உள்ளுறுப்பு
உறுப்பு (Organ) என்பது ஒத்த செயல்பாடுகளைக் கொண்ட திசுக்களின் குழுவை குறிக்கிறது. தாவரம் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை உறுப்பு அமைப்புகளில் இணைந்த பல்வேறு உறுப்புகளை நம்பியுள்ளது. உடலின் வெளிப்புறத்தில் தெரியாமல் உடலுக்கு உள்ளேயே காணப்படும் உறுப்பு உள்ளுறுப்பு எனப்படும். பொதுவாக முதுகுநாணிகளின் உறுப்புகளை தோல் போர்த்தியிருக்கும். முதுகுத்தண்டு இல்லா பிராணிகளுக்கோ வெளிப்புறம் உள்ள எலும்பு மண்டலம் உள்ளுறுப்புக்களை காக்கிறது.
திசுக்கள் என்பவை செல்களின் குழுக்களாக இருக்கின்றன. அவை தோற்றத்தில் ஒத்திருக்கும். குறிப்பிட்ட உறுப்புகளின் உயிரியல் செயல்பாட்டை அவை செயல்படுத்துகின்றன. கொடுக்கப்பட்ட ஓர் உறுப்பில் பாரன்கைமா எனப்படும் சுரப்புக்கருப்பொருளும் இடையிடயே சிதறலாக அதற்குத் துணையாக சிட்ரோமா எனப்படும் தளப்பொருளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பும் அதற்கென ஒரு சிறப்பான முக்கியத் திசுவால் ஆக்கப்பட்டுள்ளது. மையோகார்டியம் என்பது இதயத்தின் தனித்துவமான திசுவாகும். அதே நேரத்தில் நரம்புகள், இரத்த நாளங்கள் மற்றும் இணைப்பு திசுக்கள் போன்றவை தளப்பொருள் திசுவகையில் அடங்கும் . ஒர் உறுப்பை உருவாக்கும் முக்கிய திசுக்கள் ஒரே கிருமி அடுக்கில் இருந்து தோன்றும் என்பது போன்ற பொதுவான கருத்தோற்றம் கொண்டவையாகும். செயல்பாட்டுடன் தொடர்புடைய உறுப்புகள் பெரும்பாலும் முழு உறுப்பு அமைப்புகளை உருவாக்க இணைந்து ஒத்துழைக்கின்றன. பெரும்பாலான பல்லுயிர் உயிரினங்களில் பல உறுப்புகள் உள்ளன. பாக்டீரியா போன்ற ஒற்றை செல் உயிரினங்களில் , செயல்பாட்டு உறுப்புகள் அனைத்தும் உள்ளுறுப்புகள் என அறியப்படுகிறது . தாவரங்களில், மூன்று முக்கிய உறுப்புகள் உள்ளன[1]. ஒரு வெற்று உறுப்பு என்பது வெற்று குழாய் அல்லது வயிறு, குடல், சிறுநீர்ப்பை போன்ற பைகளை உருவாக்கும் ஓர் உள் உறுப்பு ஆகும். உடற்கூறியல் ஆய்வில், விசுகசு என்ற சொல் ஓர் உள் உறுப்பைக் குறிக்கிறது. விசுகெரா என்பது உள்ளுறுப்பின் பன்மை வடிவம்[2][3]. ஆகும். மனித உடலில் எழுபத்தொன்பது வகையான உறுப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன[4].
கட்டமைப்பு
தொகுதிசுக்கள்
தொகுஉயிரியலில், திசு என்பது செல்கள் மற்றும் முழுமையான உறுப்புக்கு இடையில் இயங்கும் ஒரு செல்லமைப்பு நிலையாகும். . ஒரு திசு என்பது ஒத்த செல்கள் மற்றும் அவற்றின் செல்வெளி அணி ஆகியவை ஒரே இடத்திலிருந்து உருவாகி ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்கின்றன. பல திசுக்களின் செயல்பாட்டுக் குழுவால் உறுப்புகள் உருவாகின்றன.
மனித மற்றும் விலங்கு திசுக்களின் ஆய்வு திசுவியல் என்றும் அதன் நோய் தொடர்பான பிரிவு திசு நோயியல் எனவும் அழைக்கப்படுகிறது . தாவரங்களைப் பொறுத்தவரையில் இத்துறை தாவர உருவவியல் என்று அழைக்கப்படுகிறது. திசுக்களைப் படிப்பதற்கான பாரம்பரிய கருவிகளில் பாரஃபின் தொகுதி எனப்படும் பல்சர்க்கரையாலான[5][6]) வெண்மெழுகுப் பாகு பயன்படுத்தப்படுகிறது, உட்பொதிக்கப்பட்டு பின்னர் பிரிக்கப்பட்ட திசு திசுவியல் கறை மற்றும் ஒளியியல் நுண்ணோக்கி ஆகியவை இதில் அடங்கும் . கடந்த இரண்டு தசாப்தங்களில், எலக்ட்ரான் நுண்ணோக்கியும் , ஒளிரும் நுண்ணோக்கி நுட்பம் மற்றும் உறைந்த திசு பிரிவுகளின் பயன்பாடு ஆகியவற்றின் முன்னேற்றங்கள் திசுக்களில் காணக்கூடிய விவரங்களை மேம்படுத்தியுள்ளன. இந்த கருவிகள் மூலம், திசுக்களின் பாரம்பரிய தோற்றங்கள் உடல்நலம் மற்றும் நோய்கள் ஆராயப்படுகின்றன. இது மருத்துவ நோயறிதல் மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றின் கணிசமான புதுப்பிப்புக்கு மிகவும் உதவுகிறது.
முக்கிய உள்ளுறுப்புகள்
தொகுஉறுப்பு மண்டலங்கள்
தொகு- குருதி மண்டலம்
- நரம்புத் தொகுதி
- எலும்பு மண்டலம்
- தசை மண்டலம்
- சமிபாடு மண்டலம்
- இனப்பெருக்க மண்டலம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Botany/Plant structure - Wikibooks, open books for an open world". en.wikibooks.org (in ஆங்கிலம்).
- ↑ "Viscus - Definition". Merriam-Webster Online Dictionary. பார்க்கப்பட்ட நாள் 14 December 2009.
- ↑ "Viscera". MeSH. பார்க்கப்பட்ட நாள் 14 December 2009.
- ↑ "New organ named in digestive system" (in en-GB). BBC News. 2017. https://www.bbc.com/news/health-38506708.
- ↑ Lišková, Desana; Kollárová, Karin; Martinka, Michal; Sterckeman, Thibault; Lux, Alexander; Zelko, Ivan (2012-07-01). "An easy method for cutting and fluorescent staining of thin roots" (in en). Annals of Botany 110 (2): 475–478. doi:10.1093/aob/mcs046. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-7364. பப்மெட்:22419758.
- ↑ "Rapid Preparation of Transverse Sections of Plant Roots | Schiefelbein Lab" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.