உலகளந்தான் கோல்

கோல் சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான ஒரு கருவியாகும். நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது. சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் உலகளந்தான்குறவர் என்பவர் தலைமையில் இராசராச சோழன் ஒரு குழு அமைத்தார். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு மாபெரும் பணியாகும்.

உலகளந்தான் கோல் மூலம் அறியப்படும் சில அளவு விவரங்கள்

தொகு
  • 24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
  • 25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
  • 26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
  • 27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
  • 28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
  • 29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
  • 30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
  • 31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்

33”அங்குலம்(இஞ்ச்)ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.[1]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகளந்தான்_கோல்&oldid=3935377" இலிருந்து மீள்விக்கப்பட்டது