இனப்பெருக்கத் தொகுதி

இனப்பெருக்கத் தொகுதி (Reproductive system) என்பது அனைத்து உயிரினங்களும் தங்களது உயிரினத் தொகையினை தற்காத்துக் கொள்வதற்காக ஈடுபடும் பாலியல் இனப்பெருக்க செயல்பாட்டிற்கு உதவும் உறுப்புக்களின் தொகுதியாகும். நீர்மங்கள், இயக்குநீர்கள், ஃபெரமோன்கள் போன்ற பல உயிரற்றப் பொருட்களும் பாலியல் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய அங்கங்களாக உள்ளன.[1] பெரும்பாலான உடல் தொகுதிகள் போலன்றி, பாலினத்தால் வேறுபட்ட இனங்களின் பாலுறுப்புக்கள் பெரிதும் மாறுபட்டுள்ளன. இந்த வேறுபாடுகளால் இரு தனிநபர்களின் மரபார்ந்த பொருட்கூடுகையால் சந்ததியினரின் மரபணு தகுதி மேம்படுகின்றது.[2] எளிய உயிரினங்களாகிய பாக்டீரியங்கள் பாலில்லா இனப்பெருக்கத்தின் மூலம் ஒத்த மரபணுப்பண்புடைய உயிரினங்களைத் தோற்றுவிக்கின்றன.

இனப்பெருக்கத் தொகுதி
மனித ஆண் இனப்பெருக்கத் தொகுதி
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்systema reproductionis
TA98A09.0.00.000
TA23467
உடற்கூற்றியல்

கருக்குழாய்

தொகு

பாலூட்டிகளில் இனப்பெருக்க அமைப்பின் முக்கிய உறுப்புகளாக வெளிப்புற பிறப்புறுப்புகள் (ஆண்குறி மற்றும் பெண்குறி) காணப்படுகின்றன. இவை தவிர விந்தகம், அண்டம் உள்ளிட்ட பல உள்ளுறுப்புகளும் இவ்வமைப்பில் இடம்பெற்றுள்ளன. மனித இனப்பெருக்க மண்டலத்தில் நோய்கள் உண்டாவது மிகவும் பொதுவானதாகவும் பரவலாகவும் உள்ளது. குறிப்பாக இந்நோய்கள் தொடர்புள்ள பாலுறவால் பரவும் நோய்களாகும்[3]. பிற முதுகெலும்புள்ள விலங்குகளிடத்தில் பொதுவாக ஒத்த இனப்பெருக்க அமைப்புகள் உள்ளன, அவை பாலுறுப்புகள், குழல்கள் மற்றும் திறப்புகள் போன்றவைகளாகும். இருப்பினும், ஒவ்வொரு முதுகெலும்பி வகைகளிலும் உடல் ரீதியாகவும், இனப்பெருக்க உத்திகளிலும் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

முதுகெலும்புள்ளவை

தொகு

முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்தும் தங்கள் இனப்பெருக்க அமைப்புகளின் முக்கிய கூறுகளை பகிர்ந்து கொள்கின்றன. அவை அனைத்தும் பாலின உறுப்புகளைக் கொண்டுள்ளன. பெண்களில் இந்தப் பாலுறுப்புகள் உடலின் வெளிப்புறத்தில் ஒரு திறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவை கிளோவாகா எனப்படும் புழை அல்லது பெண்ணுறுப்பு என அழைக்கப்படுகின்றன.

மனிதர்களில்

தொகு

மனித இனப்பெருக்க முறை பொதுவாக உடலுறவு மூலம் உடலுக்குள் கருத்தரித்தல் மூலம் நிகழ்கிறது. இந்தச் செயல்பாட்டின் போது ஆணின் விந்து, ஆண்குறியின் மூலம் பெண்ணின் யோனிக்குள் செலுத்தப்படுகிறது. விந்து கருமுட்டையை நோக்கி நீந்திச்சென்று அதை கருவுறச் செய்கிறது. வெற்றிகரமான கருத்தரித்தல் நிகழ்ந்த பின்னர் கருமுட்டையானது பெண்ணின் கருப்பைக்குள் சுமார் ஒன்பது மாதங்களுக்கு வளர்ச்சியடைகிறது. இந்தச் வளர்ச்சி செயல்முறைக்கான காலத்தை மனிதர்கள் கர்ப்ப காலம் என்கிறார்கள். கர்பகாலத்தின் முடிவில் குழந்தை பிறக்கிறது. மனிதக்குழந்தைகள் நீண்ட காலத்திற்கு தனித்து செயல்படாமல் ஆதரவையும் பராமரிப்பையும் எதிர்நோக்கியே உள்ளன. குறிப்பாக இக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிக இன்றியமையாத உணவாக இருக்கிறது [4].

பெண் இனப்பெருக்க அமைப்பானது இரண்டு முக்கியச் செயல்பாடுகளை கொண்டுள்ளது முட்டைகளை உருவாக்குவது முதலாவது செயல்பாடாகும். பிறப்பு வரை குழந்தைகளை பாதுகாத்து பராமரிப்பது இரண்டாவது செயல்பாடு ஆகும். ஆண் இனப்பெருக்க அமைப்புக்கு விந்து உற்பத்தி என்ற ஒரே ஒரு செயல்பாடு மட்டுமே உள்ளது, மனிதர்களுக்கு மத்தியில் பாலியல் வேறுபாடுகள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு இனப்பெருக்க உறுப்புக்கும் உள்ள வேறுபாடுகளைத் தாண்டி, பொதுவாக இரண்டாம் நிலை பாலியல் பண்புகளிலும் இவ்வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆண் இனப்பெருக்க அமைப்பு உடலுக்கு வெளியேயும் இடுப்பு மண்டலத்தைச் சுற்றியும் பல உறுப்புகள் இணைந்த ஒரு தொடராக காணப்படுகிறது. ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் முதன்மையான பணி கருத்தரிப்பதற்கு அவசியமான விந்தணுக்களை உற்பத்தி செய்து வழங்குதலாகும்.

ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு மண்டலம் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. விந்து உற்பத்தி மற்றும் சேமிப்பு முதல்வகையாகும். விந்தணு உற்பத்தி விந்தகத்தில் நடைபெறுகிறது. வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் விதைப்பையில் இது அமைந்திருக்கிறது. முதிர்ச்சியடையாத விந்தணு வளர்ச்சி மற்றும் சேமிப்பிற்காக விந்தணுமுதிர்ச்சிப்பைக்குச் செல்கிறது. விந்துப்பை, ஆண்மைச்சுரப்பி, விந்துநாளம் ஆகியவை உள்ளிட்ட சுரக்கும் திரவத்தை சுரக்கும் சுரப்பிகள் இரண்டாவது வகையாகும். கலவி மூலம் விந்தணுவை பெண்ணுக்குள் செலுத்த உதவும் ஆணுறுப்பு, சிறுநீர்ப்புறவழி, விந்துநாளம், கூப்பர் சுரப்பி போன்றவை மூன்றாவது வகையாகும்.

பெரிய, வலிமையான தசைநார்கள் கட்டையான குரல், முகம் மற்றும் உடலில் முடி, பரந்த தோள்கள் மற்றும் ஆடம் ஆப்பிளின் வளர்ச்சி போன்றவை ஆண்களின் இரண்டாம் நிலை பாலினப் பண்புகளாகும். முக்கியமான பாலியல் இயக்குநீரான ஆண்ட்ரோசன் மற்றும் குறிப்பாக டெசுடோசுடிரோன் ஆகியன ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் சுரக்கப்படும் ஆர்மோன்கள் ஆகும்.

விந்தணு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆர்மோனை விதைப்பை சுரக்கிறது. இந்த ஆர்மோன் முகத்தில் முடி மற்றும் கரடுமுரடான் கட்டைக் குரல் போன்ற ஆண்களின் உடல் தோற்ற வளர்ச்சிக்கும் பொறுப்பாகிறது.

பெண்

தொகு

மனிதர்களின் பெண் இனப்பெருக்கத் தொகுதியானது உடலுக்கு உட்புறமாகவும் இடுப்புப் பகுதியைச் சுற்றியும் பல்வேறு உறுப்புகள் இணைந்து உருவாகும் ஒரு மண்டலமாகும். இனப்பெருக்கச் செயல்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் முக்கியமான பகுதி இதுவேயாகும்.

பெண் இனப்பெருக்க மண்டலம் மூன்று முதன்மை பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. யோனி, யோனியின் திறப்பு, கருப்பை போன்றவை இம்மூன்று பகுதிகளாகும். சுரப்பு நீர்களை சுரப்பதும், கருமுட்டையை உருவாக்குவதும் கருப்பையின் செயல்களாகும். பெண்களின் மார்பகங்களை இனப்பெருக்க மண்டலத்தில் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

யோனியை கருப்பையுடன் கருப்பை வாய் இணைக்கிறது; கருப்பையும் சூலகமும் பாலோப்பியன் குழாய்களால் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் சூலகம் வெளிப்படுத்தும் சூல்முட்டை பாலோப்பியன் குழாய்கள் வழியாக கருப்பையை அடைகிறது

இவ்வாறு செல்லும் போது சூல்முட்டை விந்தணுவை சந்திக்க நேர்ந்தால் விந்தணு அதனுள் புகுந்து முட்டையுடன் கலப்பதால் கருவுறுதல் நிகழ்கிறது. பொதுவாக கருவுறுதல் கருக்குழல்களில் நிகழுமெனினும் கருப்பையிலும் நிகழ வாய்ப்புள்ளது. கருவுறுதலால் உருவான கருவணு கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்கிறது. இங்கு கருவணு முளைய விருத்தி மற்றும் உருவத் தோற்றத்திற்கான செயல்பாடுகளை துவக்குகிறது. வெளியுலகில் பிழைக்குமளவு வளர்ச்சியடைந்த பின்னர் கருப்பை வாய் விரிந்தும் கருப்பை சுருங்கியும் முதிர்கரு யோனி வழியாக வெளியேற்றப்படுகிறது.

உடற்கூற்றளவில் பெண்ணாகப் பிறக்கும்போதே உருவாக்கப்படும் சூல்முட்டைகள் விந்தணுக்களை விட பெரியதாக உள்ளன. சூலகம் ஏறத்தாழ ஒவ்வொரு மாதமும் ஒரு சூல் முட்டையை முதிர வைத்து தன்னுடன் இணைந்துள்ள பாலோப்பியன் குழாய் மூலமாக கருப்பைக்கு அனுப்புகிறது. அங்கு கருக்கட்டவில்லை என்றால் அந்த முட்டை மாதவிடாய் காலத்தில் வெளியேற்றப்படுகிறது.

பிற பாலூட்டிகள்

தொகு

பெரும்பாலான பாலூட்டி இனப்பெருக்க அமைப்புகள் ஒரேமாதிரியாகக் காணப்படுகின்றன. இருப்பினும் மனிதர்களல்லாத மற்ற பாலூட்டிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக பெரும்பாலான ஆண் பாலூட்டிகள் ஒரு ஆண்குறியைக் கொண்டுள்ளன, விறைப்புத்தன்மை அடையும்வரை இது உட்புறமாக சேமித்து வைக்கப்படுகிறது, பெரும்பாலான பாலூட்டி இனங்களில் ஆண் இனம் மனிதர்கள் போல தொடர்ந்து பாலியல் ரீதியாக கருவுறச் செய்யும் திறனை பெற்றிருக்கவில்லை. மனிதர்களைப் போலவே, பாலூட்டிகளின் பெரும்பாலான குழுக்களில் ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அடையும் வரை அது உட்புறத்தில் சேமிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சில பாலூட்டிகளில் உடலின் உட்புற சுவரிலும் யானைகள் போன்ற பாலூட்டி குழுக்களில், அவை உடலின் உட்புறத்தில் சிறுநீரகங்களுக்கு அருகிலும் சேமிக்கப்படுகின்றன [5].

வயிற்றுப்பகுதியில் குட்டியைப் பேண பையைப் பெற்றுள்ள பெண் உயிரினங்களுக்கு இரண்டு புணர்புழைகள் உள்ளன. இவை இரண்டும் வெளிப்புறத்தில் ஒரு புழை வழியாகத் திறக்கின்றன. ஆனால் கருப்பையில் இரண்டு வேறுபட்ட பகுதிகளாக இவை உள்ளன. இவ்வினத்தைச் சேர்ந்த ஆண் உயிரினங்களும் இரண்டு பாலுறுப்புகளைப் பெற்றுள்ளன.

பொதுவாக, பையுள்ள இத்தகைய உயிரினங்களின் குட்டிகள் வெளிப்புற பைகளில் வளர்க்கின்றன, புதிதாகப் பிறந்த இளம் உயிரினங்கள் இப்பையுடன் தங்களை இணைத்துக் கொண்டு வளர்கின்றன. மேலும் பையுள்ள உயிரினங்களில் தனித்தன்மையான ஒரு விரைப்பையும் காணப்படுகிறது [6].

கருப்பையின் இடத்தில் சில முதுகெலும்பி குழுக்களில் நேரடியாக ஒரு புழை நீள்வட்டத்தைக் கொண்டுள்ளன, இதுவே சிறுநீர் மற்றும் மலம் முதலான கழிவுகள் வெளியேற்றத்துக்கு உதவும் துளை ஆகும். முட்டையீனும் பாலூட்டிகள் சிலவற்றிலும் இதேபோல கருப்பையும் பெண்ணுறுப்பும் காணப்படாமல் உள்ளன. இத்தகைய இனப்பெருக்க மண்டலம் ஊர்வனவற்றின் இனப்பெருக்க மண்டலத்தை போல இருப்பதாகக் கருதப்படுகிறது.

நாய்கள்

தொகு

வீட்டு வளர்ப்பு நாய்களின் இனத்தில் ஆண், பெண் நாய்களின் பாலின முதிர்ச்சி (பருவமடைதல்) 6 முதல் 12 மாதங்கள் வரையிலான காலத்தில் தோன்றுகிறது. இருப்பினும் சில பெரிய கலப்பின இனங்களுக்கு இரண்டு வயது வரையிலும் கூட தாமதமாகலாம் [7]. முதல் ஈசுட்ரோசு சுழற்சி முடிந்தவுடனேயே பெண்நாய் கர்ப்பம் அடைய தயாராகிவிடுகிறது. ஆனால் இரண்டாம் சுழற்சிக்குப் பின்னரான இனப்பெருக்கமே பரிந்துரைக்கப்படுகிறது [8]. மற்ற வளர்ப்பு உயிரினங்களைப் போலவே, நாய் வளர்ப்பிலும் முன்னோடி நாய்களைக் காட்டிலும் உயர்ந்த இயல்பூக்கத்திற்கு முன்னதாகவும் அடிக்கடியும் இனப்பெருக்கச் சுழற்சிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன [9].

குதிரைகள்

தொகு

பிறப்பு, கருவுறு காலம், பாலூட்டுதல், ஈசுட்ரோசு சுழற்சி மற்றும் இனச்சேர்க்கை நடத்தை போன்ற செயல்பாடுகளுக்கு குதிரைகளின் இனப்பெருக்க தொகுதியே காரணமாகிறது. ஆண் குதிரையின் இனப்பெருக்கத் தொகுப்பு அதன் பாலியல் நடத்தை மற்றும் இரண்டாம் பாலினப் பண்புகளுக்கு காரணமாகிறது. முட்டையிட, விந்து, கழிவுகள் வெளியேற ஆண் மற்றும் பெண் பறவைகள் இரண்டுக்கும் கிளோவாகா எனப்படும் புழை காணப்படுகிறது. இரண்டு பறவைகளின் கிளோவாகாவின் இதழ்களை ஒன்றாக அழுத்துவதன் மூலம் உடலுறவு நிகழ்கிறது. இவ்விதழ்கள் பாலூட்டிகளின் ஆணுறுப்பு போல செயலாற்றுகிறது. பெண் பறவை முட்டையிடுகிறது. இம்முட்டை பெண் உடலை விட்டு வெளியேறிய பிறகு இளம் கருவாக தொடர்ந்து வளர்ச்சியடைகிறது. பெரும்பாலான முதுகெலும்பி பெண் பறவைகள் பொதுவாக ஒற் அண்டத்தையும் ஒர் அண்டக்குழாயையும் மட்டுமே கொண்டுள்ளன. பறவைகளும் தங்கள் இளம் உயிரினங்களை சில காலத்திற்கு உணவூட்டி பராமரிக்கின்றன[10].

மீன்

தொகு

மீன் இனத்தின் இனப்பெருக்க தொகுப்பிலும் பாலின உறுப்புகள் உள்ளன. பெரும்பாலான இனங்களில் இவை ஒரே மாதிரியாகவும் ஒரே அளவு கொண்டவையாகவும் காணப்படுகின்றன. மீன்களில் இரண்டாம்நிலை பாலுறுப்புகளும் இருக்கலாம். பிறப்புறுப்பு சில மீன்களின் பின்புறத்தில் ஒரு சிறிய, குழாய் ஆகும், இதில் இருந்து விந்தணு அல்லது முட்டை வெளியிடப்படுகிறது; ஒரு மீனின் பாலியல் பெரும்பாலும் அதன் பாப்பிலியா குழாயின் வடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

பூஞ்சைகள்

தொகு

பூஞ்சைகள் இலிங்க முறை மற்றும் இலிங்கமில் முறையில் இனம்பெருக்கம் செய்கின்றன[11]. அனேகமானவை இரு முறைகளையும் மேற்கொண்டாலும் சில இனங்கள் இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை.

பதிய வித்திகள் மூலம் பிரதானமாக இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இதனைத் தவிர துண்டுபடல் இழையுருவான பூஞ்சைகளில் நிகழும். அதாவது புற விசைகளால் பூஞ்சையின் வலை சேதமுறும் போது, ஒவ்வொரு துண்டமும் புதிய பூஞ்சையாக வளர்ச்சியடையும் ஆற்றலுடையது. மதுவம் போன்ற தனிக்கல பூஞ்சைகளில் அரும்புதல் மூலம் இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழும். தனியே இலிங்கமில் இனப்பெருக்கத்தை மாத்திரம் காட்டும் பூஞ்சைகள் டியூட்டெரோமைக்கோட்டா எனும் பூஞ்சைக் கூட்டமாக வகைப்படுத்தப்படுகின்றன. அனேகமான பூஞ்சைகள் ஒடுக்கற்பிரிவுடன் கூடிய இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. வெவ்வேறு பூஞ்சைக் கூட்டங்களில் வெவ்வேறு நிலை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. Introduction to the Reproductive System., Epidemiology and End Results (SEER) Program. பரணிடப்பட்டது 2007-10-24 at the வந்தவழி இயந்திரம்
  2. Reproductive System 2001 பரணிடப்பட்டது 2006-10-22 at the வந்தவழி இயந்திரம் Body Guide powered by Adam
  3. STD's Today பரணிடப்பட்டது 2014-10-25 at the வந்தவழி இயந்திரம் National Prevention Network, Center for Disease Control, United States Government, retrieving 2007
  4. Sexual Reproduction in Humans. பரணிடப்பட்டது 2018-02-17 at the வந்தவழி இயந்திரம் 2006. John W. Kimball. Kimball's Biology Pages, and online textbook.
  5. "The evolution of the scrotum and testicular descent in mammals: a phylogenetic view". J. Theor. Biol. 196 (1): 61–72. January 1999. doi:10.1006/jtbi.1998.0821. பப்மெட்:9892556. 
  6. Renfree, Marilyn; Tyndale-Biscoe, C. H. (1987). Reproductive physiology of marsupials. Cambridge, UK: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-33792-5.
  7. "Reproductive performance". ilri. Archived from the original on 1 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. 5361/the_normal_canine.htm[தொடர்பிழந்த இணைப்பு], Dr B Eilts, Louisiana State University School of Veterinary Medicine, "Normal Canine Reproduction" retrieved 10 April 2013
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-12. பார்க்கப்பட்ட நாள் 2017-06-04.
  10. Ritchison. BIO 554/754 Ornithology. Eastern Kentucky University.
  11. Kirk et al., p. 633.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனப்பெருக்கத்_தொகுதி&oldid=3927723" இலிருந்து மீள்விக்கப்பட்டது