உலக உருது நாள்

நவம்பர் 9

உலக உருது நாள் (World Urdu Day) பிரபல உருது கவிஞர் டாக்டர் அல்லாமா முகம்மது இக்பால் பிறந்த நாளான நவம்பர் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.[1]

உலக உருது நாள்
உலக உருதுநாள் சுவரொட்டி 2021
அதிகாரப்பூர்வ பெயர்உலக உருது நாள்
கடைபிடிப்போர்பலநாடுகள், பாக்கித்தான், இந்தியா
வகைபன்னாட்டு நாள்
நாள்9 நவம்பர்
நிகழ்வுஆண்டுக்கொரு முறை
தொடர்புடையனஇக்பால் நாள்

இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் உருது மொழியின் பிரபலத்தை எடுத்துரைப்பதும் அதன் முக்கியத்துவத்தைப் பாராட்டுவதும் ஆகும். உருது இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் மொழிகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இது பாக்கித்தான் நாட்டின் தேசிய மொழியும் ஆகும்.

அல்லாமா முகம்மது இக்பால் தொகு

அல்லாமா முகம்மது இக்பாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. [2]

அல்லாமா இக்பால் ஒரு சிறந்த உருது கவிஞரும் சிந்தனையாளரும் ஆவார். அவர் தனது சுயக்கருத்தின் மூலம் துணைக்கண்டத்தின் இளைஞர்களுக்கு புதிய உயிர் கொடுத்தார். இக்பால் முசுலீம் உம்மாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவுபடுத்தினார் மற்றும் மீண்டும் ஒன்றிணைவதற்கு கற்றுக் கொடுத்தார்.

கொண்டாட்டங்கள் தொகு

இந்த நாளில், உருதுவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், இக்பாலுக்கு மரியாதை செலுத்தவும் , பாக்கித்தான் மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களிலும் மதிப்புமிக்க விழாக்கள் நடத்தப்படுகின்றன.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. World Urdu Day, Urdu Day. "World Urdu Day".
  2. Urdu, allama Iqbal. "Iqbal and Urdu". https://m.timesofindia.com/city/mumbai/patriotic-poets-birthday-to-be-celebrated-as-world-urdu-day/amp_articleshow/61564930.cms#amp_tf=From%20%251%24s&aoh=16366900429147&referrer=https%3A%2F%2Fwww.google.com. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_உருது_நாள்&oldid=3595125" இலிருந்து மீள்விக்கப்பட்டது