உள்நாட்டு வானூர்தி நிலையம்
உள்நாட்டு வானூர்தி நிலையம் ஒரு நாட்டின் எல்லைகளுகளுக்குள் இயங்கும் பறப்புக்களை மேலாளும் வானூர்தி நிலையம் ஆகும். உள்நாட்டு வானூர்தி நிலையங்களில் சுங்கச்சோதனையும் குடிவரவு வசதிகளும் இராது. இவை வெளிநாடுகளிலிருந்து வருகின்ற அல்லது செல்கின்ற பறப்புக்களை மேலாண்மை செய்ய இயலாது.
பெரும்பாலும் இந்த வானூர்தி நிலையங்களில் ஓடு பாதை சிறியதாக இருக்கும். இவற்றால் குறைந்த தொலைவு அல்லது இடைப்பட்டத் தொலைவு வரை இயக்கப்படும் வானூர்திகளையே கையாளவியலும். தற்போது விரிவான பாதுகாப்புச் சோதனை அமைப்புகள் நிறுவப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு இவை பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் மட்டுமே இருந்து வந்தன.[1]
கனடாவிலும் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் பெரும்பாலான நகராட்சி வானூர்தி நிலையங்கள் இவ்வகையானவை. கனடாவின் பன்னாட்டு வானூர்தி நிலையங்களில், கனடாவிற்குள் இயங்கும் பறப்புக்களை கையாள தன உள்நாட்டு முனையங்கள் உள்ளன.
தவிரவும் சில வானூர்தி நிலையங்கள் பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்என பெயரிடப்பட்டிருந்தாலும் முதன்மையாக அங்கு உள்நாட்டு பறப்புகளே இயக்கப்படும்; மிகக் குறைந்த அளவில் வெளிநாட்டுப் பறப்புகள் கையாளப்படலாம்.
ஐக்கிய இராச்சியத்தில், விக் வானூர்தி நிலையத்தை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்; இங்கிருந்து இசுக்காட்லாந்தின் வானூர்தி நிலையங்களுக்கு அடிக்கடி பறப்புகள் உள்ளன.
சில சிறிய நாடுகளில் உள்நாட்டுப் பறப்புகள் இயக்குமளவில் நிலப்பரப்பு இருக்காது. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாக பெல்ஜியம், ஆங்காங், குவைத், மக்காவு, சிங்கப்பூர், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றைக் கூறலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "International vs. Domestic Airport Differences". Executive Flyers. Contributors: Ella Dunham. 2023-08-18. பார்க்கப்பட்ட நாள் 2024-02-17.
{{cite web}}
: CS1 maint: others (link)