உலகின் பாவங்களைப் போக்கும் (செபம்)

உலகின் பாவங்களைப் போக்கும் எனத்தொடங்கும் மன்றாட்டானது இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க திருப்பலியிலும், ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபையிலும் பயன்படுத்தப்படும் ஒரு மன்றாட்டாகும். இது திருப்பலியில் குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது மக்களால் படப்படுவதோ செபிக்கப்படுவதோ வழக்கம்.[1]

குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது மக்களால் இச்செபம் படப்படுவதோ செபிக்கப்படுவதோ வழக்கம்

சிரிய நாட்டின் மரபில் வழக்கமான இச்செபமானது உரோமை இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க திருப்பலியில் திருத்தந்தை முதலாம் செர்ஜியுஸால் சேர்க்கப்பட்டது.[2][3] இது குவின்சிடெக்சு பொதுச்சங்கம் இயேசுவை செம்மறி என அழைக்கக்கூடாது என எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பாக இம்மன்றாட்டு இணைக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.[4]

மன்றாட்டு தொகு

யோவான் நற்செய்தி 1:29இல் படி திருமுழுக்கு யோவான் இயேசுவ தம் சீடருக்கு சுட்டிக்காட்ட பயன்படுத்திய வரிகளின் அடிப்படையில் இம்மன்றாட்டு அமைந்துள்ளது.[5]

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. See "Agnus Dei" article from The Catholic Encyclopedia
  2. Eamon Duffy, Saints and Sinners (Yale University Press 2006 ISBN 9780300115970), p. 84
  3. Lives of Orthodox Western Saints by Reader Daniel Lieuwen (St Nicholas Orthodox Church, McKinney TX)
  4. Andrew J. Ekonomou, Byzantine Rome and the Greek Popes (Lexington Books 2007 ISBN 978-0-73911977-8), p. 223
  5. "The Order of Mass, 130" (PDF). Archived from the original (PDF) on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-03-25.
  6. திருப்பலி செபங்கள்