உலகக் கழிவறை நாள்
உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
2013 சூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2]
ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.[3] இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Don't Laugh: World Toilet Day Aims to Promote Sanitation, Rid World of Disease". Fox News. 19 November 2008. http://www.foxnews.com/story/0,2933,454531,00.html.
- ↑ UN Celebrates Inaugural World Toilet Day, அஃப்டிங்டன் போஸ்ட், நவம்பர் 19, 2013
- ↑ World Toilet Day highlights the importance of basic sanitation பரணிடப்பட்டது 2013-11-20 at the வந்தவழி இயந்திரம், சி.பி.எஸ், நவம்பர் 19, 2013
- ↑ உலகக் கழிவறை நாள்: கேக் வெட்டிக் கொண்டாடிய சமூக ஆர்வலர்கள்[தொடர்பிழந்த இணைப்பு], தினமுரசு, நவம்பர் 20, 2013