உஷா அனந்தசுப்ரமணியன்

உஷா அனந்தசுப்ரமணியன், (பிறப்பு 1 அக்டோபர் 1958), இந்தியாவில் மகளிருக்கென தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் பாரதிய மஹிளா வங்கியின் முதல் தலைவர்-நிர்வாக இயக்குநராவார்.[1][2]

கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை

தொகு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், மும்பை பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய கலாச்சாரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 1982-ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த உஷா அனந்தசுப்ரமணியன், பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். பாரதிய மஹிளா வங்கியின் தலைவர் பதவியை ஏற்கும் முன் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Smt. Usha Ananthasubramanian" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2013. {{cite web}}: Unknown parameter |Type= ignored (|type= suggested) (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "மகளிர் வங்கியின் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன்". dinamani. 13 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_அனந்தசுப்ரமணியன்&oldid=3904997" இலிருந்து மீள்விக்கப்பட்டது