உற்றுநோக்கலின் வாயிலாக கற்றல் வெளிப்பாட்டை அறியும் வகைப்பாடு
உற்றுநோக்கலின் வாயிலாக கற்றல் வெளிப்பாட்டை அறியும் வகைப்பிரித்தல் (Structure of observed learning outcomes (SOLO) என்ற வகைப்பிரித்தல் என்பது மாணவன் பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் அதிகரிக்கும் சிக்கல் தன்மையைப் பற்றி விவரிக்கிறது.[1] இந்த வகைப்பாடு ஜான் பிக்ஸ் மற்றும் கெவின் காலிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும்.[2] புளுமின் கற்பித்தல் நோக்கங்கள் குறித்த வகைப்பாடு மற்றும் திருத்தப்பட்ட புளுமின் கற்பித்தல் நோக்கங்கள் குறித்த வகைப்பாடு ஆகியவற்றிலிருந்து மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில் புளுமின் வகைப்பாடு கற்பித்தல் நோக்கங்களின் அடிப்படையிலானது. ஆனால், ஜான் பிக்ஸின் வகைப்பாடு கற்றல் வெளிப்பாட்டின் அடிப்படையிலானது ஆகும்.
மாதிரி
தொகுஇந்த மாதிரியானது புரிதலின் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது.[3][4]
- முன் அமைப்பு (Pre-structural) – முன் அமைப்பு நிலையில் உள்ள மாணவர்கள் தொடர்பற்ற தகவல்களைப் பெறுகின்றனர். அவை முறைமைப்படுத்தப்படாமல் இருப்பதால் பொருள் உணர இயலவில்லை. .
- ஒருமை அமைப்பு (Uni-structural) – மாணவனின் பதில் அல்லது புரிதல் ஒரே ஒரு தொடர்புடைய பகுதியில் மட்டுமே குவிக்கப்பட்டுள்ளது.
- பல்வகை அமைப்பு (Multi-structural) – மாணவனின் புரிதல் பல தொடர்புடைய பகுதிகளில் குவிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும், சேர்க்கை நிலையிலும் அறியப்படுகிறது. இந்த நிலையிலான மதிப்பீடு முதன்மையாக அளவினடிப்படையிலானது.
- தொடர் அமைப்பு (Relational) – பல்வேறு பண்புக்கூறுகளின் அடிப்படையில் ஓரியல்பான ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த வடிவமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையானது ஒரு பாடப்பொருள் அல்லது தலைப்பு சார்ந்த தேவையான அளவு இயல்பான புரிதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
- விரிவாக்கமடைந்த அமைப்பு (Extended abstract) – மேலே கூறப்பட்ட ஒருங்கிணைந்த ஒட்டுமொத்த அமைப்பானது இன்னும் சற்று உயர்ந்த கருத்தியலான, பொதுமைக்கருத்தாக கொள்ளப்படுகிறது. மேலும், இது புதிய பாடப்பொருள் அல்லது பகுதியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ ATHERTON, J. S. (2005) Learning and Teaching: SOLO taxonomy. [On-line] UK: Available: [1] Accessed: 7 June 2007
- ↑ John Biggs. "SOLO TAXONOMY". Ultimedia-Cradle mountain image. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ TEDI. Biggs’ structure of the observed learning outcome (SOLO) taxonomy. [2][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Biggs, J. B. (1999). Teaching for quality learning at university. Open University Press