உவமான சங்கிரக நூல்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொல்காப்பியத்தில் உவம இயல் என ஒரு பகுதி உண்டு.
பெண்ணோடு தொடர்புடைய உவமைகளை மட்டும் விளக்கும் இலக்கண நூல்கள் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்தன.
இந்த நூல்களை உவமான சங்கிரகம் என வழங்கினர்.
உவமான சங்கிரக நூல்கள் எனக் கொள்ளத்தக்க இலக்கண நூல்கள் தமிழில் நான்கு உள்ளன. பொருள்களை உவமையால் விளக்கும் வழக்கம் எல்லா மொழிகளிலும் உண்டு. தொல்காப்பியம்: உவம இயல் தமிழில் தொன்றுதொட்டு நிலவிவரும் பண்டைய மரபினை எடுத்து விளக்குகிறது. பின்னர் அணி இலக்கணம் பற்றி மட்டும் கூறும் சில நூல்கள் தோன்றின. அந்த அணி இலக்கணங்களில் உவமை அணி பற்றி மட்டும் கூறும் நூல்கள் உவமான சங்கிரகம் என்னும் பெயரில் தோன்றின.
மாந்தரின் உறுப்புகள் ஒவ்வொன்றையும் இன்ன உவமையால் கூறுவது மரபு என இந்த நூல்கள் சுட்டுகின்றன. சில உறுப்புகளைத் தலைமுடியில் தொடங்கி பாதத்தில் முடிக்கின்றன. இந்த முறைமையைக் ‘கேசாதிபாதம்’ என்பர். சில நூல்கள் பாதத்தில் தொடங்கித் தலைமுடியில் முடிக்கின்றன. இந்த முறைமையைப் ‘பாதாதிகேசம்’ என்பர்.
ஆண்களின் கண்ணுக்குத் தாமரை மலரையும், பெண்களின் கண்ணுக்குக் குவளை மலரையும் உவமையாகக் காட்டும் மரபு போன்ற நுட்பங்களை இந்த நூல்கள் தெரியப்படுத்துகின்றன. இவை 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றி வளர்ந்த இலக்கண நெறிகள். இவற்றில் வடநூல் கருத்துகளும் இழையோடியுள்ளன.
எண் | நூல் | காலம் | யாப்பு | பாடல் | பொருள் | பிற |
---|---|---|---|---|---|---|
1 | உவமான சங்கிரகம் | 15-ஆம் நூற்றாண்டு | நூற்பா | 31 (117 அடி) | பாதாதிகேசம் | - |
2 | இரத்தினச் சுருக்கம் | 16-ஆம் நூற்றாண்டு | கட்டளைக் கலித்துறை, வெண்பா, விருத்தம் | 71 | சேசாதிபாதம் | புகழேந்தி பாடியது, பிற பொருள்களும் உள்ளன |
3 | உவமான சங்கிரகம் | 17-ஆம் நூற்றாண்டு | வெண்பா அந்தாதி | 16 | கேசாதிபாதம் | குருகை திருமேனி இரத்தின கவிராயர் இதன் ஆசிரியர் |
4 | உவமான சங்கிரகம் | 18-ஆம் நூற்றாண்டு | விருத்தம் | 37 | பாதாதிகேசம் | 37 பாடல்களில் உவமான சங்கிரகம், பிறவற்றில் பிற பொருள். |
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005