உலகளாவிய கொரோனாவைரசு தடுப்பூசி

கோவிட்-19 நோய்க்கு எதிரான உலகளாவிய தடுப்பூசி

உலகளாவிய கொரோனாவைரசு தடுப்பூசி (Universal coronavirus vaccine) அனைத்து கொரோனா வைரசு திரிபுகளுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படும் ஒரு கொரோனா வைரசு தடுப்பூசி ஆகும். பான் கொரோனாவைரசு தடுப்பூசி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இந்த உலகளாவிய தடுப்பூசி மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துகின்ற கோவிட்-19 போன்ற கொரோனாவைரசு திரிபுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும். எதிர்கால கொரோனாவைரசு திரிபுகளுக்கு எதிராகவும் இது பாதுகாப்பை வழங்கும். எதிர்காலத்தில் கொரோனா வைரசு தொற்று நோய்கள் மற்றும் உலகம்பரவு நோய்களைத் தடுக்க இதுபோன்றதொரு தடுப்பூசி முன்மொழியப்பட்டது.[1][2][3][4][5][6][7][8]

கொரோனா வைரசின் பரப்புகை எலக்ட்ரான் நுண்ணோக்கி படம்

உலகளாவிய கொரோனா வைரசு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சிகள் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கின.[3] தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர் அந்தோனி ஃபாசி, வைரசு வல்லுநர் இயெப்ரி கே. தௌபன்பெர்கர், டேவிட் எம். மோரென்சு ஆகியோர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகளாவிய கொரோனா வைரசு தடுப்பூசியின் வளர்ச்சிக்கு ஒப்புதல் அளித்தனர். பன்னாட்டு கூட்டுமுயற்சி வௌவால்களிடமிருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரசு மாதிரியை விரிவாக ஆராய்வதற்கும், வன விலங்குகள், பண்ணை விலங்குகளில் ஏற்கனவே இருக்கின்ற மற்றும் வளர்ந்து வருகின்ற கொரோனா வைரசுகளின் முழுமையான உலகத்தைப் புரிந்து கொள்ளவும் இம்முயற்சி உதவும் என்ற கருத்தை முன்னிறுத்தி இவர்கள் வாதிடுகின்றனர்.[6][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. Mullin, Emily (2021-06-09). "A ‘Universal’ Coronavirus Vaccine to Prevent the Next Pandemic". Scientific American (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. Kirkendoll, Shantell M. (2021-07-07). "New universal coronavirus vaccine could prevent future pandemics". University of North Carolina at Chapel Hill (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. 3.0 3.1 Joi, Priya (2021-07-13). "Could a universal coronavirus vaccine soon be a reality?". GAVI (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. Page, Michael Le (2021-11-10). "Covid-resistant people point way to universal coronavirus vaccine". New Scientist (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. Kwon, Diana (2021-06-29). "The Quest for a Universal Coronavirus Vaccine". The Scientist (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. 6.0 6.1 Morens, David M.; Taubenberger, Jeffery K.; Fauci, Anthony S. (2021-12-15). "Universal Coronavirus Vaccines — An Urgent Need". The New England Journal of Medicine 0 (0): null. doi:10.1056/NEJMp2118468. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. https://doi.org/10.1056/NEJMp2118468. 
  7. 7.0 7.1 "NIH scientists urge pursuit of universal coronavirus vaccine". National Institutes of Health (NIH) (in ஆங்கிலம்). 2021-12-16. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. 8.0 8.1 Bush, Evan (2021-12-15). "Fauci pushes for universal coronavirus vaccine". NBC News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.{{cite web}}: CS1 maint: url-status (link)