உலுவாங்போக்பா துடுப்பாட்ட அரங்கம்

மணிப்பூர் மாநிலத்திலுள்ள விளையாட்டு அரங்கம்

உலுவாங்போக்பா துடுப்பாட்ட அரங்கம் (Luwangpokpa Cricket Stadium) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள இம்பால் நகரில் அமைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் வங்காளத்தின் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விசய் மர்ச்சண்ட்டு கோப்பை போட்டி நடந்தபோது இந்த அரங்கம் திறக்கப்பட்டது. [1] குமன் லம்பக் விளையாட்டரங்கமும் இந்த அரங்கமும் மணிப்பூரில் உள்ள இரண்டு துடுப்பாட்ட அரங்கங்களாகும். இந்த விளையாட்டரங்குகள் இரண்டிலும் ஆடுகளம் புல்தரையால் அமைக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. [2] குமன் லம்பக் மெயின் விளையாட்டரங்கம் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் உலுவாங்போக்பா துடுப்பாட்ட அரங்கம் மணிப்புர் மாநிலத்தில் துடுப்பாட்டத்திற்கான முக்கிய இடமாக திகழ்கிறது. இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2012 ஆம் ஆண்டு புதிய பகுதி மேம்பாட்டுத் திட்டம் இவ்விளையாட்டு அரங்கத்தை போட்டிகளை நடத்தும் திறனுக்காக மதிப்பாய்வு செய்தது. [3]

உலுவாங்போக்பா துடுப்பாட்ட அரங்கம்
Luwangpokpa Cricket Stadium
அமைவிடம்இம்பால், மணிப்பூர்
உருவாக்கம்2012
இருக்கைகள்12,000
உரிமையாளர்மணிப்பூர் அரசு
கட்டிடக் கலைஞர்n/a
இயக்குநர்மணிப்பூர் துடுப்பாட்டச் சங்கம்
குத்தகையாளர்மணிப்பூர் துடுப்பாட்ட அணி
26 ஆகத்து 2015 இல் உள்ள தரவு
மூலம்: Cricketarchive

மேற்கோள்கள்

தொகு
  1. Other Matches
  2. "Manipur cricket looks to Mary for inspiration". Archived from the original on 2018-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
  3. BCCI picks and chooses

புற இணைப்புகள்

தொகு