உஷா சௌமர் (Usha Chaumar) (பிறப்பு 1978) [1]இவர் இந்திய மாநிலமான ராஜஸ்தானின் அல்வார் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகராவார். இவர் இலாப நோக்கற்ற பிரிவான 'சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பின்' தலைவராகவும் இருக்கிறார். [2] 2020 ஆம் ஆண்டில், சமூகப் பணித் துறையில், குறிப்பாக மனித ஆற்றலால் கழிநிலையை வெளியேற்றுவதற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ கௌரவத்தை பெற்றார். [3][4][5]

வாழ்க்கை

தொகு

ராஜஸ்தானின் பரத்பூருக்கு அருகிலுள்ள தீக் என்ற ஊரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த உஷா சௌமர் தனது தாயுடன் சேர்ந்து தனது 7 வயதில் கையால் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியைத் தொடங்கினார். இவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுகளை அகற்றினார். சௌமர் தனது 10 வயதில் திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது 14 வயதில் தனது கணவரின் குடும்பத்துடன் அல்வாருக்கு குடிபெயர்ந்தார். 2002 ஆம் ஆண்டில், தனது 24 வயதில், 'சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பின் நிறுவனர் பிந்தேசுவர் பதக், இவரது கிராமத்திற்குச் சென்றபோது, க்ழிவுகளை அகற்றும் தொழிலார்களுடன் பேசினார். அவரது வழிகாட்டுதலின் கீழ், ஒரு மாற்று நிலையான வாழ்க்கை முறைக்காக, நை திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உஷா சேர்ந்தார். தற்போது, சுலப் சரவதேச அமைப்பின் இலாப நோக்கற்ற பிரிவான சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பின் (சிசோ) தலைவராக உள்ளார். 2020 ஆம் ஆண்டில், சமூகப் பணித் துறையில், குறிப்பாக மனிதக் கழிவுகளை கையால் அகற்றும் தொழிலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ கௌரவத்தைப் பெற்றார். [6]

குறிப்புகள்

தொகு
  1. "Manual Scavenger at 7, Padma Shri Awardee at 42: Usha Chaumar Is a Beacon of Hope". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-02-01. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  2. Asian News International (2020-01-27). "From manual scavenger to Padma Shri awardee: Usha Chaumar shares her inspirational journey - India News". India Today. பார்க்கப்பட்ட நாள் 2020-12-28.
  3. "कौन हैं सिर पर मैला ढोने वाली ऊषा चोमर? जिन्हें मिलेगा पद्मश्री सम्मान" (in en). aajtak. 26 January 2020. https://aajtak.intoday.in/story/republic-day-2020-usha-chaumar-to-get-padma-shri-award-know-her-entire-history-1-1158167.html. 
  4. "पद्मश्री से सम्‍मानित होंगी कभी मैला ढोने वाली ऊषा चोमर" (in hi) இம் மூலத்தில் இருந்து 2020-04-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200411232337/https://khabartak.com/awards/usha-chaumar/. 
  5. "मैला ढोने का काम छोड़कर स्वच्छता के लिए प्रेरित करने वाली ऊषा समेत राजस्थान के 5 लोगों को पद्मश्री दिया जाएगा" (in hi). https://www.bhaskar.com/rajasthan/jaipur/news/padma-shri-winner-from-rajasthan-2020-126603604.html. 
  6. "The Manual Scavenger who Won Padma Shri: Usha Chaumar". in.makers.yahoo.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஷா_சௌமர்&oldid=3235758" இலிருந்து மீள்விக்கப்பட்டது