்பகுதியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து வைப்பதைக் கூறலாம்.

வேற்றுருப்பு மாற்றுதொகு

இது தன் இனத்திலேயே வேறொருவரிடமிருந்து பெறப்படும் உறுப்புகளைக்கொண்டு பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும்.

'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?"

உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?

ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.

இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?

இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).

யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?

நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.

உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?

18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.

உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?

ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன. 1954-ம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?

பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடிஸ்தான் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் 'ப்ளாஸ்மா பெரிஸிஸ்' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்­ரலையும் எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப்படுவதில்லை.

உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?

பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகள் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்குள் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.

அயலுருப்பு மாற்றுதொகு

இது வேற்று இனத்திலிருந்து பெறப்படும் உறுப்புகளைக்கொண்டு பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும்.

இரட்டையுருப்பு மாற்றுதொகு

இது இரட்டையருள் ஒருவரிலிருந்து பெறப்படும் உறுப்புகளைக்கொண்டு மற்றொருவரின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும்.

பகுவுருப்பு மாற்றுதொகு

இது ஒருவரிலிருந்து பெறப்படும் உறுப்புகளை பகுத்து இருவரின் பழுதடைந்த உறுப்புகளை மாற்றும் சிகிச்சை முறையாகும். இது சில சமயங்களில் முழு பலனை அளிக்காது.

வளர்ப்புறுப்பு மாற்றுதொகு

இது நவீன கால சிகிச்சை முறையாகும். இதன் மூலம் நமக்கு தேவையான உறுப்புகளை நம் உடலிலேயே வளர வைத்து பின் அதையே நம் உடலிலுள்ள பழுதடைந்த உறுப்புக்கு பதிலாக மாற்றிக்கொள்ளலாம்.

வளர்ப்புறுப்பு மாற்று அடிப்படை தத்துவம்தொகு

நம் உடம்பில் ஒவ்வொரு உறுப்புகம் நாம் கருவிலிருக்கும் பொழுது வளர்கிறது.அனைத்து உறுப்புகளுக்கும் செல்களே அடிப்படை.குறிப்பிட்ட செல்கள் குறிப்பிட்ட உறுப்புகளாக உருவெடுக்க பணிக்கப்படுகிறது.எந்த செல்கள் எந்த உறுப்புக்களாக உருவெடுக்கவேண்டுமென்பதை மரபணுக்கள் தீர்மானிக்கின்றன.எனவே தற்பொழுது நமக்கு இதயம் தேவையெனில் நம் தோல் பகுதிகளை இதயமாக உறுமாறப் பணிக்கலாம்.

உறுப்பு தானம் செய்வோரின் வகைகள்தொகு

தாமாக முன்வரும் உறவுகள்தொகு

இரத்த சம்பந்தமுள்ள உறவுகள் அல்லது இரத்த சம்பந்தமில்லாத நண்பர்கள் முதலியோர் அன்பினால் உந்தப்பட்டு அளிக்கும் தானமாகும்.

பணத்திற்காக தானம் செய்வோர்தொகு

வறுமைப்பிடியிலுள்ளோர் பணத்திற்காக அளிக்கும் தானமாகும்.

மனிதநேயமுடையோர்தொகு

இரத்த உறவோ அல்லது நட்போ இல்லாத பட்சத்திலும் சக மனிதர் மீது அன்பு கொண்டு மனிதநேயத்தோடு அளிக்கும் தானமாகும்.

சூழ்நிலைக்கைதிகள்தொகு

இது ஒருவருக்கு தெரிந்தோ தெரியாமலோ வற்புருத்தியோ மிரட்டியோ பெறப்படும் தானமாகும்.

உறுப்பு திருட்டுதொகு

பல நாடுகளில் உறுப்புகளுக்காக மனிதர்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றனர்,சில சமயங்களில் கொல்லப்படுகின்றனர்.சில மருத்துவமனைகளில் உயிருடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சம்மதம் இன்றி அவர்களுக்கு தெரியாமலேயே உறுப்புகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.சில சமயங்களில் இறந்தவரின் உடம்பிலிருந்து கூட உறுப்புகள் திருடப்படுகிறது.

சிகிச்சையின் சிக்கல்கள்தொகு

முதலில் தானம் செய்வோரிடமிருந்து பெறப்படும் உறுப்புக்களை பெறுபவரின் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதை உறுதி செய்ய வேண்டும். சில சமயங்களில் பெறுபவரின் உடம்பின் எதிர்ப்பு சக்தி மாற்று உறுப்பினை ஏற்றுக்கொள்ளாது.அப்படி ஏற்காத பட்சத்தில் அறுவை சிகிச்சை தோல்வியில் முடிவடையும்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

  • Tess Gerritsen. (1996). Harvest. New York: Pocket Books.
  • Lee Gutkind. (1990). Many Sleepless Nights: The World of Organ Transplantation. New York: W. W. Norton & Company, Inc.
  • Jodi Picoult. (2008). Change of Heart. New York: Simon & Schuster, Inc.
  • Schlich, T. (2010). The Origins of Organ Transplantation: Surgery and Laboratory Science, 1880–1930, University of Rochester Press.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுப்பு_மாற்று&oldid=2746182" இருந்து மீள்விக்கப்பட்டது