உலக அடித்தட வலையமைப்பு
உலக அடித்தட வலையமைப்பு (Global Footprint Network) கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். இது 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புவியின் சூழலியல் ஆற்றலுக்கு உட்பட்டவகையில், உலக மக்கள் அனைவரும் திருப்தியான வாழ்க்கையை நடத்தும் வாய்ப்பை உறுதிசெய்யக்கூடிய புவியொன்றை உருவாக்குவதில் இந் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இயற்கையின்மீது மனிதருக்கான தேவையின் அளவை கணிப்பதற்கும், இத் தேவைகளை வழங்குவதில் இயற்கைக்கு உள்ள ஆற்றலை அளவிடுவதற்கும் பயன்படும் "சூழலியல் அடித்தடம்" என்பதை நடைமுறையில் பயன்படுத்துவதை இந் நிறுவனம் ஊக்குவித்து வருகிறது.
நிதித்துறையில் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னும் அளவையைப் பயன்படுத்துவது போல, சூழலியல் அடித்தடத்தையும் முதன்மை அளவீடாகப் பயன்படுத்த வைப்பதை இந் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் 10 நாடுகளாவது சூழலியல் அடித்தடத்தைப் பயன்படுத்தித் தமது சூழலியல் வளங்களை மேலாண்மை செய்ய வைப்பது இதன் இலக்கு.
ஆறு கண்டங்களையும் சேர்ந்த பல அமைப்புக்கள் உலக அடித்தட வலையமைப்பின் பங்காளர்களாக உள்ளனர். உலகின் பெரிய சூழல் முகவர் அமைப்புக்கள் பல ஏற்கனவே சூழலியல் அடித்தடத்தை உலகின் பேண்தகுநிலையை மேம்படுத்தும் முயற்சியில் பயன்படுத்தி வருகின்றன. சூழல் பாதுகாப்பு முகமை விக்டோரியா (ஆசுத்திரேலியா), ஐரோப்பிய சூழல் முகமை, உலகக் காட்டுயிர் நிதியம் என்பன இவற்றுட் சிலவாகும்.
வெளியிணைப்புக்கள்
தொகு- உலக அடித்தட வலையமைப்பின் இணையத் தளம் பரணிடப்பட்டது 2009-03-19 at the வந்தவழி இயந்திரம்