உளவியல் பிணக் கூறாய்வு

உளவியல் பிணக் கூறாய்வு (Psychological autopsy) என்பது பொதுவாக தற்கொலை செய்து கொண்டவரின் நோக்கத்தைக் கண்டறிவதற்கான ஒரு செயல்முறையாகும்.[1][2][3] 1958 இல் நிறுவப்பட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் தற்கொலை தடுப்பு மையத்தில் நார்மன் ஃபார்பரோ, எட்வின் எஸ். ஆகிய உளவியலாளர்கள் பணிபுரிந்த காலத்தில் அவர்களால் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டதாகும்.[3][4]

தடயவியல் பரிசோதனைகள், உடல்நலப் பதிவுகளை ஆய்வு செய்தல், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மூலமாக இறந்த மனிதர் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்தல் போன்றவை இதில் அடங்கும்.[5][6] இத் தகவல்களைக் கொண்டு இறந்தவரின் மரணத்திற்கான காரணத்தையும், அவர்களின் மரணத்திற்கு முந்தைய உளவியல் நிலையையும் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[7]

வரலாறு

தொகு

1950 களில் லாஸ் ஏஞ்சல்ஸ் தற்கொலை தடுப்பு மையத்தில் பணிபுரிந்தபோது ஃபார்பரோ, ஷினீட்மேன் ஆகியோர் உளவியல் பிணக் கூறாய்வுகளுக்கு முன்னோடிகளாக இருந்தனர்.[3][8] ஐயத்திற்கிடமான தற்கொலைகளில் அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவுமாறு பிணக் கூறாய்வாளர்களால் கேட்கப்பட்டதன் பேரில் அவர்கள் இந்தச் செயல்முறையை உருவாக்கினர்.[4][9]

போதைப்பொருள் பழக்கத்தினால் அதிகப்படியான எண்ணிக்கையில் இறப்புகள் ஏற்பட்டதினால் அவற்றை விசாரிப்பதில் தற்கொலை தடுப்பு மையத்தின் உதவியை கோரோனர் தியோடர் ஜே. கர்ஃப்ரே கேட்டபோது உளவியல் பிணக் கூறாய்வு முறை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. [மேற்கோள் தேவை] மர்லின் மன்றோவின் இறப்பிற்கு முந்தைய அவரது மனநிலையை கண்டறிய மனநல மருத்துவர் ராபர்ட் இ. லிட்மேன், ஃபார்பெரோவை கர்ஃப்ரே ஆகியோர் இந்த செயல்முறையைப் பயன்படுத்தினர்.[4][10] விசாரணைக்குப் பின்னர் மன்ரோவின் மரணம் ஒரு தற்கொலை தான் ஃபார்பரோ முடிவுக்குவந்தார்.[11]

உளவியல் பிணக் கூறாய்வு முறை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 2002 ஆம் ஆண்டில், அதன் பயிற்சி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இடம்பெற்றது.[12]

ஜாக்சன் வி. ஸ்டேட் மற்றும் யு.எஸ். வி. செயின்ட் ஜீன் போன்ற குற்றவியல் வழக்குகளிலும், மியூச்சுவல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி வி. டெர்ரி போன்ற உரிமையியல் வழக்குகளிலும் தற்கொலைக்கான சாத்தியக்கூறுகளைத் தீர்மானிக்க உளவியல் பிணக் கூறாய்வு பயன்படுத்தப்பட்டது.[12]

செயல்முறைகள்

தொகு

உளவியல் பிணக் கூறாய்வுவானது, தெளிவாகவோ அல்லது தெளிவற்றதாகவோ நிகழ்ந்த இறப்புகளுக்கான காரணத்தை தெளிவுபடுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.[13]

உளவியல் பிணக் கூறாவினை மேற்கொள்ளும்போது, புலனாய்வாளர்கள் இறந்தவரின் மரணத்திறாகான நோக்கத்தைக் கண்டறிய முயற்சிக்கின்றனர். இந்த ஆய்வானது முதலில் ஒரு மனிதர் எப்படி இறந்தார், ஏன் அந்த நேரத்தில் இறந்தார், மரணத்திற்கான மிகவும் சாத்தியமான காரணம் ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறது.[12] மரணத்திற்கான காரணம் தெளிவாக இருந்தால், புலனாய்வாளர்கள் மரணத்திற்கு இட்டுச்சென்ற அந்த மனிதரின் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிய முயற்சிக்கின்றனர்.[12] தற்கொலைக்கான நோக்கம் என்பது, மரணத்திற்கான வழிமுறைகள், தற்கொலை செய்வதற்கான முன் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், நிதிக் கணக்குகளைத் ஆராய்வது போன்ற காரணிகளால் ஆராயப்படுகிறது.[14] உளவியல் பிணக் கூறாய்வுகளில், மனநல கோளாறுகளும் தற்கொலையுடன் வலுவாக தொடர்புடையவை.[15]

இறந்தவரின் நண்பர்கள், குடும்பத்தினர், அவரை அண்மையில் சந்தித்தவர்கள், நாட்குறிப்புகள், கைபேசி, கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் சேகரிக்கபட்ட தகவல்களின் அடிப்படையிலும், இறந்தவரின் மரணம் தொடர்பான தடயவியல் பரிசோதனையிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டவர் கடைசி சில நாட்களில் என்ன மன நிலையில் இருந்தார் என்பதைக் கொண்டு, அவரது தற்கொலைக்கான நோக்கம் தீர்மானிக்கப்படுகிறது.[5][6] இறந்தவரின் மருத்துவப் பதிவேடுகளில் இருந்து ஏதேனும் நோய்கள், அவற்றிற்கான சிகிச்சைகள், குடும்பத்தினரின் இறப்பு பற்றிய வரலாறு உள்ளிட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.[5][16][17] பொதுவாக மன அழுத்தத்தைக் காட்டும் வகையிலான நடத்தை முறைகள், அவரின் நடத்தையில் அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், தற்கொலை எண்ணம், மது/அல்லது போதைப்பொருள் பயன்பாடு, அண்மையில் நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் போன்ற விவரங்களை புலனாய்வாளர்கள் தேடுகின்றனர்.[13][16]

மேற்கோள்கள்

தொகு
  1. Abondo, M.; Masson, M.; Le Gueut, M.; Millet, B. (September 2008). "L'autopsie psychiatrique". L'Encéphale 34 (4): 343–346. doi:10.1016/j.encep.2007.06.005. பப்மெட்:18922235. 
  2. Litman, Robert E. (1963). "Investigations of Equivocal Suicides". JAMA: The Journal of the American Medical Association 184 (12): 924. doi:10.1001/jama.1963.03700250060008. 
  3. 3.0 3.1 3.2 Shneidman, Edwin S.; Farberow, Norman L. (January 1965). "The Los Angeles Suicide Prevention Center: A Demonstration of Public Health Feasibilities" (in en). American Journal of Public Health and the Nation's Health 55 (1): 21–26. doi:10.2105/AJPH.55.1.21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9572. பப்மெட்:14246103. 
  4. 4.0 4.1 4.2 "Cries for Help". TIME. 2007-12-28. Archived from the original on 2007-12-28. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  5. 5.0 5.1 5.2 Isometsä, E. T. (November 2001). "Psychological autopsy studies--a review". European Psychiatry 16 (7): 379–385. doi:10.1016/s0924-9338(01)00594-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0924-9338. பப்மெட்:11728849. https://pubmed.ncbi.nlm.nih.gov/11728849/. 
  6. 6.0 6.1 Hawton, K.; Appleby, L.; Platt, S.; Foster, T.; Cooper, J.; Malmberg, A.; Simkin, S. (September 1998). "The psychological autopsy approach to studying suicide: a review of methodological issues". Journal of Affective Disorders 50 (2–3): 269–276. doi:10.1016/s0165-0327(98)00033-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0165-0327. பப்மெட்:9858086. https://pubmed.ncbi.nlm.nih.gov/9858086/. 
  7. Mohanty, Pallavi; Kumar, Rajeev; Sankhla, Mahipal Singh (September 2021). "Importance of Psychological Autopsy in Forensic Science". Indian Internet Journal of Forensic Medicine & Toxicology 19: 1–6. doi:10.5958/0974-4487.2021.00001.8. https://www.researchgate.net/publication/354890342. 
  8. Canter, David V. "Psychological autopsies". University of Huddersfield Repository. https://eprints.hud.ac.uk/id/eprint/8669/1/canterpsychological.pdf. 
  9. Botello, Timothy; Noguchi, Thomas; Sathyavagiswaran, Lakshmanan; Weinberger, Linda E.; Gross, Bruce H. (July 2013). "Evolution of the psychological autopsy: fifty years of experience at the Los Angeles County Chief Medical Examiner-Coroner's Office". Journal of Forensic Sciences 58 (4): 924–926. doi:10.1111/1556-4029.12138. பன்னாட்டுத் தர தொடர் எண்:1556-4029. பப்மெட்:23551031. https://pubmed.ncbi.nlm.nih.gov/23551031/. 
  10. Fraga, Kaleena (2022-04-06). "Inside Marilyn Monroe's Controversial Autopsy Report — And The Eerie Conspiracies Behind It". All That's Interesting (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  11. "Norman Farberow dies at 97; psychologist was pioneer in suicide prevention". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-09-15. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  12. 12.0 12.1 12.2 12.3 "The Psychological Autopsy, Part I: Applications and Methods". Law and Psychiatry 14 (6): 393–397. November 2008. https://www.upstate.edu/psych/pdf/education/fellowships/psychological_autopsy_1.pdf. 
  13. 13.0 13.1 "The Psychological Autopsy" (in en). Suicide and Life-Threatening Behavior 11 (4): 325–340. Winter 1981. doi:10.1111/j.1943-278X.1981.tb01009.x. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1943-278X.1981.tb01009.x. 
  14. "Death Investigation – Introduction to Psychological Autopsy". www.ojp.gov. பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  15. Cavanagh, J. T. O.; Carson, A. J.; Sharpe, M.; Lawrie, S. M. (April 2003). "Psychological autopsy studies of suicide: a systematic review". Psychological Medicine 33 (3): 395–405. doi:10.1017/s0033291702006943. பன்னாட்டுத் தர தொடர் எண்:0033-2917. பப்மெட்:12701661. https://pubmed.ncbi.nlm.nih.gov/12701661/. 
  16. 16.0 16.1 Silber, Benjamin (2022-02-12). "What is a Psychological Autopsy?". forensic-evaluations (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-06.
  17. Ebert, Bruce W. (February 1987). "Guide to conducting a psychological autopsy." (in en). Professional Psychology: Research and Practice 18 (1): 52–56. doi:10.1037/0735-7028.18.1.52. பன்னாட்டுத் தர தொடர் எண்:1939-1323. http://doi.apa.org/getdoi.cfm?doi=10.1037/0735-7028.18.1.52. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளவியல்_பிணக்_கூறாய்வு&oldid=4084635" இலிருந்து மீள்விக்கப்பட்டது